Posts

சித்திரைத் திருவிழா

கோவில் நகரமான மதுரையில் சித்திரை மாதத்தில் நடைபெறும் மீனாக்ஷி திருக்கல்யாணமும் அதைத் தொடர்ந்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவமும் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்வாகும். பலரின் மனதில் பசுமை மாறா  நினைவுகளை விட்டுச் செல்லும் இவ்விழாவைக் கண்டு ரசிக்க தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து  குறிப்பாக தென் மாவட்டங்களில் உள்ள பக்தர்கள்  கூட்டம் கூட்டமாக மதுரையில் கூடுகிறார்கள். இவ்வைபவத்தின் பின்புலம் நாம் அறிந்ததே எனினும்  பரவலாக பேசப்படாத சில நிகழ்வுகளை இங்கு காண்போம்.  மீனாட்சி திருக்கல்யாணம்  முன்னொரு காலத்தில் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனான மலையத்வஜ பாண்டியன் புத்திர பேறு அற்று வருந்தினான். சிவ பக்தனான மன்னன் அரசி காஞ்சன மாலா உடன் இணைந்து குழந்தை வேண்டி யாகம் செய்தான். மன்னனோ நாடாள சந்ததி வேண்டுமே என்ற கவலையில் ஆண்மகனை வேண்ட அரசியோ தன்னையும்  அறியாமல் மனதில் பெண் குழந்தை வேண்டி பிரார்த்தனை செய்தாள். யாக முடிவில் அக்னியில் இருந்து ஓர் அழகான பெண் குழந்தை நடந்து வந்து அரசியின் மடியில் அமர்ந்தாள். சற்று ஏமாற்றமடைந்த மன்னனும் அரசியும்...

கெளரவ பூர்ணிமா - மார்ச் 9 , 2020

மாசி மாத பவுர்ணமிக்கு ஹோலிப் பண்டிகை, கஜேந்திர மோக்ஷம் என்று பல சிறப்புக்கள் உண்டு அவற்றில் ஒன்று ஸ்ரீ சைதன்ய மகாபிரபு அவதரித்த தினம் ஆகும். பொன் போன்று  மின்னும் மேனி அழகால்  கௌரங்கா என்றும் அழைக்கப்பட்டார் ஆதலால் இத்தினம் கௌரவ பூர்ணிமா என்றும்  அழைக்கப்படுகிறது. உலகெங்கும் அவரது பிறந்த தினம் குறிப்பாக ISKON அமைப்புகளில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பாவத்தை நீக்க எளிய வழி என்று எதைக் கூறுகிறார் என்பதை அவரது வாழ்வில் நிகழ்ந்த ஓர் சம்பவத்தின் மூலம்  பின் வருமாறு காணலாம். ஸ்ரீ சைதன்யரின் வட இந்திய யாத்திரையின் போது அவர் மிக்க மகிழ்ச்சியுடன் காசியை அடைந்தார். மணிகர்னிகா  கட்டி-ல் (Manikarnika Ghat) அவர் கங்கையில் ஸ்நானம் செய்தார்.கிழக்கு வங்காள சுற்றுப்பிராயணத்தின் போது தன்னிடம் உபதேசம் பெற்று, தனது யோசனையின் படி காசியில் வசிக்கும் தவள மித்ரரை ஸ்ரீ சைதன்யர் சந்தித்தார். அவருடைய துணையுடன் சைதன்யர் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கும் பிந்து மாதவர் சன்னதிக்கும் சென்றார். பின்னர் அவருடைய வீட்டிலேயே தங்கினார். பிற்காலத்தில் ரகுநாத பட்...

