Posts

அன்பின் வழியது

Image
தொலை பேசி, இன்டர்நெட் இல்லாத அமைதியான வாழ்க்கை, தொலைக்காட்சி இல்லாத மாலை நேரம், குடும்பத்தினரோடு மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்த நாட்கள் என்றெல்லாம் Youtube- ல் வலம் வரும் AI வீடியோக்களை சமீப காலமாக  நாம் அனைவருமே கடந்து வந்திருப்போம் உங்களுக்கு அதே போன்ற அனுபவத்தை எழுத்தின் மூலம் தரும் புத்தகம் தான் "அன்பின் வழியது". எளியள் என்ற புனைபெயருக்கு ஏற்றார் போல மிக எளிய நடையில் விறுவிறுப்பு சேர்க்கிறேன் என்ற பெயரில் கற்பனைகளை கலக்காமல் தன் மனதில் உள்ளவற்றை அருகில் அமர்ந்து கேட்கும் தோழிக்கு கூறும் தோரணையில் திருமதி ராதா பரசுராம் அவர்கள் எழுதிய புத்தகத்தை அண்மையில் வாசிக்கும் வாய்ப்பு அமைந்ததை நினைத்து மகிழ்கிறேன், ஏன்?! வாருங்கள் கூறுகிறேன்! புத்தக ஆசிரியர் தான் பிறந்த வருடத்திலிருந்து புத்தகத்தை துவங்கி நம்மை சுதந்திர இந்திய தெருக்களுக்கு கையை பிடித்து அழைத்துச் செல்கிறார். மக்களின் வாழ்கை முறை, அக்காலத்து கட்டிடங்களின் அமைப்பு, வீதிகளில் பல்வேறு பொருட்களை கூவி விற்பவர்கள் எவ்வாறு சௌராஷ்ட்ர மொழியில் கூச்சமின்றி விற்றார்கள் என்றெல்லாம் கூறிக்கொண்டே வருகிறார் முக்கியமாக நம்மவர்கள் ரகசி...

பூரண உள்ளொளி கண்டடைதல்

Image
மகளிர் தினத்தன்று நம்மில் ஒருவரான திருமதி ராதா பரசுராம் அவர்கள் எழுதி பிரசுரித்த  "பூரண உள்ளொளி கண்டடைதல்" என்னும் குறும்புத்தகத்தை (20 பக்கங்கள் மட்டும்) வாசிக்கும் வாய்ப்பு அமைந்தது. முன்னுரையில் மனதை ஒருமைப்படுத்தும் முயற்சியில் தனக்கு ஏற்பட்ட மேம்பட்ட அனுபவத்தை பகிர துவங்கும் ஆசிரியர் கீத் மில்லர், மைக்கேல் ஏ சிங்கர் போன்ற ஆசிரியர்களின் படைப்புகளை கோடிட்டு காட்டி நம் ஆர்வத்தை தூண்டுகிறார். பின்வரும் பக்கங்களில் "தான் எவ்வாறு தியான முயற்சியை தொடங்கினேன், அதில் ஏற்பட்ட சவால்கள், பின் எவ்விதம் வேறு வேறு முறைகளை பின்பற்றி வெற்றி அடைந்தேன்" என்பதை விளக்கமாக சொல்லிக் கொண்டே வரும் ஆசிரியர் நடுநடுவே அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பல்வேறு  சவால்களையும்  எழுதியிருக்கிறார் முக்கியமாக " அனுதினம் சாதாரணமாக நிகழும் பல்வேறு செயல்கள் எவ்வாறு குழந்தைகளின் மனதை பாதிக்கிறது" என்று கூறியிருக்கும் உதாரணங்கள் மிக அருமை! தியான முறைகளைப் பற்றி எவ்வித அறிமுகமும் இல்லாத எனக்கு அவர் கூறும் வாழ்வியல் தொடர்பான தகவல்கள் சுவாரசியமாகவும் சுய அனுபவங்களோடு ஒப்பீடு செய்து கொள்ளவும...

