ரத ஸப்தமி - பிப்ரவரி 1, 2020
தை மாத அமாவாசையயை தொடர்ந்து வரும் ஏழாம் நாள் அஷ்டமி திதியை "ரத ஸப்தமி"- யாக அனுசரிக்கிறோம். இந்நாளில் சூரிய தேவன், ஏழு புரவிகள் பூட்டப்பட்டு ஒற்றை சக்கரத்தால் இயக்கப்படும் தனது ரதத்தை அருணன் செலுத்த தெற்கிலிருந்து வட திசை நோக்கி பயணிக்கிறார். இதனால் ஏற்படும் பருவநிலை மாற்றத்தால் இன்றிலிருந்து பூமியில் பகல் பொழுது நீண்டு காணப்படுகிறது. இதை உத்ராயணம் என்று அழைக்கிறோம்.
இதே ரத ஸப்தமி நாளில் தான் பிரம்ம முகூர்த்தத்தில் அம்புப் படுக்கையில் இருந்த பீஷ்மப் பிதாமகர்- தருமனும் பகவான் கிருஷ்ணரும் உடனிருக்க விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தையும் சிவ ஸஹஸ்ரநாமத்தையும் சொல்லிய வண்ணம் தன் ஆத்மாவை தனது உடலிலிருந்து விடுவித்துக்கொண்டார். ஆகவே இந்நாள் "பீஷ்மாஷ்டமி" என்றும் அழைக்கப்படுகிறது.
கேட்டதைக் கொடுக்கும் காமதேனுவின் மகளாகிய நந்தினி யாகத்திற்குத் தேவையான நெய்யையும் பாலையும் வழங்கும் பொருட்டு வசிஷ்டரின் தவக்குடிலில் வாழ்ந்து வந்தது. அஷ்ட வசுக்களில் எட்டாவது வசுவாகிய பிரபாசாவின் மனைவி தனக்கு நந்தினி பசு வேண்டும் என்று அதைக் கொண்டு வர தனது கணவனை அனுப்பினார். தனது தவக்குடிலில் இருந்து நந்தினி அபகரிக்கப்பட்டதை அறிந்த வசிஷ்டர் எட்டு வசுக்களும் பூலோகத்தில் மனிதாராகப் பிறக்கக் கடவது என்று சபித்தார். பிரபாசாவினாலேயே தாம் இத்தவற்றை செய்ய நேர்ந்தது என்று மற்ற வசுக்கள் மன்றாட ...எட்டாவது வசுவைத் தவிர மற்ற அனைவருக்கும் பிறந்த மறுகணமே தேவலோகத்தை அடையும் வாய்ப்பு அமையும் என்றும் எட்டாவது வசு பிரம்மசாரியத்தைக் கடை பிடித்து மிக நீண்ட நாட்கள் பூமியில் வாழ்ந்த பின்னே மோட்சத்தை அடைய முடியும் என்றும் கூறினார் வசிஷ்டர். அதே நேரத்தில் தான் செய்த பிழையினால் பூலோகத்தில் பெண்ணாக பிறக்கவுள்ள கங்கையே தங்களுக்கு தாயாக வேண்டும் என்று வசுக்கள் விரும்ப...அவ்வாறே நிகழும் என்று வரமளித்தார் வசிஷ்டர்.
காட்டில் வேட்டையாடச் சென்ற குரு குலத்து சந்தான மகாராஜா அங்கு வசித்து வந்த கங்காவை விரும்பினார். தனக்கு குழந்தை பிறந்தால் அதை தன் விருப்பத்திற்கு வளர்ப்பேன் என்றும் அதை மறு வார்த்தை இன்றி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் கங்கா சந்தான மகாராஜாவை மணம் செய்து கொண்டார். ஒவ்வொரு முறையும் தான் கருத்தரித்ததும் சந்தனுவிடம் இருந்து விலகி வாழ்ந்த கங்கா பிரசவித்தபின் குழந்தையின்றி தனியாக கணவரிடம் திருப்பி வருவது வழக்கமாக இருந்தது. கங்காவிற்கு அளித்த வாக்கை காக்கும் பொருட்டு சந்தனுவால் எதுவும் செய்ய இயலவில்லை. ஏழாவது முறையாக பிரசவித்த கங்காவை பின் தொடர்ந்த சந்தான ராஜா பிறந்து சில மணித்துளிகளே ஆன சிசுவை தண்ணீரில் அமிழ்தி கொல்லும் கங்காவைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளானார். எட்டாவது முறை அவ்வாறு நடக்கும் முன்பே அதை தடுத்து விட வேண்டும் என்ற முயற்சியில் கங்காவிற்கு தான் அளித்த வாக்கை மறந்தார் சந்தான மகாராஜா.
நதிக்கரையை நோக்கி தனது எட்டாவது குழந்தையுடன் சென்ற கங்காவை வழிமறித்து அவளின் இச்செய்கைக்கு விளக்கம் கேட்டு மன்றாடினார் சந்தனு. தனது வாக்கை மீறி கேள்வி கேட்டதால் இனி உங்களோடு வாழ இயலாது என்று கூறி அவ்விடத்தை விட்டு குழந்தையுடன் சென்று மறைந்தாள் கங்கா. செய்வதறியாது திகைத்து நின்றார் சந்தனு மகாராஜா.
