புரட்டாசி மாத சிறப்புக் கட்டுரை # 3 - ராதே கிருஷ்ணா
கண்ணனின் மனதில் நீங்காமல் குடி கொண்டிருப்பவர் ராதை. கோகுலத்தில் பிறந்த ராதை கண்ணன் அவதரிப்பதற்கு சில ஆண்டுகளுக்கு (8 வருடம் என்று சொல்லப்படுகிறது) முன்னே யாதவ அரசர் விருஷபானுவால் கண்டெடுக்கப்படுகிறார். ஆனால் அவர் கண்களைத் திறக்கவே இல்லை. சிறுமியாக வளர்ந்த ராதை ஓர் நாள் நந்த கோபரால் கோகுலத்தில் விடப்பட்ட கிருஷ்ணனை காண அழைத்துச் செல்லப் படுகிறாள்.
கோகுலத்தில் உள்ள அனைவரும் கண்ணனை பார்க்க அலை மோதுகிறார்கள். குழந்தையின் அருகில் அழைத்துச் செல்லப்பட்ட ராதை கண்ணனை குனிந்து உச்சி முகர்கிறாள் அப்போது அவனின் பூங்கரம் அவளின் கண்களின் மேல் பட முதல் முதலாக கண் திறந்த ராதை மழலைக் கண்ணனைப் பார்க்கிறார் தனது மனதைப் பறி கொடுக்கிறாள். அன்று முதல் அவனுக்காகவே வாழ்கிறாள்.
இன்றும் அஸ்ஸாம் மாநிலத்தில் இப்பழக்கம் வழக்கத்தில் உள்ளது. ராதையாக அலங்கரிக்கப்பட்ட சிறுமியர் பச்சிளம் குழந்தையிடம் அழைத்துச் செல்லப்பட்டு அதன் மழலைக் கரங்களை சிறுமியரின் கண்களின் மேல் வைக்கிறார்கள்.
கண்ணனின் மேல் ராதைக்கு இருந்த அன்பு அப்பழுக்கற்றது, பரிசுத்தமானது. எந்த விதமான எதிர்பார்ப்பும் அற்றது. அவளைப் போல் நாமும் அவன் மேல் அன்பு செலுத்த முயல்வோம்.
சர்வம் கிருஷ்ணார்ப்பணம் !!!
சொன்னவர் - துளசி
Comments
Post a Comment