Posts

புரட்டாசி மாத சிறப்புக் கட்டுரைகள் #5 - சுவாமி யோக நரசிங்கப் பெருமாள்

தெலுங்கானா மாநிலத்தில் மட்டப்பள்ளி என்ற கிராமத்தில் கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள குகைக்கோயிலில் வீற்றிருக்கிறார் யோக நரசிம்மர். மிகவும் பழமை வாய்ந்த க்ஷேத்திரங்களில் ஒன்றாகக் கருதப்படும் இத்தலத்திற்கு ஓர் அறிய பெருமை உண்டு. சுவாமிக்கு பால், தயிர், தேன், மஞ்சள், குங்குமம் என்று அபிஷேகம் செய்வது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே ஆனால் இதோடு பானகம் என்று சொல்லக்கூடிய பானத்தாலும் இங்குள்ள நரசிம்மர் அபிஷேகம் செய்யப்படுகிறார். முற்காலத்தில் அபிஷேகம் செய்யப்படக்கூடிய பொருட்கள் நரசிம்மரின் அகன்ற வாயில் ஊற்றப்படுமாம். அதில் சரி பாதியை உள் வாங்கிக் கொண்ட பெருமான் மீதம் சரிபாதியை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கி விடுவாராம். அபிஷேக பொருட்கள் பெரிய அண்டா போன்ற பாத்திரத்தில் ஊற்றப்பட்டாலும் சிறிய கோப்பையில் ஊற்றப்பட்டாலும் சரி பாதி மீளுமாம். அதோடு அங்கு நைவேத்தியத்திற்கு வைக்கப் படும் பொருட்களின் மேல் ஒரு ஈ கூட அமராதாம் ஆனால் அவையே பிரசாதமாக மாறும் போது ஈக்கள் மொய்ப்பதை காணலாமாம். இன்றளவும் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள அஹோபில (Ahobila Mutt) மடத்தில் மேற்கூறிய சடங்குகள் நடந்தேறி வருகின்றன என்று ...

புரட்டாசி மாத சிறப்புக் கட்டுரை # 4 - மஹாலக்ஷ்மி ஸ்தோத்ரம்

முன்னொரு காலத்தில் வித்யாதரன் என்பவன் வாழ்ந்து வந்தான். சம்சாரியான அவன் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடுடையவன். பக்திமான். அவன் ஓர் ஆஸ்ரமத்தையும் நிர்மாணித்து நடத்தி வந்தான். வறுமை அவனை வாட்டியது. பல்வேறு பொறுப்புக்களால் லௌதீக வாழ்க்கையை விட்டு விலக முடியாமல் தவித்த வித்யாதரன் மனமொன்றி மஹாலக்ஷ்மியை பிரார்த்தித்து அவளை துதித்து ஸ்தோத்திரம் ஒன்றைப் பாடினான். அவனுடைய பக்தியில் மகிழ்ந்த மஹாலக்ஷ்மி அவனுக்கு காட்சி அளித்தாள். தன்னுடைய வறுமையை போக்க செல்வம் வேண்டி நின்ற அவனிடம் "உன்னுடைய கர்ம வினையின் படி வறுமை உனக்கு விதிக்கப்பட்டுள்ளது அதை மாற்ற இயலாது" என்று கூறிய மஹாலக்ஷ்மி "உன்னுடைய அடுத்த பிறவியில் வேண்டும் செல்வம் அனைத்தும் பெற்று மகிழ்ந்து வாழ்வாய்" என்று வரமளித்து மறைந்தாள். செய்வதறியாது திகைத்த வித்யாதரனுக்கு ஒரு யோசனை தோன்றியது. அக்கணமே குடும்ப வாழ்க்கையைத் துறந்து துறவறம் பூண்டான். எவனொருவன் அனைத்து பந்தங்களையும் விடுத்து துறவி ஆகிறானோ அவன் இப்பிறப்பிலேயே மறு பிறப்பு அடைந்தவன் ஆகிறான். தன்னை நோக்கி தூய பக்தியுடன் தொழும் வித்யாதரனுக்கு காட்சி அளித்த மஹாலக்ஷ்மி தாயார...

