தசள்
பெரும்பாலான சௌராஷ்டிரா குடும்பங்களில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் ஏழுமலையானை வணங்கி அசைவ உணவுகளை விலக்கி, விரதம் கடைபிடிக்கப்படுகின்றது. அதே மாதத்தில் ஏதேனும் ஒரு சனிக்கிழமையில் ...கோவிந்தா ...கோவிந்தா என்ற நாமத்தை ஒரு சேர எழுப்பி அவன் பெயரில் வழங்கப்படும் அன்னதானமே "தசள் " என்ற பெயரால் அறியப்படுகிறது.
"தசள்" எப்போது எந்த வருடத்தில் ஆரம்பிக்கப்பட்டது என்று பெரியவர்களிடம் (70 வயது ) கேட்டபோது " இது தொன்று தொட்டு வரும் வழக்கம்" என்றும் தங்களின் மூதாதையர் காலங்களிலும் (1800-களில்) தசல் இருந்ததாக கூறப்பட்டது . ஒரு சிலர் குடும்ப செழுமைக்காக பரந்தாமனை வேண்டி புதிதாக துவங்கும் பழக்கமும் உண்டு என்றும் கூறுகின்றனர்.
மாதம் மும்மாரி பொழிந்த பண்டைய காலத்தில் ஆவணி புரட்டாசி மாதங்களில் மக்கள் மழை வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளாகி வந்தனர். மழை நீரால் சூழப்பட்ட நிலங்களில் விவசாயம் தடைபட்டதால் வயலில் கூலி வேலை செய்யும் விவசாயிகளும் இன்ன பிற கூலி வேலை செய்பவர்களும் உண்பதிற்கு உணவின்றி பசியால் வாடினர். அக்காலகட்டத்தில் பெரும்பாலான சௌராஷ்டிரா மக்கள் நெசவுத் தொழிலையே பிரதானமாக செய்து வந்தனர். அதில் வசதி படைத்த சிலர் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு சாதி பேதமின்றி (தீண்டாமைக்கு எதிராக) அன்ன தானம் வழங்க முற்பட்டனர். ஆனால் அக்கால மக்களோ யாரிடமும் கை ஏந்துவதையோ யாசிப்பதையோ விரும்பவில்லை முக்கியமாக செல்வந்தர்களிடம் அன்ன தானம் பெற்றால் அவர்களின் பாவம் நம்மை வந்தடையும் என்று அஞ்சி மறுத்தனர் .
மக்களின் பசியைப் போக்கவும் அவர்களின் தயக்கத்தை களையவும் அன்னதானம் "தசள்" என்ற பெயரில் இறைவனை வணங்கி வழங்கப்படும் பிரசாதமாக மாறியது மேலும் ஒருவரே இதை செய்யாமல் இருப்பவர்களிடம் இருந்து நெல்லை தானமாகப் பெற்று சமைக்கும் பழக்கமும் உருவானது. முக்கியமாக குழந்தைகளின் பசியை போக்க "தசள் " உதவியது என்று
"தசள் " தொடங்கப்பட்ட விதத்தை விவரிக்கின்றன.
காலப்போக்கில் இறைவனை மட்டுமே மையமாக கொண்ட நிகழ்வாக மாறியது தசள். பொருளாதார நிலையைக் கருத்திற் கொள்ளாமல் தங்களுடைய மூதாதையரிடம் இருந்து இவ்வழக்கத்தை கையிலெடுத்து தொடந்து வருகின்றனர் சௌராஷ்டிர மக்கள் . தசள் நாளில் நான்கு பேரிடம் பாத்திரமேந்தி அரிசியை தானமாகப் பெறுகின்றனர் அதனால் மனதில் குடி கொண்டிருக்கும் ஆணவமும் அகங்காரமும் வெளியேறி எளிமையும் அடக்கமும் நிறைகிறது. யாசித்து பெற்ற பொருட்களைக் கொண்டு சமைக்கப் பட்ட உணவினையே வெங்கடாசலபதிக்கு படையல் இடுகின்றனர். முதல் பந்தியில் சாதி மத பேதமின்றி அனைவரையும் வீட்டிற்குள் அனுமதித்து உபசரிக்கின்றனர்.
இன்றைய கால கட்டத்தில் "தசள்" - அன்னதானம் என்பதையும் மறந்து குடும்ப விழாவாக, அதன் மூல காரணத்தை உணராமல் நடத்தப்படுவதை நினைத்தால் கவலையாக இருந்தாலும் இன்றளவும் தசல் நடைமுறையில் இருப்பது ஆறுதலையே அளிக்கிறது.
பெயர்க்காரணம் : தசல் என்றால் தாசன் என்று பொருள் படும் . எம்பெருமான் பாலாஜிக்கு நான் அடிமை (தாசன்) என்று தன் அகங்காரத்தை இழக்கும் நாள் ஆதலால் அதை "தசள் " என்று அழைக்கின்றனர் .
பின்குறிப்பு : இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள விவரங்கள்/விளக்கங்கள் அனைத்தும் மக்களின் அனுபவத்தின் பேரில் வாய் வழிச் செய்தியாக அறியப்பட்டது. இதற்கு ஆதாரமோ வரலாற்றுச் சான்றுகளோ கிடையாது. சான்றுகள் மற்றும் வேறு விளக்கங்கள் கிடைப்பின் வரவேற்கப் படுகின்றன
Dasal
In most of the Sourashtrian households, people refrain from eating non-vegetarian food in observance of fasting in the Tamil month of ‘Purattasi’. Also, on a Saturday of this month, they chant , ‘Govinda, Govinda’ in unison and offer food to God in the name of ‘Dasal’.
“When did this Dasal originate?" the elderly people (70 year old) of this community answered to this question that they have been following this tradition for many years and their ancestors (in 1800) were said to have observed dasal. Some people start observing dasal seeking blessings of almighty and for their prosperity.
In ancient times, when there is no drastic climate changes people suffered because of flooding due to heavy rains especially in the tamil months of Avani and purtatasi, The agriculture was affected, so people working in the agricultural farms and fields suffered with no food to survive. Weaving was then the primary occupation of most of the sourashtra community. The affluent people of this community offered food to less fortune people regardless of their caste and creed.( against the untouchability). But poor people did not like getting alms or favors from others, more particularly from affluent rich people as they were scared if they would get their sins by getting the alms from them.
To solve their hunger problem and to avoid their hesitation, this donation of food, ‘Dasal’ started in the name of almighty and it is given as prasad and also it was not just done by one person, it was also done by collecting paddy grains as alms from people and cooked and served to all, mainly served to children. Thus Dasal helped people and the reason why it began was well-explained.
As years passed by, this dasal was followed as a ritual and as a religious practice worshiping the Almighty. Without considering the economical condition of the sourashtra families, they have been observing dasal handed down to them by their ancestors. On the day of dasal, they beg for rice and get alms from others. They gain simplicity and humbleness leaving behind their ego and arrogance. Food cooked with the rice collected from alms is offered to Lord Venkatachalapathy. Everyone is served food equally and allowed in the house disregard of their caste and creed.
Nowadays, dasal is celebrated as offering of food and more as a family festival. Though it is sad to see that the original reason for observing dasal is forgotten but it is consoling to see it is still being observed.
Reason for the name: dasal means “dasan” which translates to slave. This day a person loses his/her ego by saying I am the slave of Lord Balaji. Hence it was named Dasal.
Disclaimer: The information and details provided in the article above are passed
on by word of mouth. There is no proof or historical evidence to this. More explanations and evidences are welcome.
Translation Credit - Renuka Thoppae

Comments
Post a Comment