Posts

பங்குனி உத்திரம்

Image
மந்தர மலையை மத்தாகவும் வாசுகி பாம்பை கயிறாகவும் கொண்டு மும்மூர்த்திகளின் தலைமையில்  பாற்கடலை கடைய முடிவெடுத்தனர் தேவர்களும் அசுரர்களும். மந்தரமலை சமுத்திரத்தில் நிலையாக நிற்கும் பொருட்டு கூர்மமாக தன்னை மாற்றிக் கொண்ட பரந்தாமன் தன்னுடைய முதுகின் மேல் (ஆமை ஓட்டின்) மந்தர மலையைத் தாங்கிக் கொண்டார். பாற்கடலில் இருந்து வெளிப்படும் அமிர்தத்தை தேவர்களும் அசுரர்களும் சமமாக பங்கிட்டுக் கொள்வதாக முடிவு செய்யப்பட்டது. பாற்கடலில் இருந்து பல்வேறு வஸ்துக்கள் வெளிப்பட்டன அத்தோடு அதிலிருந்து தோன்றினாள் மஹாலக்ஷ்மி. அவரை கரம் பிடித்து தனது நெஞ்சில் அமர்த்தினார் பரந்தாமன். இப்பங்குனி உத்திர நாளில் தான் மஹாலஷ்மி பாற்கடலில் இருந்து வெளிப்பட்டார் என்பதால் இந்நாளை "மஹாலக்ஷ்மி ஜெயந்தி" ஆகவும் அனுசரிக்கிறார்கள் அத்தோடு அனைத்து விஷ்ணு தலங்களில் பெருமாளுக்கும் லக்ஷ்மிக்கும் விஷேஷமாக மணவிழா நடைபெறுகிறது. இதே பங்குனி உத்திர நாளிலேயே முருகப்பெருமான் தெய்வானையை கைபிடித்ததாகவும் காஞ்சியில் சிவபெருமான் கௌரியை மணந்ததாகவும், கோதை நாச்சியார் விஷ்ணுவுடன் ஒன்றறக்  கலந்ததாகவும் கூறப்படுகிறது. சுவாமி ஐயப்பனும் இதே ...

மஹா சிவராத்திரி

அரசன் ஹிமவானுக்கும் அரசி மைனாவதிக்கும் மகளாக பூமியில்  அவதரித்தாள்  சக்தி. பார்வதி என்று பெயரிடப்பட்டு அரண்மனையில் வளர்ந்த அவள்  கன்னிப்பருவதை அடைந்ததும் தான் மணக்கப்போகும் மணாளனாக கைலாயம் ஆளும் சிவபெருமானை மனதில் வரித்துக்கொண்டாள். அதன் பொருட்டு மகேஸ்வரனை நோக்கி தவம் செய்ய முடிவுசெய்தாள். தன் மகளிற்காக ஓர் தவக்குடிலை ஹிமவான் அமைக்க அங்கு பார்வதி முக்கண்ணனை நோக்கி ஒற்றைக்காலில் நின்று தவம் செய்யத்துவங்கினாள். தவம் கனிந்தது. தவத்துக்குரியோன் அவள் முன் தோன்றுவதற்குப்  பதிலாக ஓர் சிவயோகி தவக்குடிலை நோக்கி வருவதைக் கண்ட பார்வதி அவரை வணங்கி அவருக்கு வேண்டிய  பணிவிடைகளைச் செய்தாள். பார்வதியின் உபசரிப்புக்களை கனிவுடன் ஏற்றுக்கொண்ட யோகி அவளை நோக்கி சில வினாக்களை எழுப்பினார். " அம்மா நீ விரும்பும் மகேஸ்வரனை நான் அறிவேன். உன் விருப்பம் சரியென்று நான் ஒப்புக்கொள்ளவில்லை. அவனிடத்தில் என்ன குறை என்கிறாயா?! நீ கைப்பிடிக்க எண்ணும் அவன் பயங்கரமான பாம்பையே கங்கணமாக கையில் அணிந்திருப்பவன்". "அம்மா நன்றாக சிந்தித்துப் பார். நீ உடுக்கப்போவதோ அன்னப்புள்ளியின் உருவம...