புரட்டாசி மாத சிறப்புக் கட்டுரை # 3 - ராதே கிருஷ்ணா

கண்ணனின் மனதில் நீங்காமல் குடி கொண்டிருப்பவர் ராதை. கோகுலத்தில் பிறந்த ராதை கண்ணன் அவதரிப்பதற்கு சில ஆண்டுகளுக்கு (8 வருடம் என்று சொல்லப்படுகிறது) முன்னே யாதவ அரசர் விருஷபானுவால் கண்டெடுக்கப்படுகிறார். ஆனால் அவர் கண்களைத் திறக்கவே இல்லை. சிறுமியாக வளர்ந்த ராதை ஓர் நாள் நந்த கோபரால் கோகுலத்தில் விடப்பட்ட கிருஷ்ணனை காண அழைத்துச் செல்லப் படுகிறாள். கோகுலத்தில் உள்ள அனைவரும் கண்ணனை பார்க்க அலை மோதுகிறார்கள். குழந்தையின் அருகில் அழைத்துச் செல்லப்பட்ட ராதை கண்ணனை குனிந்து உச்சி முகர்கிறாள் அப்போது அவனின் பூங்கரம் அவளின் கண்களின் மேல் பட முதல் முதலாக கண் திறந்த ராதை மழலைக் கண்ணனைப் பார்க்கிறார் தனது மனதைப் பறி கொடுக்கிறாள். அன்று முதல் அவனுக்காகவே வாழ்கிறாள். இன்றும் அஸ்ஸாம் மாநிலத்தில் இப்பழக்கம் வழக்கத்தில் உள்ளது. ராதையாக அலங்கரிக்கப்பட்ட சிறுமியர் பச்சிளம் குழந்தையிடம்  அழைத்துச் செல்லப்பட்டு அதன் மழலைக் கரங்களை  சிறுமியரின் கண்களின் மேல் வைக்கிறார்கள். கண்ணனின் மேல் ராதைக்கு இருந்த அன்பு அப்பழுக்கற்றது, பரிசுத்தமானது. எந்த விதமான எதிர்பார்ப்பும் அற்றது. அவளைப் போல் நாமும் அவன் ம...

புரட்டாசி மாத சிறப்புக் கட்டுரை # 2 - சிபாரிசு

Image
பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமன் ஸ்ரீதேவி, பூதேவி சகிதம் வைகுந்தத்தில் வீற்றிருந்தார் அப்போது  பக்தன் ஒருவன்  அவரை  காண வந்தான் ஆனால் அவனின் கர்ம வினைகளை அறிந்த பரமனோ அவனைக் காண உளம் கொள்ளவில்லை ஆதலால் தலையை வலப்பக்கமாக திருப்பிக் கொண்டான். அப்பக்கம் அமர்ந்திருந்த ஸ்ரீதேவியோ "பக்தன் வேண்டுவதை கவனியாமல் ஏன் இப்பக்கம் திரும்புகிறீர்கள்" என்று அவரின் முகத்தை பக்தனை நோக்கித் திருப்பினார். இப்பொது விஷ்ணுவோ தனது முகத்தை இடப்பக்கமாக திருப்பிக் கொள்ள அங்கு வாசம் செய்யும் பூதேவியும் "பக்தனின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்" என்று தலையை சரி செய்து விட முடிவாக ஸ்ரீ ஹரி தனது தலையை முற்றிலும் மறுபக்கம் சுழற்றி பின் புறத்திற்கு இட்டுச் செல்ல அங்கு குடி கொண்டிருக்கும் நீலா தேவி தன் பங்கிற்கு பக்தனுக்காக சிபாரிசு செய்ய வேறு வழியில்லாமல்  தனது பக்தனுக்கு செவி சாய்க்கிறார் அச்சுதன். தேய்ந்து வளரும் நிலவினை முழுமனதுடன் ஏற்றுக் கொள்வது போல ஒரு தாய் தன் குழந்தை எவ்வித தவறு செய்திருப்பினும் அதனிடம் பாரா முகம் கொள்வதில்லை என்பதையே தேவிகள் பக்தனுக்காக ஸ்ரீனிவாசனிடம் பரிந்துரை செய்...

புரட்டாசி மாதச் சிறப்புக் கட்டுரை 1 - வேதாந்த தேசிகர்

Image
நாராயணனை மனதால் நினைப்பதற்கும் அவனின் நாமங்களைக் கூறுவதற்கும் நாள், கிழமை, மாதம் பார்க்கத் தேவையில்லை எனினும் வைகுந்தன் இம்மண்ணில் அவதரித்த மாதமாக புரட்டாசி கருதப்படுவதால் இம்மாதத்தில் பல்வேறு விரதங்களை நாம் கடைபிடிக்கிறோம் அத்தோடு  நின்று விடாமல் அவனை நினைவில் நிறைத்தும் அவனின் நாமங்களைக் கூறியும் பிரார்த்தனை செய்வோம். நமக்குத் தெரிந்த நாராயணன் கதைகளையும் லீலைகளையும் மற்றவர்களுக்கு எடுத்துக் கூறுவோம். நானும் அவ்வகையில் புரட்டாசி மாதச் சிறப்புக் கட்டுரைகள்  (வாய் வழிக் கதைகள்) சிலவற்றை எழுதலாம் என்றிருக்கிறேன். வாசித்து உங்களுடைய வட்டங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள். வைஷ்ணவ ஆச்சாரியர்களில் ஒருவரான  வேதாந்த தேசிகர் 13-14-ம்  நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர். ஆன்மீகத்தில் மட்டுமல்லாது இலக்கியம், அறிவியல், கணிதம், வேதாந்தம்  என்று பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர்.   வேதாந்த தேசிகரின் தந்தை ஒரு ஞானி. தாயை இழந்த மகனை காக்கும் பொறுப்பினால் லௌதீக வாழ்க்கையில் கட்டுண்டு கிடந்தார். தன்னுடைய நிலையை எண்ணியவாறு அமர்ந்திருந்த அவர் எதிர...

