Posts

ரத ஸப்தமி - பிப்ரவரி 1, 2020

தை மாத அமாவாசையயை தொடர்ந்து  வரும் ஏழாம் நாள் அஷ்டமி திதியை "ரத ஸப்தமி"- யாக அனுசரிக்கிறோம். இந்நாளில் சூரிய தேவன், ஏழு புரவிகள் பூட்டப்பட்டு ஒற்றை சக்கரத்தால் இயக்கப்படும்  தனது  ரதத்தை அருணன் செலுத்த தெற்கிலிருந்து வட திசை நோக்கி பயணிக்கிறார். இதனால் ஏற்படும் பருவநிலை மாற்றத்தால் இன்றிலிருந்து பூமியில் பகல் பொழுது நீண்டு காணப்படுகிறது. இதை உத்ராயணம் என்று அழைக்கிறோம். இதே ரத ஸப்தமி நாளில் தான்  பிரம்ம முகூர்த்தத்தில்  அம்புப் படுக்கையில் இருந்த பீஷ்மப்  பிதாமகர்- தருமனும் பகவான் கிருஷ்ணரும் உடனிருக்க விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தையும் சிவ ஸஹஸ்ரநாமத்தையும் சொல்லிய வண்ணம் தன் ஆத்மாவை தனது உடலிலிருந்து விடுவித்துக்கொண்டார். ஆகவே இந்நாள் "பீஷ்மாஷ்டமி" என்றும் அழைக்கப்படுகிறது.   கேட்டதைக் கொடுக்கும் காமதேனுவின் மகளாகிய நந்தினி யாகத்திற்குத் தேவையான நெய்யையும் பாலையும் வழங்கும் பொருட்டு வசிஷ்டரின் தவக்குடிலில் வாழ்ந்து வந்தது. அஷ்ட வசுக்களில் எட்டாவது வசுவாகிய பிரபாசாவின் மனைவி தனக்கு நந்தினி பசு வேண்டும் என்று அதைக் கொண்டு  வர தனது கணவனை அன...

லக்ஷ்மணனின் பெருமை

இலங்கை வேந்தன் இராவணனின் முதல் புதல்வன் மேகநாதன். அனைத்து அசுரர்களைப் போலவே தேவர்களை எதிர்த்து போர் புரிந்தான். இவனிடம் தாக்குப் பிடிக்க முடியாத தேவேந்திரன் இந்திரன் , ஆதிசேஷனின் உதவியுடன் பாதாள லோகத்தில் ஒளிந்து கொண்டான். அங்கு ஆதிசேஷனின் மகள் சுலோச்சனையின் அழகில் மயங்கி தனது விருப்பத்திற்கு இணங்குமாறு அவளை வற்புறுத்தினான். இந்திரனின் மறைவிடத்தை  கண்டறிந்த மேகநாதனோ  அவனைத்  தனது தேரில் கட்டி இழுத்துக் கொண்டு இலங்கை நோக்கி விரைந்தான். இராவணனும் மேகநாதனும் இந்திரனை கொல்ல முடிவெடுத்தனர்.  விரைந்து வந்து அவர்களைத் தடுத்த பிரம்ம தேவன் அவ்வாறு செய்வது அறிவீனம் என்றும் அதற்கு பதிலாக அவனுக்கு வேண்டிய வரத்தை தான்  வழங்குவதாகவும் கூறினார். மரணமின்மை வேண்டிய மேகநாதனிடம் அது இயற்ககைக்கு விரோதமானது என்று பிரம்மா  கூற மேகநாதனோ  " சாதாரண மனிதன் எவனொருவன் பதினான்கு ஆண்டுகள்  ஊன், உறக்கம் இன்றி வாழ்கிறானோ, எவனொருவன்   திருமணம் புரிந்தும் பிரம்மச்சரிய விரதத்தை கடைபிடிக்கிறானோ அவன் மூலமே தனக்கு மரணம் நிகழ...