பூரண உள்ளொளி கண்டடைதல் Book Review

Image
On Women's Day, I had the opportunity to read a short booklet (spanning just 20 pages) titled "Attaining Complete Inner Illumination," written and published by one of our own—Mrs. Radha Parasuram. In the preface, the author begins by sharing her own profound experiences while striving to focus her mind; she further piques our interest by highlighting the works of authors such as Keith Miller and Michael A. Singer. In the pages that follow, the author provides a detailed account of "how she embarked on her meditation journey, the challenges she encountered, and how she subsequently achieved success by adopting various different techniques." Interspersed throughout this narrative, she also touches upon the diverse challenges we face in our daily lives—most notably, the examples she cites regarding "how various ordinary, everyday occurrences impact the minds of children" are truly excellent! For someone like me—who possessed absolutely no prior introducti...

இரண்டாம் படை வீடு - திருச்செந்தூர்

Image
சூரபத்மனை முருகன் வென்ற இடமாதலால் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் "ஜெயந்திபுரம்" "வீரவாகு பட்டினம்" என்றும் அலைகள் சீராக கரையை வந்து மோதுவதால் "சீரலைவாய்" என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. தென்னாட்டு முருகன் கோயில்களிலேயே மிகப்பெரியதான செந்திலம்பதி கடலை அடுத்த சந்தனமலையில் உருவாக்கப்பட்டது. "கந்தமாதன பர்வதம்" என்றும் இதைச் சொல்வார்கள். சிவனை நோக்கி தவமிருக்கும் கோலம் என்பதால் செந்தூரனுக்கு கையில் வேல் இல்லை எனினும் சில நாட்களில் வேல் சாத்துவதுண்டு. இந்த முருகனின் பாதத்திலிருந்து பெறும் பத்ர விபூதி விஷேஷம் வாய்ந்தது இதை உட்கொண்ட விஷ்வாமித்ரரின் வியாதி குணமடைந்த விவரம் புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. முகத்தில் குறுஞ்சிரிப்பு தவழ நிற்கும் இந்த பாலசுப்ரமணியன் தான் இதே தலத்தில் ஒரு மாபெரும் சேனையை திரட்டி யுத்தமும் செய்திருக்கிறான். சூரபத்மனை அழிப்பதற்காக புறப்பட்ட முருகனை வழிமறித்த தாரகாசுரனையும் அவனுக்கு துணை நின்ற கிரௌஞ்ச மலையையும் அழித்துவிட்டு முருகன் தன் படையோடு தேவசேனாதிபதியாக திருச்செந்தூர் வந்து தங்கியதாக புராணங்கள் கூறுகின்றன. இங்கிருந்...

அறுபடை வீடு கொண்ட திருமுருகா!

Image
தமிழ் கடவுள் முருகனுக்கு உகந்த மாதங்களில் ஒன்று தை மாதம். இம்மாதத்தில் அனைத்து முருகத்தலங்களிலும் தைப்பூசத் திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது இந்நன்னாளில் பலரும்  நன்கறிந்த ஆறு படை வீடுகளைப் பற்றி பரவலாக அறியப்படாத தகவல்களை தெரிந்து கொள்வோமா?! ஆறுபடை வீடுகள்  முதல் படை வீடு  - திருப்பரங்குன்றம்  இரண்டாம்  படை வீடு - திருச்செந்தூர்  மூன்றாம் படை வீடு - பழனி  நான்காம்  படை வீடு - சுவாமி மலை  ஐந்தாம் படை வீடு - திருத்தணி  ஆறாம் படை வீடு - பழமுதிர் சோலை  முதல் படை வீடு  - திருப்பரங்குன்றம்  திருமாலின் இரு கண்களில் இருந்து தோன்றிய அமிர்தவல்லி சுந்தரவல்லி என்ற இரு பெண்கள் முருகனின் அழகில் மயங்கி அவனையே மணமுடிக்க வேண்டுமென்று தவமிருந்தனர் அவர்களுள் அமிர்தவல்லி தேவேந்திரனின் மகளாக தேவசேனை என்ற பெயரில் பிறந்தாள். சூரபத்மனை வென்று தேவர்கள் சேனைக்கு அதிபதியான முருகன் தேவசேனைக்கும் அதிபதியாகி பங்குனி உத்திரத்தன்று  மணம் கொண்ட தலம் திருப்பரங்குன்றம். அங்குள்ள கோவில் தேவதச்சனால் கட்டப்பட்டதாக கந்தபுராணம் கூறுகிறது. குடவறை...

