அழகான பழனி மலை ஆண்டவா

அழகான பழனி மலை ஆண்டவா  - 2

உன்னை அனுதினமும் பாடவந்தேன் வேலவா 

அழகான பழனி மலை ஆண்டவா  

உன்னை அனுதினமும் பாடவந்தேன் வேலவா 

வள்ளி மயில் நாதனே வா வடிவேலனே - 2

வர வேண்டும் மயில் மீது முருகய்யனே - 2

முருகா - 4

அழகான பழனி மலை ஆண்டவா  

உன்னை அனுதினமும் பாடவந்தேன் வேலவா - 2


வெள்ளை திருநீறும் வெற்றி வடிவேலும் உள்ளத்தில் தோன்றுமே - 2

வெள்ளி மயில் ஏறி வேலன் வருவதை நெஞ்சம் காணுமே 

வெள்ளை திருநீறும் வெற்றி வடிவேலும் உள்ளத்தில் தோன்றுமே 

வெள்ளி மயில் ஏறி வேலன் வருவதை நெஞ்சம் காணுமே 

எனை ஆளும் ஆண்டவனே எழில் வேலவா - 2

எளியேனும் உனை பாட அருள்வாய் அய்யா - 2

முருகா - 4


அழகான பழனி மலை ஆண்டவா  

உன்னை அனுதினமும் பாடவந்தேன் வேலவா 

அழகான பழனி மலை ஆண்டவா  

உன்னை அனுதினமும் பாடவந்தேன் வேலவா 


நல்லதெல்லாம் என்னை நாடிப் பெருகிட நல்லருள் செய்வாய் - 2

தீயதெல்லாம் உடன் தீய்ந்து கருகிட திருவருள் புரிவாய் 

நல்லதெல்லாம் என்னை நாடிப் பெருகிட நல்லருள் செய்வாய் 

தீயதெல்லாம் உடன் தீய்ந்து கருகிட திருவருள் புரிவாய் 

உனையன்றி வேறில்லை தெய்வம் கந்தையா - 2

உலகாளும் ஆண்டவனே நீதானய்யா 

உனையன்றி வேறில்லை தெய்வம் கந்தையா 

உலகாளும் ஆண்டவனே நீதானய்யா 

முருகா - 4


அழகான பழனி மலை ஆண்டவா  

உன்னை அனுதினமும் பாடவந்தேன் வேலவா 

அழகான பழனி மலை ஆண்டவா  

உன்னை அனுதினமும் பாடவந்தேன் வேலவா 

வள்ளி மயில் நாதனே வா வடிவேலனே - 2

வர வேண்டும் மயில் மீது முருகய்யனே 

முருகா - 8




Comments

Popular posts from this blog

அவதாரங்களின் முடிவு - நரசிம்ம அவதாரம்

கண்ணன் வந்தான் எங்கள் கண்ணன் வந்தான்

அயோத்திக்கும் திருவரங்கத்திற்கும் உள்ள தொடர்பு ..