சூரசம்ஹாரம்

சப்த ரிஷிகளில் ஒருவரான காஷ்யபருக்கு திதி, அதிதி என்று இரு மனைவிகள் அவர்களுள் திதிக்கும் காஷ்யபருக்கும் பிறந்தவன் தான் சூரபத்மன். அவனுக்கு சிங்கமஹாசுரன், கஜமஹாசுரன் என்று இரு சகோதரர்களும் அசமுகி என்ற சகோதரியும் உண்டு. சூரபத்மன் சமுத்திரத்திற்கு நடுவே ஓர் நகரை உருவாக்கி  ஆட்சி புரிந்தான்.  சிங்கமஹாசுரனோ  சமுத்திரத்தைச்  சுற்றி தன் கிராமங்களை  அமைத்துக்கொள்ள... கஜமுகாசுரன் தன்னை கிரௌஞ்ச்சிய மலையாக உருமாற்றம் செய்து கொண்டு ஆட்சி புரிந்தான்.அசுர குணமுடைய இவர்கள் சடைமுடியான் சிவ பெருமானை நோக்கி கடும் தவம் செய்தனர்.  இவர்களுக்கு காவலாக அவர்களின் சகோதரி அசமுகி நின்றாள். இவர்களின் தவத்தில் மகிழ்ந்த அண்ணாமலையான் அவர்களுக்கு காட்சியளிக்க "உன்னைத் தவிர எங்களை அழிக்கும் சக்தி எவருக்கும் இருக்கக் கூடாது...எங்கள் மரணம் உன் அருளாலே  நிகழ வேண்டும்" என்று வரம் பெற்றனர். காலங்கள் உருண்டோடியது. சூரபத்மன் அக்னி தேவனின் புத்திரி பத்மகோமளையை மணந்து  பானுகோபன் என்னும் மகனைப்  பெற்றான்.  கடும் தவங்களின் மூலம் பல்வேறு சக்திகளை பெற்ற பானுகோபன் இற...

விஜய தசமி

ஒவ்வொரு வருடமும் விஜய தசமியன்று பெரும்பாலான கோவில்களில் உற்சவர்- கையில் வில் அம்புடன் வீதி உலா வருவது, காலம் காலமாக  பின்பற்றப்பட்டு வரும் நிகழ்வு . அவ்வாறு வரும் உற்சவர் கோவிலுக்கு அருகில் காணப்படும் வன்னி மரத்தடியில் சிறிது நேரம் அமர்ந்து விட்டு உலவுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். விஜயதசமி என்றாலே அதர்மத்திற்கெதிரான தர்மத்தின்  வெற்றி, நீதியை நிலைநாட்ட அவதாரங்கள் அரக்கர்களை எதிர்த்து நடத்தும் போர் என்றெல்லாம் அனைவரும் அறிந்திருந்தாலும் உற்சவர் அமர  ஏன் வன்னி மரத்தடியை தெரிவு செய்கிறார்?! அதற்கான பின்புலக் கதை  இதோ ... கௌரவர்களிடம் சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் 13 வருடம் காடேக வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதில் கடைசி வருடம் தங்கள் சுய அடையாளத்தை துறந்து  அங்காத வாசம் செய்யவேண்டும் . அவர்கள் இருக்கும் இடமோ அவர்களைப் பற்றியோ ஒற்றர்கள் மூலம் அறிய முடியுமானால் அவர்கள் அடுத்த 13 வருடமும் நாடு புகமுடியாது என்று உறுதி செய்யப்பட்டது. கௌரவர்களோ அங்காத வாசத்தில் பாண்வர்களை கண்டிபிடித்தே ஆக வேண்டும் என்று கடும் சதி செய்தனர். அவர்கள் ஒளிந்திர...

நவராத்திரி

வருடந்தோறும் புரட்டாசி அமாவாசையை அடுத்த  ஒன்பது தினங்களில்  இப்புடவிற்கே அன்னையரான   முப்பெரும் தேவியரை வணங்கி வழிபடும் , கொண்டாடப்படும் விழவையே நவராத்திரி என்றழைக்கிறோம். அன்னை துர்கா தேவி மகிஷாசுரனை ஒன்பது நாட்கள் போரிட்டு  வதம் செய்த தினம் என்றும் நிம்பன் குசும்பன் உள்ளிட்ட அரக்கர்களை அழித்த நாள் என்றும்  ரகுகுல  ராமன் சக்தியை இந்நாட்களில் வழிபட்டு அவள் அளித்த சக்தியால் இராவணனை வதம் செய்தான் ஆதலால் விஜயதசமி என்றும்  பல்வேறு காரணங்களாலும் பெயர்களாலும் நவராத்திரி அறியப்பட்டாலும் "அதர்மத்தை தர்மம் வென்று நீதியை நிலைநாட்டும் நாள் நவராத்திரி " என்பதே மூலக்கருத்து.  நவராத்திரி கொண்டாடப்படுவதன் நோக்கம்  பலரும் அறிந்ததே எனினும் பரவலாக அறியப்படாத காரணம் ஒன்று உண்டு. அவையாவது : புரட்டாசி மாதம் பித்ருக்களின் மாதம் என்றழைக்கப்படுகிறது ஆகவே இம்மாத அமாவாசை மஹாளய அமாவாசையாக அனுசரிக்கப்பட்டு பித்ரு தமர்பனம் செய்யப்படுகிறது . இக்காலகட்டத்தில் ஆன்மாக்கள் தங்கள் வாழ்ந்த மண்ணுலகை நோக்கி வருவார்கள் என்றும்  நம்பப்படுகிறது. அவ்வாறு வ...