கூடாரவல்லி திருநாள்

Image
மார்கழி மாதம் - மாதவன் நாமம் ஒலிக்காத இடங்கள் உண்டோ?!  பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் ரங்கநாதனை நினைத்து ஆண்டாள் " திருப்பாவை " பாடியதும் இம்மாதத்தில் தான். பன்னிரு ஆழ்வார்களில் ஓரே ஒரு பெண் ஆழ்வார் என்ற புகழையும் பெருமையையும் பெற்ற கோதை நாச்சியார் ஸ்ரீ வில்லிபுத்தூர் சன்னதியின் தோட்டத்தில் ஆடி மாத பூர நட்சத்திரத்தில்  பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டார். சிறு வயது முதலே கண்ணனிடம் தீராப் பற்று கொண்ட கோதை, பெருமாள் அணிய வேண்டிய மலர் மாலையை தான் அணிந்து அவருக்களித்து "சூடிக்கொடுத்த சுடர் கொடி " ஆனாள். தன்னுடைய இள வயதிலேயே ஸ்ரீனிவாசனை நினைத்து பாசுரங்கள் பாடத் துவங்கினார் கோதை. மார்கழி மாதத்தில் தினமும் ஓர் பாசுரம் என்று அவர் பாடிய முப்பது பாசுரங்கள் "திருப்பாவை " எனப்படுகிறது. மார்கழி மாதம் 27ம் நாள் "கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா..." என்னும் பாசுரத்தைப் பாடினார்.  அன்று இரவு தனக்கும் ரங்கநாதருக்கு திருமணம் நடப்பது போன்ற கனவினைக் கண்டார். தனது கனவு நனவாகும் தருணத்தை எண்ணிக் காத்திருந்தார். காலங்கள் கடந்தன. பெரியாழ்வார் தன் ம...

ராமனின் சௌந்தர்யமும் தண்டாபூபிகா நியாயமும்

Image
உபன்யாசகர் ஒருவர் வால்மீகியும் கம்பரும் ராமனின் அழகை எவ்வாறெல்லாம் வர்ணித்து எழுதியிருக்கிறார்கள் என்று உபன்யாசம் செய்து கொண்டிருந்தார். அவனின் திருவழகைக் கண்டு எவ்வாறு ஆண்களெல்லாம் சொக்கி விழுந்தனர் என்று கூறிய அவரிடம் "என்ன சுவாமி ஆண்கள் மட்டும் தான் அவன் அழகில் மயங்கினரா?! பெண்கள் மயங்கவில்லையா?!" என்று ஒருவர் கேட்க அதற்கு உபாசகர் "அது தண்டாபூபிகா நியாயேன சித்தமல்லவா" என்று கூறிவிட்டார். கேள்வி கேட்டவருக்கு எதுவும் புரியவில்லை. நமக்கும் தானே?! ஏகாதேசியன்று விரதம் இருக்கும் அனைவர் வீட்டிலும் சமைக்கப்படும் ஒரே பதார்த்தம் "உப்புமா". ஏன் அவ்வாறு என்பதற்கு ஒரு கதை. ருக்மாங்கதன் என்னும் அரசன் ஏகாதேசி திதியன்று தவறாமல் விரதம் இருந்து வைகுண்ட ப்ராப்தி அடைந்தான்.  விரதம் இருக்கும் அனைவருக்கும் அவ்வரத்தை அளிக்குமாறு திருமாலிடம் வேண்டிக்கொண்டான் இதனால் பூலோகத்தில் பாப தேவதைகளுக்கே இடமில்லாமல் போய் விட்டது. பிரம்மாவிடம் சென்று முறையிட்ட தேவதைகளிடம் "முழு அரிசியில் சென்று ஒளிந்து கொள்ளுங்கள்" ஏகதேசியன்று முழு அரிசியை உட்கொள்ளும் அனைவரையும் பிடித்துக் கொள் ...

