புரட்டாசி மாத சிறப்புக் கட்டுரைகள் #5 - சுவாமி யோக நரசிங்கப் பெருமாள்
தெலுங்கானா மாநிலத்தில் மட்டப்பள்ளி என்ற கிராமத்தில் கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள குகைக்கோயிலில் வீற்றிருக்கிறார் யோக நரசிம்மர். மிகவும் பழமை வாய்ந்த க்ஷேத்திரங்களில் ஒன்றாகக் கருதப்படும் இத்தலத்திற்கு ஓர் அறிய பெருமை உண்டு.
சுவாமிக்கு பால், தயிர், தேன், மஞ்சள், குங்குமம் என்று அபிஷேகம் செய்வது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே ஆனால் இதோடு பானகம் என்று சொல்லக்கூடிய பானத்தாலும் இங்குள்ள நரசிம்மர் அபிஷேகம் செய்யப்படுகிறார்.
முற்காலத்தில் அபிஷேகம் செய்யப்படக்கூடிய பொருட்கள் நரசிம்மரின் அகன்ற வாயில் ஊற்றப்படுமாம். அதில் சரி பாதியை உள் வாங்கிக் கொண்ட பெருமான் மீதம் சரிபாதியை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கி விடுவாராம். அபிஷேக பொருட்கள் பெரிய அண்டா போன்ற பாத்திரத்தில் ஊற்றப்பட்டாலும் சிறிய கோப்பையில் ஊற்றப்பட்டாலும் சரி பாதி மீளுமாம்.
அதோடு அங்கு நைவேத்தியத்திற்கு வைக்கப் படும் பொருட்களின் மேல் ஒரு ஈ கூட அமராதாம் ஆனால் அவையே பிரசாதமாக மாறும் போது ஈக்கள் மொய்ப்பதை காணலாமாம்.
இன்றளவும் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள அஹோபில (Ahobila Mutt) மடத்தில் மேற்கூறிய சடங்குகள் நடந்தேறி வருகின்றன என்று சொல்லப்படுகிறது.
பரந்தாமனுக்குரிய இந்த புரட்டாசி மாதத்தில் நாராயணனை மனதால் தொழுவோம் அனைவர் நலம் நாடுவோம்.
ஓம் நமோ நாராயணாய நமஹ !!!
சொன்னவர் - துளசி
Comments
Post a Comment