ராமனின் சௌந்தர்யமும் தண்டாபூபிகா நியாயமும்

உபன்யாசகர் ஒருவர் வால்மீகியும் கம்பரும் ராமனின் அழகை எவ்வாறெல்லாம் வர்ணித்து எழுதியிருக்கிறார்கள் என்று உபன்யாசம் செய்து கொண்டிருந்தார். அவனின் திருவழகைக் கண்டு எவ்வாறு ஆண்களெல்லாம் சொக்கி விழுந்தனர் என்று கூறிய அவரிடம் "என்ன சுவாமி ஆண்கள் மட்டும் தான் அவன் அழகில் மயங்கினரா?! பெண்கள் மயங்கவில்லையா?!" என்று ஒருவர் கேட்க அதற்கு உபாசகர் "அது தண்டாபூபிகா நியாயேன சித்தமல்லவா" என்று கூறிவிட்டார்.



கேள்வி கேட்டவருக்கு எதுவும் புரியவில்லை. நமக்கும் தானே?!

ஏகாதேசியன்று விரதம் இருக்கும் அனைவர் வீட்டிலும் சமைக்கப்படும் ஒரே பதார்த்தம் "உப்புமா". ஏன் அவ்வாறு என்பதற்கு ஒரு கதை.

ருக்மாங்கதன் என்னும் அரசன் ஏகாதேசி திதியன்று தவறாமல் விரதம் இருந்து வைகுண்ட ப்ராப்தி அடைந்தான்.  விரதம் இருக்கும் அனைவருக்கும் அவ்வரத்தை அளிக்குமாறு திருமாலிடம் வேண்டிக்கொண்டான் இதனால் பூலோகத்தில் பாப தேவதைகளுக்கே இடமில்லாமல் போய் விட்டது. பிரம்மாவிடம் சென்று முறையிட்ட தேவதைகளிடம் "முழு அரிசியில் சென்று ஒளிந்து கொள்ளுங்கள்" ஏகதேசியன்று முழு அரிசியை உட்கொள்ளும் அனைவரையும் பிடித்துக் கொள் என்று கூறிவிட்டார்.

இவ்வாறு ஏகதேசியன்று உப்புமா சாப்பிட்டு சாப்பிட்டு சலித்த பிராமணர் ஒருவர் வீட்டிற்கு வந்த இளைய மருமகளிடம் வடை சுட்டுத் தருமாறு கேட்க அவளும் பாசத்தோடு 85 வடைகளை சுட்டுக் கொடுக்க மாமனாரும் திண்ணையில் அமர்ந்து ஆசை தீர 40 வடைகளை தின்று தீர்த்து விட்டார்.

வடை சாப்பிட்ட அசதியில் மீதமிருந்த வடைகளை மூட்டையாக கட்டி ஓர் தடியோடு சேர்த்து கட்டி வைத்து விட்டு உறங்கிப்போனார். நடுநிசியில் எழுந்த அவர் வடை மூட்டையை துழாவினார். கையில் அகப்படவில்லை.

மறுநாள் காலை வாசல் தெளிக்க வந்த மருமகளிடம் " நீ ஆசையாக செய்து கொடுத்த வடையை தடியோடு கட்டி வைத்திருந்தேன் ஏதோ எலியோ பெருச்சாளியோ தடியை  இழுத்துக் கொண்டு சென்று விட்டது" என்று வருத்தத்தோடு கூறினார். அதற்கு மருமகள் "தடி போனால் பரவாயில்லை மாமா வடை வைத்திருந்த துணி மூட்டை இருக்கிறதா?! என்று வினவினாள்.

தடியே போனபிறகு வடை மூட்டை இருக்குமா?! இது தான் தண்டாபூபிகா நியாயம். தண்டம் - தடி. அபூபம - வடை.

ஆண்களே சொக்கி விழும் போது பெண்களைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன?

பகவானுடைய அழகிற்கு அனைவருமே அடிமை என்று விளக்குவதற்கு இப்படி ஒரு வேடிக்கை கதை.

மார்கழி மாதத்தின் முதல் நாளான இன்று சௌந்தர்ய நாராயணன் நமக்கு  சகல சௌகரியங்களையும் வழங்க மனமுருகி பிரார்த்திப்போம்.

ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏

மூலம் - முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் எழுதிய "குறையொன்றுமில்லை" தொடர், பிப்ரவரி 20, 2000.

ருக்மாங்கதனின் கதையை படிக்க - https://nirmalasg.blogspot.com/2019/01/published.html 

                              

Comments

Popular posts from this blog

கண்ணன் வந்தான் எங்கள் கண்ணன் வந்தான்

சூரசம்ஹாரம்

ஏரி காத்த ராமரும் பக்த ராமதாஸும்