யார் இந்த வித்யாவலி? - ஓணம் சிறப்புக் கட்டுரை

Image
கேரள மக்களின் ப்ரத்யேகப் பண்டிகையான "ஓணம் விழா" இன்று உலகெங்கும் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. புத்தாடைகள் உடுத்தி, மலர்க்கோலம் இட்டு, அறுசுவை உணவுகள் சமைத்து வருடத்திற்கு ஒரு முறை பாதாள லோகத்தில் இருந்து பூலோகம் வரும் மகாபலியை வரவேற்கிறார்கள். பிரகலாதனின் பேரனும் இரண்யகசிபுவின் வழித்தோன்றலுமாகிய மகாபலி ஏன் பாதாள உலகத்திற்கு அரசன் ஆனான் என்பது நாம் அறிந்த ஒன்று. சப்த ரிஷிகளில் ஒருவரான காஸ்யபருக்கும் அதிதி அன்னைக்கும் மகனாக அவதரிக்கிறார் மஹா விஷ்ணு. அவரின் உயரம் காரணமாக வாமணன் என்று அழைக்கப்படும் அவருக்கு ஓர் மங்களமான நாளில் உபநயனம் செய்யப்படுகிறது. முப்பது முக்கோடி தேவர்களும் இந்நிகழ்வினைக் காண பூலோகம் வருவதோடு தங்களது அஸ்திரங்கள் அனைத்தையும் அவருக்கு அர்ப்பணமாக்கி வணங்குகிறார்கள். அசுரர் குல அரசன் மஹாபலி யாகம் ஒன்றை நடத்துகிறான். அதன் முடிவில் பிராமணர்களுக்கு அவர்கள்  வேண்டியதை தானமாக வழங்குகிறான் என்பதை அறிந்த வாமணன் பனைக்குடை, கமண்டலம் மற்றும் தண்டம் ஏந்தி மான்தோல் ஆடை அணிந்து அங்கு செல்கிறான். செல்லும் வழியில் பகவான் விஷ்ணுவின் இட பாகத்தில் அமைந்த லக்ஷ்மி தேவியோ அவர...

பச வண்ண - கோலாட்டத் திருவிழா (Basavanna Festival)

Image
ஓர் சமயம் சாபத்தால் அவதியுற்ற நந்தி சாப விமோசனம் வேண்டி விஷ்ணு  பெருமாளை நோக்கி தவம் செய்ததாகவும் அதன் பலனாக சாபம் நீங்கி கைலாயம் திரும்பியதாகவும் கூறப்படுகிறது. இந்நிகழ்வை நினைவுறுத்தும் விதமாக ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாத அமாவாசையை அடுத்த பத்து நாட்களுக்கு "பச வண்ண - கோலாட்டத் திருவிழா " கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் வெகு விமரிசையாக நடத்தப்படும் இவ்விழா மதுரையில் சௌராஷ்டிர மக்களால்  முன்னெடுத்து செல்லப் படுகிறது. தெற்கு கிருஷ்ணன் கோயில் தெருவில் அமைந்த  சௌராஷ்டிர சமூக மக்களின் கோவிலான "ஸ்ரீ பிரசன்ன வெங்கடேஸ்வர பெருமாள் " தலத்தில் வருடம் தவறாமல் இந்நிகழ்வு  "பொஸ்கண்ணா தின்னாள்" என்ற பெயரில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நடை சாற்றிய மதிய வேளையில் கர்பகிரகத்தை தாண்டி வெளிவட்டத்தில் இருக்கும் மண்டபத்திற்கு அருகே அமைந்துள்ள கண்ணாடி அறையில் தங்கத்தாலான நந்தி வைக்கப்படுகிறது பின் களிமண்ணால் ஆன நந்தியை மக்கள் கொண்டு வர அதையும் அதே அறையில் வைக்கிறார்கள். இளம் பெண்கள் அதைச் சுற்றி  கோலாட்டம் ஆட இத்திருவிழா தொடங்கி வைக்கப்படுகிறது. அடுத்த பத்து நாட்களுக்கு நடக...