ஆருத்ரா தரிசனம்
மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் ஆருத்ரா தரிசனம் மிக விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது.
இத்தினம் அனுசரிக்கப்படுவதற்கு பல்வேறு காரணங்களும் கதைகளும் கூறப்படுகின்றன அவற்றில் அதிகம் சொல்லப் படாத செவி வழியே அறியப்பட்ட நிகழ்வொன்றினை இங்கே காண்போம்.
மாணிக்கவாசகர் ஓர் நாள் தில்லை நடராஜர் முன் அமர்ந்து திருவாசகத்தை மனதிலிருந்து கூறி கொண்டிருந்தார் அப்போது அங்கே வந்த ஓர் பிராமணர் "ஐயா இதை நான் சுவடிகளில் எழுதுகிறேனே" என்று கூறுயவாறு திருவாசகத்தை அவர் கூறக்கேட்டு ஓலைகளில் எழுதலானான்.
திருவாசகத்தை கூறி முடித்த பின் அப்பிராமணனை தேடிய மாணிக்கவாசகர் அவனை எங்கும் காணாது திகைத்தார். வந்தவர் அவ்வருணாச்சலனாகவே இருக்கக்கூடும் என்று நினைத்தார்.
சில மணி நேரம் கழித்து தில்லை நடராஜர் கோவிலின் மாசான படியினில் ஓர் ஓலை கண்டெடுக்கப்பட்டது. அவ்வோலையின் முடிவில் வாதவூரார் கூற பொன்னம்பலத்தான் எழுதியது என்று கையொப்பம் இடப்பட்டிருந்தது.
அச்செய்தியைக் கேட்டு கோயில் கருவறைக்கு விரைந்த மாணிக்கவாசகர் அவ்வோலையில் தான் கூறிய திருவாசகம் எழுதப்பட்டிருந்ததை கண்டு பக்திப் பரவசத்தில் திளைத்து நடராஜ பெருமான் சன்னதியில் இறைவனோடு ஒன்றரக் கலந்து முக்தி அடைந்தார் என்றும் மாணிக்கவாசகருக்கு நடராஜர் தரிசனம் தந்த அந்நாளே "ஆருத்ரா தரிசனம்" என்றும் நம்பப்படுகிறது.
முந்தைய இரவு முழுவதும் பல்வேறு அபிஷேகங்களும் ஆராதனைகளும் செய்யப்பட்டு திருவாதிரை (ஆருத்ரா) நட்சத்திர நாளன்று பக்தர்களுக்கு முழு அலங்காரத்தோடு சிவபெருமான் தரிசனம் தருகிறார்.
நம்மை இம்மையிலும் மறுமையிலும் காத்தரும் நடராஜனை மனமுருகி பிரார்த்திப்போம்..மன அமைதி பெறுவோம்.
சொன்னவர் - துளசி
Comments
Post a Comment