கஜேந்திர மோக்ஷம் - மார்ச் 9, 2020

விஷ்ணுவின் பால் அதி பக்தி கொண்ட  கஜேந்திரா என்னும் யானை இமயமலைச் சாரலில் வாழ்ந்து வந்தது. அனுதினமும் அருகிலுள்ள குளத்திலிருந்து  அங்குள்ள விஷ்ணு கோவிலுக்கு தாமரை மலர்களை பூஜைக்காக  எடுத்துச்  செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தது. அன்றும் மலர்களை பறிப்பதற்காக, இருள் செறிந்த அதிகாலையில் குளக்கரைக்கு  சென்றது. மலர்களை பறித்துக் கொண்டிருக்கையில் அதனுடைய கால்களை ஓர் முதலை கவ்வ வலி பொறுக்காமல் கதறியது கஜேந்திரா. முதலையின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள பலவாறு முயன்றது. உதவிக்கு பிறரை அழைக்கும் பொருட்டு சத்தமாக பிளிறியது. பல மணி நேர முயற்சி பலனளிக்கவில்லை இறுதியில் தனது தும்பிக்கையில் இருக்கும் தாமரைப் பூவை வானை நோக்கி ஏந்தியவாறு முழு நம்பிக்கையுடன் "ஆதி மூலா", "நாராயணா ", "கோவிந்தா "என்று அழைக்கத் துவங்கியது. இனி எனக்கு நீ அன்றி வேறு எவரும் இல்லை, உன்னையே சரணடைகிறேன். இச்சூழலில் இருந்து என்னை காப்பாயாக என்று பிரார்த்தனை செய்தது. தனது பக்தனாகிய கஜேந்திராவை முதலையின் பிடியிலிருந்து காக்கும் பொருட்டு காட்சி அளித்த பரந்தாமன், சுதர்சன சக்கரத்தை முதலையி...

பிரதோஷ விரதம் ஏன் அனுஷ்டிக்கப்படுகிறது ?!

தேவர்களும் அசுரர்களும் இணைந்து, வாசுகி என்ற பாம்பைக் கொண்டு விஷ்ணுவின் தலைமையில்   பாற்கடலைக்  கடைந்தனர். அமிர்தத்தை அடையும் நோக்கில் தொடங்கப்பட்ட  இச்செயலில், பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட பல்வேறு பொருட்களை இரு தரப்பினரும்  தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர். எதிர்பாரா விதமாக வாசுகியிடம் இருந்து வெளிவந்த ஆலகால விஷம், பாற்கடலின் பல்வேறு அசுத்தங்களோடு இணைந்து பெருந்தீயாக உருமாறி தாண்டவமாடியது. விஷ்ணுவும் பிரம்மாவும் தீயை அணைக்க முயன்று தோற்ற பின் ருத்ரதாரியான  சிவபெருமானின் உதவியை நாடினர். பெருந்தீயோடு ஆலகால விஷத்தையும் ஒரே மடக்கில் விழுங்கிய சிவபெருமானைக் கண்டு தேவர்களும் அசுரர்களும் கைகூப்பித் தொழுதனர். பார்வதியோ விஷம் சிவபெருமானின்  வயிற்றை அடையாதவாறு  தொண்டையை அழுந்தப் பிடித்து நிறுத்தினார். அதனால் அண்ட சராசரத்தில் வாழும் அனைத்து உயிர்களும் காக்கப்பட்டன. விஷத்தின் வீரியத்தால் சிவபெருமான் தன் நினைவை இழந்து மயக்க நிலையை அடைந்தார். அச்சமயம் சிவபெருமானை நோக்கி வைக்கப்பட்ட பிரார்த்தனைகளையும் வேண்டுகோள்களையும் சிவனின் வாகனமா...

ஆத்ம லிங்கம்

சப்த ரிஷிகளில் ஒருவரான புலஸ்தியரின் புதல்வர் விஸ்ரவமுனிக்கும் அசுர வழித்தோன்றலான கைகேசிக்கும்  பிறந்த முதல் மைந்தன் இராவணன். அவனைத் தொடர்ந்து கும்பகர்ணன், சூர்ப்பனகை என உடன்பிறந்தார் அனைவரிடமும் அசுர குணங்களே ஓங்கியிருக்க , தந்தையை ஒத்த தமையன் வேண்டும் என்ற அன்னையின் ஆசைக்கிணங்க பிறந்ததவன் விபீஷணன். இலங்கையை ஆண்ட இராவணன் தீவிர சிவ பக்தன் என்பது நாம் அனைவரும் அறிந்த கூற்று. அனுதினமும் காலையும் மாலையும் கடற்கரை மணலில் சிவலிங்கம் வடித்து சந்தியாவந்தனம் செய்வது அவன் வழக்கம். அவன் செய்யும் சிவலிங்கம்  சமுத்திர ராஜனால் கடல் அலைகளைக் கொண்டு   கலைக்கப்படுவதைக் கண்ட அவனின் தாயார் கைகேசி "நீ கைலாயநாதனை நோக்கி தவம் இருந்து சக்தி வாய்ந்த  ஆத்ம லிங்கத்தை கொண்டு வந்தாயானால் அதை இலங்கையில் பிரதிஷ்டை செய்து வளம் பெறலாம்  " என்று கூற இராவணனும் அண்ணாமலையானை நோக்கிக்  கடும் தவம் செய்யலானான். அவனின் தவம் கனிந்து பார்வதி துணையோடு தம்பதி சமேதராக காட்சி அளித்தார் சிவபெருமான். கண்களைத் திறந்து அவர்களை நோக்கிய மறுகணம் தான் எதற்காக தவம் புரிந்தோம் என்பதையே ...