தசள்

பெரும்பாலான சௌராஷ்டிரா குடும்பங்களில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில்  ஏழுமலையானை வணங்கி அசைவ உணவுகளை விலக்கி,  விரதம் கடைபிடிக்கப்படுகின்றது. அதே மாதத்தில்   ஏதேனும் ஒரு  சனிக்கிழமையில் ...கோவிந்தா ...கோவிந்தா என்ற நாமத்தை ஒரு சேர எழுப்பி அவன் பெயரில்   வழங்கப்படும் அன்னதானமே "தசள் " என்ற பெயரால் அறியப்படுகிறது. "தசள்" எப்போது எந்த வருடத்தில் ஆரம்பிக்கப்பட்டது என்று பெரியவர்களிடம் (70 வயது ) கேட்டபோது " இது தொன்று தொட்டு வரும் வழக்கம்" என்றும் தங்களின் மூதாதையர் காலங்களிலும் (1800-களில்)  தசல்  இருந்ததாக கூறப்பட்டது . ஒரு சிலர் குடும்ப செழுமைக்காக பரந்தாமனை வேண்டி  புதிதாக துவங்கும் பழக்கமும் உண்டு என்றும்  கூறுகின்றனர்.  மாதம் மும்மாரி பொழிந்த பண்டைய காலத்தில்  ஆவணி புரட்டாசி மாதங்களில்  மக்கள் மழை வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளாகி வந்தனர். மழை நீரால் சூழப்பட்ட நிலங்களில் விவசாயம் தடைபட்டதால் வயலில்  கூலி வேலை செய்யும் விவசாயிகளும் இன்ன பிற கூலி வேலை செய்பவர்களும் உண்பதிற்க...

The Story Of Krishna

  In the earthly realm, the number of demons who were kings in name only had increased so much that the Earth Goddess, unable to bear the burden, went to Brahma to plead her case. Taking her with him, Brahma, surrounded by the gods and accompanied by Shiva, went to see Vishnu, the resident of the milky ocean. A divine, disembodied voice resounded there. Hearing it, Brahma told the gods, "Lord Srinivasa is already aware of the Earth Goddess's sorrow. Therefore, he is going to incarnate as a human in the Yadu dynasty on Earth. So, the gods and celestial nymphs must also take birth on Earth and remain there for as long as the Lord roams the world to reduce its burden." The head of the Yadu clan, King Surasena, ruled that land from Mathura. His son, Vasudeva, set out on a chariot with his wife, Devaki. Kamsa, the son of Ugrasena and Devaki's older brother who loved her deeply, held the reins as the charioteer. Suddenly, a disembodied voice cried out, "O foolish one...