வருடங்கள் கடந்தோடியது. அன்று காட்டிற்கு வேட்டையாடச் சென்ற சந்தனுவின் கண்களில் தன் அம்பினால் விரைந்திடும் நதியை நிறுத்திக்கொண்டிருந்த ஆறு வயது சிறுவனைக் கண்ட அவர் "நீ யார் ?! உன் பெற்றோர்கள் எவர்?!" என்று வினவ அவர்களின் முன் வந்த கங்கை "இவனே நம் எட்டாவது புதல்வன் தேவவிரதன்... இவனை இனி தங்களோடு அழைத்துச் செல்லலாம்" என்று கூறினாள். தாயை விட்டு பிரிய மறுத்த புதல்வனிடம் "நீ நினைக்கும் போதெல்லாம் நதிக்கரைக்கு வா...உன் முன் தோன்றி உன்னுடன் உரையாடுவேன் " என்று வாக்களித்து விட்டு
மறைந்தாள் கங்கை.
மறைந்தாள் கங்கை.
தேவவிரதனுடன் அரண்மனைக்குத் திரும்பிய சந்தானு மகாராஜா பேரின்பம் அடைந்தார். தேவவிரதனை பட்டத்து இளவரசனாக அறிவித்தார் ஆனால் அவர் இன்பம் நெடுநாட்கள் நீடிக்கவில்லை. ஊனும் உறக்கமும் இழந்து நிலைகொள்ளாது தவிக்கும் தன் தந்தையிடம் அதற்கான காரணத்தை வினவினான். ஒன்றுமில்லை என்று சந்தனு மறுத்துவிட அவரின் தேரோட்டியின் மூலம் விஷயத்தை அறிந்துகொள்ளச் சென்றான் தேவவிரதன். "இளவரசே, கங்கையில் படகோட்டும் மச்சக்கன்னியை கண்டதிலிருந்து அரசர் நிலையற்று இருக்கிறார். அவர் மேல் காதல் கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன் " என்று பதிலுரைத்தான் தேரோட்டி.
தன் தந்தையின் மகிழ்ச்சியே தன் மகிழ்ச்சி என்று வாழ்ந்து கொண்டிருந்த தேவவிரதன் மச்சக்கன்னியின் குடிலுக்கு விரைந்தான். அவளோ எதுவாயினும் தன் தந்தையின் முடிவே தன் முடிவு என்று கூற...அவள் தந்தையை அணுகினான். "இளவரசே, தங்கள் தகப்பனார் என் பெண்ணை மணம் கொள்ளவேண்டுமெனில் அவர் ஒரு சில நிபந்தனைகளுக்கு உடன் பட வேண்டும் என்று வேண்டியிருந்தேன். அவையாவன...என் பெண்ணில் பிறக்கும் குழந்தைகளே பட்டது அரசனாக முடி சூட வேண்டும்" என்றான். அதற்கு மறு கணமே ஒப்புதல் அளித்த தேவவிரதன் விரைவில் திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என்று கூற "இளவரசே...தலைமுறைகள் கடந்தும் என் மகளில் எழும் மைந்தர்கள் முடி சூட வேண்டுமெனில்...தாங்கள் பிரம்மச்சரியத்தை கடைபிடித்தாக வேண்டும் என்று கூறினான்". "என் தந்தையின் உள மகிழ்ச்சிக்கு முன் நாடும் முடியும் எனக்கு ஒரு பொருட்டல்ல" என்று கூறி தன் முன்னே விரிந்திருந்த கங்கையின் மேல் ஆணையிட்டு பிரம்மச்சாரியானான் தேவவிரதன். சந்தனுவை மணந்த மச்சக்கன்னி "சத்யவிரதை" ஆனாள்.
தனக்காக தன் புதல்வன் செய்திருக்கும் தியாகத்தை நினைத்து பூரித்த சந்தனு மகாராஜா " நிஷ்ட பிரம்மச்சாரியான நீ இனி பீஷ்மர் என்று அழைக்கப்படுவாய், உன்னை வெல்ல எவராலும் முடியாது நீ நினைக்கையில் மட்டுமே உன் உயிர் பிரியும்" என்று வரமளித்தார் மேலும் "மைந்தா கோலும், முடியும் கொண்டு வெண்கொற்றைக் குடையின் கீழ் இந்நாட்டை ஆளும் உரிமையை நீ இழந்திருப்பினும் இம்மணிமுடிக்கு என்றென்றும் பாதுகாவலன் நீயே...அப்பொறுப்பு உன்னுடையது என்று வாக்குறுதி பெற்றார். இவ்வாறாக தேவவிரதனாக மண்ணில் பிறந்த எட்டாவது வசுவான பிரபாசா பீஷ்ம பிதாமகர் ஆனார் பல வருடங்கள் வாழ்ந்தபின் ரத ஸப்தமி அன்று தன் மானுட உடலைத் துறந்து வசு சகோதரர்களிடம் இணைந்தார்.
ரத சப்தமி நாளன்று எருக்களம் பூ , அருகம் புல் . எள், பச்சரிசி மற்றும் மஞ்சள் கலந்த நீரில் ஸ்நானம் செய்வதால் பீஷ்மரைப் போல் நாமும் இந்நீண்ட பிறவிப் பெருங்கடலை நீந்தி மோட்சத்தை அடையலாம் என்று சொல்லப்படுகிறது.
உலகெங்கும் இருக்கும் சூரிய தேவனின் சன்னதியிலும், நவகிரக கோயில்களிலும் விசேஷ பூசைகளும் அபிஷேகங்களும் செய்யப்பட்டு ரத சப்தமி நாள் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
சொன்னவர் - துளசி.

Comments
Post a Comment