அன்பின் வழியது
தொலை பேசி, இன்டர்நெட் இல்லாத அமைதியான வாழ்கை, தொலைக்காட்சி இல்லாத மாலை நேரம், குடும்பத்தினரோடு மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்த நாட்கள் என்றெல்லாம் Youtube- ல் வலம் வரும் AI வீடியோக்களை சமீப காலமாக நாம் அனைவருமே கடந்து வந்திருப்போம் உங்களுக்கு அதே போன்ற அனுபவத்தை எழுத்தின் மூலம் தரும் புத்தகம் தான் "அன்பின் வழியது". எளியள் என்ற புனைபெயருக்கு ஏற்றார் போல மிக எளிய நடையில் விறுவிறுப்பு சேர்கிறேன் என்ற பெயரில் கற்பனைகளை கலக்காமல் தன் மனதில் உள்ளவற்றை அருகில் அமர்ந்து கேட்கும் தோழிக்கு கூறும் தோரணையில் திருமதி ராதா பரசுராம் அவர்கள் எழுதிய புத்தகத்தை அண்மையில் வாசிக்கும் வாய்ப்பு அமைந்ததை நினைத்து மகிழ்கிறேன், ஏன்?! வாருங்கள் கூறுகிறேன்! புத்தக ஆசிரியர் தான் பிறந்த வருடத்திலிருந்து புத்தகத்தை துவங்கி நம்மை சுதந்திர இந்திய தெருக்களுக்கு கையை பிடித்து அழைத்துச் செல்கிறார். மக்களின் வாழ்கை முறை ,அக்காலத்து கட்டிடங்களின் அமைப்பு, வீதிகளில் பல்வேறு பொருட்களை கூவி விற்பவர்கள் எவ்வாறு சௌராஷ்ட்ர மொழியில் கூச்சமின்றி விற்றார்கள் என்றெல்லாம் கூறிக்கொண்டே வருகிறார். அக்காலத்தில் நெசவாளர்கள் தங்க...