கண்ணன் வந்தான் எங்கள் கண்ணன் வந்தான்

Image
பூலோகத்தில் பெயரளவிலேயே அரசர்களாக விளங்கும்  அசுரர்களின் எண்ணிக்கை அதிகமானதால்  பாரம் தாள முடியாமல் பிரம்மனிடம் சென்று முறையிட்டாள் பூமாதேவி. அவளை அழைத்துக்கொண்டு தேவர்கள் புடைசூழ முக்கண்ணன் உடன் வர பாற்கடல் வாசனை காணச் சென்றார் பிரஜாபதி. அங்கோர் அசரீரி ஒலித்தது. அதைக்கேட்ட நான்முகன் தேவர்களை நோக்கி "பூமாதேவியின் மனக்கவலையை  ஸ்ரீனிவாசன் ஏற்கனவே அறிந்திருக்கிறார் ஆகவே அவர் பூலோகத்தில் யது குலத்தில் மானிடராக அவதரிக்க இருக்கிறார் ஆகவே தேவர்களும் தேவ ஸ்த்ரீகளும் பூலோகத்தில் பிறவியை அடைந்து, எவ்வளவு காலம் பகவான் பூபாரத்தை குறைக்க பூவுலகில் சஞ்சரிப்பாரோ அத்துனை காலம் நீங்களும் பூமியிலிருக்க வேண்டும் என்று கட்டளையிட்டார். யது குல தலைவனாகிய  சூரசேனர் மதுராவிலிருந்து அத்தேசத்தை ஆண்டு வந்தார். அவரின் புதல்வர் வசுதேவர் தாம் மணமுடித்த தேவகியுடன் தேரிலேறி புறப்பட்டான். உக்கிரசேனனின் புத்திரனும் தேவகியிடத்தில் அதீத அன்பு கொண்ட தமையனுமாகிய கம்சன் தேரோட்டியாக கடிவாளத்தை பிடிக்க "அறிவுகெட்டவனே எவளை வாகனத்தில் கொண்டு செல்கிறாயோ அவளுடைய எட்டாவது கர்ப்பம் உன்னைக் கொல்லப்போகிறது" என்று அ...

ஏரி காத்த ராமரும் பக்த ராமதாஸும்

Image
பக்த ராமதாஸ்  பத்ராச்சல ராமதாஸ் என்னும் பக்த ராமதாஸ் "கோபண்ணா" என்ற பெயரில்  இன்றைய தெலுங்கானா மாவட்டத்தின்  கம்மம்  என்னும் நகரில் 1600-களில் வாழ்ந்தவர். ராம பக்தனான இவர் ராகவ ராமனை போற்றி பல்வேறு பாடல்களை எழுதி கர்நாடக இசையில்  கீர்த்தனைகளாகப் பாடியுள்ளார். இளமை முதலே ராம பக்தனான ராம்தாஸ் இந்தியாவை முகலாய மன்னர்கள் ஆண்ட காலத்தில் அவர்களிடம் வரிவசூல் செய்யும் அதிகாரியாகப் பணியாற்றி உள்ளார். அச்சமயத்தில் பத்ராச்சல ராமர் கோவில் கட்டுமானப் பணிக்காக நிதி பற்றாக்குறை ஏற்பட தான் வசூல் செய்த வரிப்பணத்தை சற்றும் யோசிக்காமல் தந்து விட்டார். சில மாதங்களுக்குப் பின் இதை கண்டறிந்த அதிகாரிகள் ராமதாஸை சுல்தானின் முன் கொண்டு நிறுத்த அரசு நிதியை தவறாக கையாண்ட காரணத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார். 12 வருடங்கள் சிறையில் இருந்த காலத்தில் ராமனை எண்ணி பல்வேறு பாடல்களை பாடியதாக நம்பப்படுகிறது. பகவான் ராமரும் லக்ஷ்மணரும் அரசாங்கத்திற்கு தர வேண்டிய நிதியைத் தந்து சுல்தானிடமிருந்து அவரை விடுதலை செய்ததாக ஒரு கதையும் ஒளரங்கசீப்பின் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததால் அவர் விடுவிக்கப்பட்டார் என்...

Sri Ragavendhra - Sriman Natanagopala Nayaki Swamigal keerthanai

Rama Sri Raghu Nandhana Hari Ragavendra - 2 Nichu Raadhi Dhisumu Thorae Dhyanu Dhae Ragavendra Rama Sri Raghu Nandhana Hari Ragavendra  Nichu Raadhi Dhisumu Thorae Dhyanu Dhae Ragavendra Dasun Sengo Mogo Desthae Ghobbagu Ragavendra - 2 Thaiyai nhee jiyaeth me kogo hovu yaet Ragavendra thu Thaiyai nhee jiyaeth me kogo hovu yaet Ragavendra Maai Bhaab Guru dhev aski thus mogo Ragavendra - 2 Mi Pajae varam mogo therae Sri hari Ragavendra Maai Bhaab Guru dhev aski thus mogo Ragavendra  Mi Pajae varam mogo therae Sri hari Ragavendra Natanam Karae thorae charanu paje mogo Ragavendra - 2 Narayana Govindha gopala Ragavendra Hari Narayana Govindha gopala Ragavendra Ragavendra Ragavendra Ragavendra

