விஜய தசமி

ஒவ்வொரு வருடமும் விஜய தசமியன்று பெரும்பாலான கோவில்களில் உற்சவர்- கையில் வில் அம்புடன் வீதி உலா வருவது, காலம் காலமாக  பின்பற்றப்பட்டு வரும் நிகழ்வு . அவ்வாறு வரும் உற்சவர் கோவிலுக்கு அருகில் காணப்படும் வன்னி மரத்தடியில் சிறிது நேரம் அமர்ந்து விட்டு உலவுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். விஜயதசமி என்றாலே அதர்மத்திற்கெதிரான தர்மத்தின்  வெற்றி, நீதியை நிலைநாட்ட அவதாரங்கள் அரக்கர்களை எதிர்த்து நடத்தும் போர் என்றெல்லாம் அனைவரும் அறிந்திருந்தாலும் உற்சவர் அமர  ஏன் வன்னி மரத்தடியை தெரிவு செய்கிறார்?!

அதற்கான பின்புலக் கதை  இதோ ...

கௌரவர்களிடம் சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் 13 வருடம் காடேக வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதில் கடைசி வருடம் தங்கள் சுய அடையாளத்தை துறந்து  அங்காத வாசம் செய்யவேண்டும் . அவர்கள் இருக்கும் இடமோ அவர்களைப் பற்றியோ ஒற்றர்கள் மூலம் அறிய முடியுமானால் அவர்கள் அடுத்த 13 வருடமும் நாடு புகமுடியாது என்று உறுதி செய்யப்பட்டது. கௌரவர்களோ அங்காத வாசத்தில் பாண்வர்களை கண்டிபிடித்தே ஆக வேண்டும் என்று கடும் சதி செய்தனர். அவர்கள் ஒளிந்திருந்த  நாட்டை கண்டறிந்த கௌரவர்களால் பாண்டவர்களை அடையாளம் காண முடியவில்லை ஆதலால் அக்கிராமத்தில் உள்ள ஆநிரைகளை கொல்ல முடிவு செய்தனர். எப்படியும் போர்புரிய பார்த்தன் வருவான் என்று யூகித்தனர் . மறுதினம் தங்கள் கால்நடைகள் அநியாயமாகக் கொல்லப்பட்டிருப்பதைக் கண்ட மக்கள் கொதித்தெழுந்து மன்னரிடம் முறையிட்டனர்.

மன்னரோ இதற்கு காரணமானவர்களை கண்டறிந்து பழிதீர்க்க படையுடன் களம் இறங்கினார் ஆனால் வெற்றி கைநழுவிக்கொண்டே சென்றது அப்போது மன்னருக்கு தேரோட்டியாகச் சென்ற அர்ச்சுனன் அவர்களுக்கு உதவும் பொருட்டு தனது காண்டீபத்தை கையில் எடுத்தான். வெற்றி நொடியில் அவர்கள் வசம் வந்தது.

கிராம மக்கள் அனைவரும் வியப்புடன் அர்ச்சுனனை நோக்க, அங்காதவாச தொடக்கத்தில் தனது காண்டீபத்தை வன்னி மரத்தடியில் ஒளித்து வைத்திருந்ததாகவும் இன்றோடு அது முடிவுக்கு வந்துவிட்டதால் தனது சுய அடையாளத்தை வெளிப்படுத்தி தங்களுக்கு உதவ முன் வந்ததாகவும்  விளக்கம் அளித்தான்.

இக்காட்சியை  நினைவுறுத்தவே விஜயதசமியன்று உற்சவர் வன்னி மரத்தடியில் இருந்து வில் அம்புடன் விஜயம் செய்கிறார்.

சொன்னவர் - துளசி 

Comments

Popular posts from this blog

அவதாரங்களின் முடிவு - நரசிம்ம அவதாரம்

கண்ணன் வந்தான் எங்கள் கண்ணன் வந்தான்

அயோத்திக்கும் திருவரங்கத்திற்கும் உள்ள தொடர்பு ..