அனுமார் ஜெயந்தி - ஜனவரி 11, 2024

Image
அன்று அயோத்தி ராஜ சபையில் தனது குருக்களான வசிஷ்டர், விஷ்வாமித்ரர் உடனுறைய தனது சகோதரர்கள், அமைச்சர்கள் புடை சூழ ராஜ பரிபாலனம் செய்து கொண்டிருந்தார் அரசர் ராம சந்திரமூர்த்தி. அப்போது அவரைக்கான வந்த காசி நாட்டரசர் அனைவருக்கும் உரித்தான மரியாதைகளையும் வணக்கங்களையும்  தனித்தனியாக தெரிவித்தவன் விஷ்வாமித்ரரை மட்டும் பொதுவாக வணங்கிவிட்டு தனது இருக்கைக்கு சென்று அமர்ந்து விட்டான். ராஜசபையும் தொடர்ந்தது. அச்சபையில் வீற்றிருந்த தேவ ரிஷி நாரதர் அமைதியாக இருந்த  விஷ்வாமித்ரரிடம் காசி நாட்டரசன் செய்த காரியத்தை மிகப் பெரிய தவறு என்று சுட்டிக் காட்டி கலகத்தை துவக்கி வைத்தார். காசி நாட்டரசனின் செய்கையை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்த விஷ்வாமித்ரர் நாரதரின் விளக்கத்தைக் கேட்டு பெரும் கோபம் அடைந்தார். அரசரும் தனது மாணவனும் ஆகிய ராகவ ராமனிடம் "எனக்கு குருதட்சணையாக அந்த மரியாதை கெட்டவனின் தலையை கொண்டு வா" என்று ஆணை இட்டார். தனக்கு ஏற்பட்ட ஆபத்தை உணர்ந்த காசி அரசன் அனுமனின் தாயாகிய அஞ்சனையிடம் அடைக்கலம் அடைந்தான். அனுமனை அழைத்த தாய் நடந்த விடயங்களை கூறாமல் காசி அரசன் ஆபத்தில் உள்ளான் என்றும் அ...

சிறை மீட்ட செல்வன்

அசோகவனத்தில் அடைபட்டிருந்த சீதையின் முன் ராம தூதனாக நின்ற அனுமனை விலங்கிட்டு ராவணனின் முன் நிறுத்தினர் காவல் வீரர்கள் . பழத்தோட்டத்தை துவம்சம் செய்த வாணரத்திற்கு என்ன தண்டனை வழங்கலாம்?!  என பலவாறு விவாதிக்கப்பட்டது . அதன் வாலில் எண்ணைத் துணியைக் கட்டி தீ வைத்து  விடுவதுதான் பொருத்தமான தண்டனையாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது . வாலில் கொழுந்துவிட்டு எரியும் தழலுடன் அரண்மனையிலிருந்து குதித்த அனுமான்  மரத்திற்கு மரம், சுவருக்கு சுவர் என தாவினார் நீரைத்தேடி. வாணரம் ஆயிற்றே !!! இலங்கை கொழுந்து விட்டு எரிந்தது . அரக்கிகளின் மூலம் விஷயமறிந்த சீதையோ அனுமனை நெருப்பிலிருந்து காக்க   அக்னி தேவனை  பிரார்தனை செய்து கொண்டாள்.   " வாயு புத்திரரே எங்களைக் காப்பாற்றுங்கள்...எங்களை விடுவியுங்கள் " என்ற அபயக் குரல் துள்ளி ஓடிய  அனுமனின் காதுகளைத் துளைத்தது . இடைவிடாது ஒலித்த அவ்வொலியை தொடர்ந்த அனுமனால் அது எங்கிருந்து வருகிறது என்று யூகிக்க முடியவில்லை. அடுத்த சில நொடிகளில் " அனுமரே நாங்கள் இவ்வரண்மனையின் பாதாள சிறையில் அடைபட்டிருக்கி...

அனுமார் ஜெயந்தி

பொன்னிற்கரசன் குபேரனின் அவையில் இருக்கும் அப்சரஸ்களில் ஒருவளான  புஞ்சஸ்தலா தேவலோகத்திற்கு வருகை தந்திருக்கும் துருவாச முனிக்கு பணிவிடை செய்யப் பணிக்கப்பட்டாள். கோபத்திற்கு பெயர்போன துருவாசரிடம் மிகவும் கவனமாக தனக்கிடப்பட்ட வேலைகளை செய்து கொண்டிருந்தாள்  புஞ்சஸ்தலா. எதிர்பாரா விதமாக யாகத்திற்காக அவள்  கைகளில் வைத்திருந்த  அரணிக்கட்டைகளில் ஒன்று கீழே விழ அவ்வொலியை பொறுக்க முடியாத துருவாச முனி " மந்தியைப் போல் சுய கட்டுப்பாடற்று வேலை  செய்கிறாயே?! நீ பூலோகத்தில் வானர  குடும்பத்தில் பிறக்கக் கடவாய் " என்று சபித்து விட்டார். அறியாமல் செய்த தவறுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?! என்று கதறி அழுதாள் புஞ்சஸ்தலா. குபேரனும் தன் அவையில் நடந்த தவறுக்கு மன்னிப்பு கோரினார். தனக்கு சாபவிமோசனமே கிடையாதா?! என்று கலங்கி நின்ற புஞ்சஸ்தலாவிடம்  " கவலை கொள்ளாதே... வானர ரூபத்தில் நீ ஓர் ஆண் மகனை ஈன்றெடுப்பாய்...அவன் பூலோகத்தில் அவதரிக்க இருக்கும் பாற்கடல் வாசனுக்கு அன்புக்குரியவனாவான்... நீயும் சாப விமோசனம் பெறுவாய் " என்று உறுதி அளித்த...