அழகான பழனி மலை ஆண்டவா

அழகான பழனி மலை ஆண்டவா  - 2 உன்னை அனுதினமும் பாடவந்தேன் வேலவா  அழகான பழனி மலை ஆண்டவா   உன்னை அனுதினமும் பாடவந்தேன் வேலவா  வள்ளி மயில் நாதனே வா வடிவேலனே - 2 வர வேண்டும் மயில் மீது முருகய்யனே - 2 முருகா - 4 அழகான பழனி மலை ஆண்டவா   உன்னை அனுதினமும் பாடவந்தேன் வேலவா - 2 வெள்ளை திருநீறும் வெற்றி வடிவேலும் உள்ளத்தில் தோன்றுமே - 2 வெள்ளி மயில் ஏறி வேலன் வருவதை நெஞ்சம் காணுமே  வெள்ளை திருநீறும் வெற்றி வடிவேலும் உள்ளத்தில் தோன்றுமே  வெள்ளி மயில் ஏறி வேலன் வருவதை நெஞ்சம் காணுமே  எனை ஆளும் ஆண்டவனே எழில் வேலவா - 2 எளியேனும் உனை பாட அருள்வாய் அய்யா - 2 முருகா - 4 அழகான பழனி மலை ஆண்டவா   உன்னை அனுதினமும் பாடவந்தேன் வேலவா  அழகான பழனி மலை ஆண்டவா   உன்னை அனுதினமும் பாடவந்தேன் வேலவா  நல்லதெல்லாம் என்னை நாடிப் பெருகிட நல்லருள் செய்வாய் - 2 தீயதெல்லாம் உடன் தீய்ந்து கருகிட திருவருள் புரிவாய்  நல்லதெல்லாம் என்னை நாடிப் பெருகிட நல்லருள் செய்வாய்  தீயதெல்லாம் உடன் தீய்ந்து கருகிட திருவருள் புரிவாய்  உனையன்றி வேறில்லை...

அயோத்திக்கும் திருவரங்கத்திற்கும் உள்ள தொடர்பு ..

Image
கடந்த ஜனவரி மாதம் உத்திர பிரதேச மாநிலத்தில் ராமரின் ஜன்ம பூமியான  அயோத்தியில் பாரதப் பிரமர் மோடியால் ப்ராண பிரதிஷ்டை செய்யப்பட்டு  பால ராமர் கோவில்  திறக்கப்பட்டது நாம் அனைவரும் அறிந்ததே.!! தமிழகத்தின் திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் கோவிலில் பாற்கடல் வண்ணனாக வீற்றிருக்கும் ரங்கநாதர் அயோத்தியில் இருந்து வந்தவர் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?! தசரதனின் மைந்தன் ராகவ ராமன் இலங்கை வேந்தன் ராவணனை யுத்தத்தில் வென்று சீதையுடன் அயோத்திற்கு வருகிறான். அங்கு அவரின் பட்டாபிஷேகம் வெகு விமரிசையாக நிகழ்கிறது. அவ்விழாவிற்கு பல்வேறு அரசர்கள் வருகை புரிந்தனர் அவர்களுள் புதிதாக இலங்கை மன்னனாக முடி சூடியுள்ள விபீஷணனும் இருந்தான். அயோத்திக்கு அரசனான ராமர் அனைவருக்கும் அவரவர் விரும்பிய பரிசுகளை வழங்க தன்னை விட்டு பிரிய வேண்டியதை நினைத்து கலங்கிய விபீஷணனுக்கு விஷ்ணு பாற்கடலில் சஞ்சரித்த நிலையில் இருக்கும் சிலையை  இலங்கைக்கு கொண்டு செல்ல வழங்கி இனி இவர் உன்னை வழி நடத்துவார் என்று கூறினார். விபீஷணனும் அக மகிழ்ந்து  அச்சிலையை சுமந்த வண்ணம் ஆகாய மார்கமாக இலங்கைக்குச்  சென்றார...

