Posts

Showing posts with the label Prahalad

ஹோலிப் பண்டிகை

வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக  " ஹோலிப் பண்டிகை"   உலகெங்கும் உள்ள இந்தியர்களால் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் மாசி  மாத பௌர்ணமியில் மக்கள்  பல வண்ணப் பொடிகளை ஒருவர் மேல் ஒருவர் தூவியும், இரவில் வீதிகளில் தீ வளர்த்து அதைச் சுற்றி  ஆடிப் பாடியும் இப்பண்டிகை நாளில்  மகிழ்கின்றனர். புராணங்களில் ஹோலிப் பண்டிகை கொண்டாடுவதற்காகக் கூறப்படும் காரணங்கள் என்ன?! பின்புலக் கதைகள் யாவை?! பார்ப்போமா?!  திரேதா யுகத்தில் வாழ்ந்த அரக்ககுல அரசன்  இரணிய கசிபு தானே கடவுள் என்றும் மறுப்பவர்களை அடக்கியும்  அழித்தும் ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு மகனாகப் பிறந்த பிரகலாதனோ  "எங்கும் எதிலும் இருப்பவன் ஹரியே " என்று ஹரி நாமம் பாட , அவன் மேல் கடும் கோபம் கொண்ட இரணியகசிபு அவனைக் கொல்ல பல முறை  முயன்று தோற்ற பின் கடைசியாக தன்னுடைய தங்கையான " ஹோலிகா"- வை வரவழைத்தான். ஹோலிகா அக்னி தேவனின் அருள் பெற்றவள். அனலால் அவளுக்கு அழிவில்லை என்பதால் நகர் மன்றின் நடுவே பெரும் சிதை மூட்டப்பட்டது அதில் ஹோலிகா தன் மடியில் பிரகலாதனை ஏந...