ஆருத்ரா தரிசனம்

Image
மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் ஆருத்ரா தரிசனம் மிக விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது.  இத்தினம் அனுசரிக்கப்படுவதற்கு பல்வேறு காரணங்களும் கதைகளும் கூறப்படுகின்றன அவற்றில் அதிகம் சொல்லப் படாத செவி வழியே அறியப்பட்ட   நிகழ்வொன்றினை  இங்கே காண்போம். மாணிக்கவாசகர் ஓர் நாள் தில்லை நடராஜர்  முன் அமர்ந்து திருவாசகத்தை மனதிலிருந்து கூறி கொண்டிருந்தார் அப்போது அங்கே வந்த ஓர் பிராமணர்   "ஐயா இதை நான் சுவடிகளில் எழுதுகிறேனே" என்று கூறுயவாறு திருவாசகத்தை அவர் கூறக்கேட்டு ஓலைகளில் எழுதலானான். திருவாசகத்தை கூறி முடித்த பின் அப்பிராமணனை  தேடிய மாணிக்கவாசகர் அவனை எங்கும் காணாது திகைத்தார். வந்தவர் அவ்வருணாச்சலனாகவே இருக்கக்கூடும் என்று நினைத்தார். சில மணி நேரம்  கழித்து தில்லை நடராஜர் கோவிலின் மாசான படியினில் ஓர் ஓலை கண்டெடுக்கப்பட்டது. அவ்வோலையின் முடிவில் வாதவூரார் கூற பொன்னம்பலத்தான் எழுதியது என்று கையொப்பம் இடப்பட்டிருந்தது. அச்செய்தியைக் கேட்டு கோயில் கருவறைக்கு விரைந்த   மாணிக்கவாசகர் அவ்வோலையில் தான்  கூறிய ...

தாமோதரனும் நீலகண்டனும்

Image
தேவர்கள் விண்ணிலும் மண்ணிலும் சஞ்சரிக்கும் திறன் பெற்றவர்கள். குபேர குமாரர்களான நலகுவேரனும் மணிகிரீவனும்  அன்று பூலோக இன்பத்தில் திளைத்து தங்களை மறந்த நிலையில் இருந்தனர் அப்போது அவ்வழியே வந்த அஷ்ட வக்கிரன் (சிலர் நாரதர் என்று குறிப்பிடுவதும் உண்டு) என்ற மாமுனியை கண்டனர். தன் உடலில் உள்ள அஷட கோணல்களாலே அப்பெயர் பெற்ற அவரின் உடற் குறையைக் கண்டு எள்ளி நகையாடினர் தேவ குமாரர்கள். அவர்களின் கீழ்ச்செயலால் கோபமுற்ற முனிவர் உடலில் இருந்து ஆடை நழுவுவதைக் கூட அறியாமல் நாணமின்றி நின்ற அவர்களை மருத மரங்களாக மாற தீச்சொல்லிட்டார்.  தங்கள் தவற்றை உணர்ந்து  சாபத்திற்கு விமோசனம் வேண்டி நின்ற அவர்களிடம் "விஷ்ணு பகவான்  மானுடனாக அவதரித்து மண்ணிறங்கும் வேளையில்  நீங்கள் உங்களின்  சுய உருவைப் பெற்று தேவலோகம் செல்வீர்கள்" என்று சொல்லிச் சென்றார். அங்கேயே மரங்களாக நின்ற அவர்கள் எவ்வாறு சாபம் நீங்கப் பெற்றனர் என்று பார்ப்போமா? துவாபர யுகத்தில் கார் மேக வண்ணன் கிருஷ்னனாக அவதரித்த பரந்தாமன் குழந்தைப் பருவத்திலிருந்தே பல்வேறு லீலைகளை புரிந்தார் என்பது நாம் அனைவரும் நன்கு அறிந்ததே. அன்...