பிட்டுக்கு மண் சுமந்த படலம் 19-08-2021

முன்னொரு காலத்தில் மதுரையை பாண்டியன் ஆண்ட சமயத்தில் எதிர்பாரா விதமாக வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. நிலைமையை சீர்செய்யவும் கரை புரண்ட வெள்ளம் நகருக்குள் புகாமல் இருக்கவும், கரையை பலப்படுத்தும்   பணிகள் துவங்க இருப்பதாக  அரசாங்க ஆணை வெளியானது. பறை அறிவித்தபடி வந்த காவலன் " அனைவர் வீட்டிலிருந்து குறைந்தபட்சம் ஒருவராவது கரை அமைக்கும் பணியில் ஈடுபட வேண்டும்...இல்லையேல் கடுமையாகத் தண்டிக்கப்படுவீர்...இதற்கு யாரும் விதிவிலக்கல்ல  " என்று வீதி வீதியாகச் சொல்லிக் கொண்டே சென்றான். அந்நகரில் பிட்டு விற்று பிழைப்பு நடத்தும் வந்தி என்ற கிழவி சாமிக்கு  பிட்டை நெய்வேத்தியமாக வைத்தவாறு "சொக்கநாதா...இது என்ன சோதனை...என் வீட்டில் என்னைத் தவிர வேறு  யாரும் இல்லை...என்னால் இக்காரியங்களை செய்ய இயலாதே...என்ன செய்வது, நீதான் என்னைக் காப்பாற்ற வேண்டும்" என்று அழுது புலம்பினாள். அடுத்த நொடி  வாசலில் யாரோ அவளை அழைக்கும் குரல் கேட்டது. வாட்ட சாட்டமான இளைஞன் ஒருவன் "பாட்டி...நான் வெளிஊர்ல இருந்து வர்றேன்..இன்னைக்கு ராத்திரி மட்டும் உன் திண்ணையில படுத்துக்க...

குருவாயூரப்பா...குருவாயூரப்பா !!!

பரந்தாமர் விஷ்ணு பூலோகத்தில் கிருஷ்ணராக அவதரித்தார் . கோகுலத்தில் வளர்ந்து வந்த  அவரை தரிசிக்கவும் பூஜிக்கவும் அனுதினம் தேவர்கள் தேவலோகத்தில் இருந்து வருவது வாடிக்கையாக இருந்தது. அவ்வாறு ஓர் நாள் குருவும் வாயுவும் வருகை தந்திருந்தனர். செல்லக் கண்ணனின் குறும்புக கண்களையும் தேனொழுகும் புன்னகையையும் கண்ட அவர்கள் தங்கள் முன் குழந்தை வடிவில் இருப்பவர் பரம் பொருள் என்பதையும்  மறந்து அக்குழந்தையை கையில் அள்ளிக்  கொஞ்சினர். பல்வேறு விளையாட்டுகள் செய்து அவனழகில் தங்களையே மறந்தனர் . குருவோ கிருஷ்ணனை தோளில் தூக்கிக் கொள்ள வாயுவோ தன் பலத்தால் அவர்களை பறக்கச் செய்து கண்ணாமூச்சி காட்டினான் . இருவரும் இணைந்து கிருஷ்ணருக்கு அமுது ஊட்டினர் . அவ்வாறு பகவான் வாயுவோடும் குருவோடும்  க்ஷண நேரத்தில் பறந்து சென்று அமர்ந்த இடம் தான் குருவாயூர். பல ஆண்டுகளுக்கு முன் குருவாயூரில் பூசகராக இருந்த பிராமணர் ஒருவர் வெண் குஷ்ட நோயால் அவதியுற்று வந்தார். பல்வேறு சிகிச்சைகள் செய்தும் பலனில்லாமல் அக்கிராமத்தில் வாழ்ந்த மருத்துவரிடம் அழைத்து வந்தனர். அவரை சோதித்த மருத்துவரோ மிகுந்த தயக்கத்திற...