கெளரவ பூர்ணிமா - மார்ச் 9 , 2020

மாசி மாத பவுர்ணமிக்கு ஹோலிப் பண்டிகை, கஜேந்திர மோக்ஷம் என்று பல சிறப்புக்கள் உண்டு அவற்றில் ஒன்று ஸ்ரீ சைதன்ய மகாபிரபு அவதரித்த தினம் ஆகும். பொன் போன்று  மின்னும் மேனி அழகால்  கௌரங்கா என்றும் அழைக்கப்பட்டார் ஆதலால் இத்தினம் கௌரவ பூர்ணிமா என்றும்  அழைக்கப்படுகிறது. உலகெங்கும் அவரது பிறந்த தினம் குறிப்பாக ISKON அமைப்புகளில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பாவத்தை நீக்க எளிய வழி என்று எதைக் கூறுகிறார் என்பதை அவரது வாழ்வில் நிகழ்ந்த ஓர் சம்பவத்தின் மூலம்  பின் வருமாறு காணலாம்.

ஸ்ரீ சைதன்யரின் வட இந்திய யாத்திரையின் போது அவர் மிக்க மகிழ்ச்சியுடன் காசியை அடைந்தார். மணிகர்னிகா  கட்டி-ல் (Manikarnika Ghat) அவர் கங்கையில் ஸ்நானம் செய்தார்.கிழக்கு வங்காள சுற்றுப்பிராயணத்தின் போது தன்னிடம் உபதேசம் பெற்று, தனது யோசனையின் படி காசியில் வசிக்கும் தவள மித்ரரை ஸ்ரீ சைதன்யர் சந்தித்தார். அவருடைய துணையுடன் சைதன்யர் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கும் பிந்து மாதவர் சன்னதிக்கும் சென்றார். பின்னர் அவருடைய வீட்டிலேயே தங்கினார். பிற்காலத்தில் ரகுநாத பட்ட கோஷுவாமி என்று பெயர்பெற்ற ரகுநாதர் அவரை சந்தித்து ஆசி பெற்றார். வைத்தியர் குடும்பத்தில் பிறந்து ஆசிரியராக பணியாற்றி வந்தவரும்  சைதன்யரின் பழைய சிஷ்யருமான காசிநாதரும் காசியில் வாழ்ந்து வந்தார். காசியில் ஸ்ரீ சைதன்யர் ஸுபுத்திராயர் என்பவரை சந்தித்தார். சுல்தான் உசேன் ஷா என்பவன் வங்காளத்தின் நவாப்பாக ஆவதற்கு முன்னாள் ராயரிடத்தில் பணியாளராக இருந்தான். ஒரு சமயம் கடமையில் சிறிது தவறிய அவனை ராயர் சவுக்கால் அடிக்கச் செய்தார் அதனால் நவாப் ஆன பிறகு ஸுபுத்திராயரை கொல்ல வேண்டும் என்று நவாப்பின் மனைவி தெரிவித்தார். ஆனால் எஜமான விசுவாசத்தால் நவாப் அவ்வாறு செய்ய மறுத்து விட்டான் கடைசியில் ஸுபுத்திராயரின் வாயில் அசுத்தமானவற்றை ஊற்றி அவரை மதத்திலிருந்து வெளியேறுமாறு செய்தான் நவாப். எவ்வகையான பிராயசித்தங்களை செய்து இதிலிருந்து வெளி வருவது என்று ஸுபுத்திராயர் பண்டிதர்களிடம் ஆலோசனை செய்தார். அசுத்தமான நாக்கை மீண்டும் சுத்தமாக்க வேண்டும் என்றால் கொதிக்கும் நெய்யை குடிக்க வேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள். இதைக் கேட்டு நடுங்கிப்போனார் ஸுபுத்திராயர். இருப்பினும் வேறேதும் வழி கிடைக்காதா என்று மனதை தேற்றிக் கொண்டு ஸ்ரீ சைதன்யரை அணுகி ஆலோசனை கோரினார். கிருஷ்ணரின் நாமத்தை உச்சரிப்பதால் பாவங்கள் நீங்கி  விடுவது மட்டுமில்லாமல் அவரது பாதார விந்தங்களுக்கே நம்மை கொண்டு போய் சேர்த்து விடும் எனவே கிருஷ்ணரின் நாமங்களை உச்சரியுங்கள் அதுவே போதும் என்று சைதன்யர் தெரிவித்தார். இதைக் கேட்டு ஸுபுத்திராயர் கவலையும் துக்கமும் நீங்கி ஆத்ம திருப்தி அடைந்தார். ஸ்ரீ சைதன்யரின் உபதேசங்களை பின்பற்றினார். காசியில் பத்து தினங்கள் தங்கிய பின் ஸ்ரீ சைதன்யர் பிரயாகை புறப்பட்டார்.

மூலம் : ராம கிருஷ்ணவிஜயம், மார்ச் பதிப்பு

சொன்னவர் : துளசி

ஸ்ரீ சைதன்யரை பற்றி  மேலும் அறிந்து கொள்ள பின்வரும் லிங்கை கிளிக் செய்யலாம்

https://nirmalasg.blogspot.com/2019/03/blog-post_21.html

கஜேந்திர மோக்ஷம்  : https://nirmalasg.blogspot.com/2020/03/9-2020.html

ஹோலிப்பண்டிகை : https://nirmalasg.blogspot.com/2019/03/20-2019.html

Comments

Popular posts from this blog

அவதாரங்களின் முடிவு - நரசிம்ம அவதாரம்

கண்ணன் வந்தான் எங்கள் கண்ணன் வந்தான்

அயோத்திக்கும் திருவரங்கத்திற்கும் உள்ள தொடர்பு ..