ரத ஸப்தமி - பிப்ரவரி 1, 2020

தை மாத அமாவாசையயை தொடர்ந்து  வரும் ஏழாம் நாள் அஷ்டமி திதியை "ரத ஸப்தமி"- யாக அனுசரிக்கிறோம். இந்நாளில் சூரிய தேவன், ஏழு புரவிகள் பூட்டப்பட்டு ஒற்றை சக்கரத்தால் இயக்கப்படும்  தனது  ரதத்தை அருணன் செலுத்த தெற்கிலிருந்து வட திசை நோக்கி பயணிக்கிறார். இதனால் ஏற்படும் பருவநிலை மாற்றத்தால் இன்றிலிருந்து பூமியில் பகல் பொழுது நீண்டு காணப்படுகிறது. இதை உத்ராயணம் என்று அழைக்கிறோம். இதே ரத ஸப்தமி நாளில் தான்  பிரம்ம முகூர்த்தத்தில்  அம்புப் படுக்கையில் இருந்த பீஷ்மப்  பிதாமகர்- தருமனும் பகவான் கிருஷ்ணரும் உடனிருக்க விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தையும் சிவ ஸஹஸ்ரநாமத்தையும் சொல்லிய வண்ணம் தன் ஆத்மாவை தனது உடலிலிருந்து விடுவித்துக்கொண்டார். ஆகவே இந்நாள் "பீஷ்மாஷ்டமி" என்றும் அழைக்கப்படுகிறது.   கேட்டதைக் கொடுக்கும் காமதேனுவின் மகளாகிய நந்தினி யாகத்திற்குத் தேவையான நெய்யையும் பாலையும் வழங்கும் பொருட்டு வசிஷ்டரின் தவக்குடிலில் வாழ்ந்து வந்தது. அஷ்ட வசுக்களில் எட்டாவது வசுவாகிய பிரபாசாவின் மனைவி தனக்கு நந்தினி பசு வேண்டும் என்று அதைக் கொண்டு  வர தனது கணவனை அன...

லக்ஷ்மணனின் பெருமை

இலங்கை வேந்தன் இராவணனின் முதல் புதல்வன் மேகநாதன். அனைத்து அசுரர்களைப் போலவே தேவர்களை எதிர்த்து போர் புரிந்தான். இவனிடம் தாக்குப் பிடிக்க முடியாத தேவேந்திரன் இந்திரன் , ஆதிசேஷனின் உதவியுடன் பாதாள லோகத்தில் ஒளிந்து கொண்டான். அங்கு ஆதிசேஷனின் மகள் சுலோச்சனையின் அழகில் மயங்கி தனது விருப்பத்திற்கு இணங்குமாறு அவளை வற்புறுத்தினான். இந்திரனின் மறைவிடத்தை  கண்டறிந்த மேகநாதனோ  அவனைத்  தனது தேரில் கட்டி இழுத்துக் கொண்டு இலங்கை நோக்கி விரைந்தான். இராவணனும் மேகநாதனும் இந்திரனை கொல்ல முடிவெடுத்தனர்.  விரைந்து வந்து அவர்களைத் தடுத்த பிரம்ம தேவன் அவ்வாறு செய்வது அறிவீனம் என்றும் அதற்கு பதிலாக அவனுக்கு வேண்டிய வரத்தை தான்  வழங்குவதாகவும் கூறினார். மரணமின்மை வேண்டிய மேகநாதனிடம் அது இயற்ககைக்கு விரோதமானது என்று பிரம்மா  கூற மேகநாதனோ  " சாதாரண மனிதன் எவனொருவன் பதினான்கு ஆண்டுகள்  ஊன், உறக்கம் இன்றி வாழ்கிறானோ, எவனொருவன்   திருமணம் புரிந்தும் பிரம்மச்சரிய விரதத்தை கடைபிடிக்கிறானோ அவன் மூலமே தனக்கு மரணம் நிகழ...