அவதாரங்களின் முடிவு - நரசிம்ம அவதாரம்

Image
"நானே கடவுள் என்னை அன்றி யார் பெயரையும் உச்சரிக்க கூட அனுமதி இல்லை" என்று மூன்று உலகங்களையும் வென்று விட்ட மமதையில் இருந்த இரண்யகசிபுவிற்கு மகனாகப் பிறந்த பிரஹலாதன் ஹரியைத் தவிர வேறொரு நாமத்தை தனது  நா கூறாது என்று உறுதியுடன் இருந்து தனது உயிரையும் துறக்க தயாராக இருந்தான்.  "எங்கே உந்தன் நாராயணன்" என்று தந்தை வினவ " எங்கும் வியாபித்திருக்கும் பரந்தாமன் இந்த தூணிலும் இருப்பான்..எந்த துரும்பிலும் இருப்பான்" என்று கூறிய மைந்தன் முன் இரண்யகசிபு தூணை சுக்கு நூறாக உடைக்க அதிலிருந்து தோன்றிய நரசிம்மன் அவ்வரக்கனின் நெஞ்சைக் கிழித்து அவனின் கொடுமைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார் என்பது நாம் அனைவரும் அறிந்த கதை. கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்த நரசிம்மரின் ஆவேசம் அங்கு சாந்தமடையவில்லை. அரண்மனையை விட்டு வெளியேறிய சிங்கமுகன் அருகிலிருந்த காட்டில் புகுந்து துவம்சம் செய்தார். அங்கு வசித்துக் கொண்டிருந்த பழங்குடி மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டு பயத்தில் மறைந்து வாழத் துவங்கினர். காலங்கள் கடந்தது. தனது அவதாரத்தின் பலன் நிறைவடைந்த பிறகும் விஷ்ணு வைகுண்டம் திரும்பவ...

அவதாரங்களின் முடிவு - வராஹ அவதாரம்

Image
உலகில் அதர்மம் தன் எல்லயைக் கடக்கும்  சமயங்களில் எல்லாம் பகவான் விஷ்ணு அவதாரம் செய்து இப்பூவுலகை காப்பதும் அரக்கர்களை அழிப்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அவ்வாறு எடுக்கும் அவதாரங்கள் மனித அவதாரமாக இருக்கும் பட்சத்தில் தன்னுடைய கர்ம வினைகளுக்கு விதிக்கப்பட்ட வாழ்வை முழுவதுமாக வாழ்ந்து விட்டே பரந்தாமன் வைகுண்டம் திரும்புகிறார் என்பது ராம, கிருஷ்ண அவதாரங்களின் மூலம் நாம் அறிகிறோம் ஆனால் மிருக முகமும் மனித உடலும் இணைத்த அவதாரங்களான மச்ச, கூர்ம, வராஹ, நரசிம்ம அவதாரங்களில் என்ன நடந்தது?! அறிந்து கொள்வோமா!!! வராஹமாக அவதரித்து இரண்யாக்ஷனை வதம் செய்து பூமாதேவியை மீட்ட விஷ்ணு காட்டிற்குள் நுழைந்து அங்கு ஓர் பெண் பன்றியுடன் இணைந்து பல்வேறு பன்றிக் குட்டிகளை ஈன்று வாழ்ந்து கொண்டிருந்தார். ஜீவாத்மாவான இறைவனுடன் ஒன்றற கலந்த பெண் பன்றி சிறிது காலத்தில் தனது உயிரை விட்டது. தனது அவதார நோக்கத்தை நிறைவேற்றிய பின்பும் ஹரி  வைகுண்டம் திரும்பாமை கண்டு வருத்தமுற்ற தேவர்கள் அவரை அழைத்து வருவதற்காக பூலோகம் சென்றனர். அங்கு தனது குட்டிகளுடன் சேற்றிலும் புழுதியிலும் பிரண்டு கொண்டு மலத்தை ருசித்து உண்ட...