Posts

சூரியன்

கஷ்யப மஹரிஷிக்கும் அதிதிக்கும் பிறந்த சூரியன் ஒன்பது கிரகங்களில் முதன்மையானவன். மையத்தில் அமர்ந்திருக்கும் அவனையே  அனைத்து கிரகங்களும் சுற்றி வருகின்றன. இதையே அறிவியலும் வலியுறுத்துகிறது. சூரிய திசையில் ஜனித்தவர்களும் அவன் பார்வை தம் கிரகத்தின் மேல் படும் வாய்ப்பு பெற்றவர்களும் குன்றா  ஒளி வெள்ளத்தால் சூழப்பட்டு பொலிவுடன் காணப்படுவர் . பஞ்ச பூதத்தின் அம்சமான சூரியனை நாம் வாழும் பூமியிலிருந்தே உணரவும் பார்க்கவும் முடியும் என்பதும், இந்திய கலாசாரத்தில் மட்டுமல்லாது சீன, கிரேக்க நாடுகளிலும் சூரியனை கடவுளாக சித்தரிக்கின்றனர் என்பதும்   கூடுதல் சிறப்பு. ஏழு குதிரைகளும் ஒற்றைச் சக்கரமும் கொண்ட அவன் தேரை அருணன் செலுத்த சற்றும் ஓய்வின்றி இப்பிரபஞ்ச பெருவெளியை சுற்றி வருகின்றான் சூரியன். அவ்வேழு குதிரைகளே நாம் காணும் வானவில். சூரியனுக்கு சந்தியாவில் பிறந்த குழந்தைகள் மூவர். மனு, யமன், யமி. மனு மனிதரில் படைக்கும் திறனை அளிக்க, யமன் கடைசி கட்டத்தில் அழைத்துக் கொண்டு செல்ல வருகிறான். யமுனை நதியாக பொங்கி ஓடுபவள் யமி. சூரியனுடனான தம் வாழ்கை சந்தியாவிற்கு சலிப்ப...

சந்திரன்

ஒன்பது கிரகங்களிலேயே அழகும் வசீகரமும் கொண்டவன் சந்திரன். நாம் வாழும் பூமியில் இருந்தே இக்கிரகத்தைக்  கண்குளிரக்  காணலாம். அழகு இருக்கும் இடத்தில் ஆணவம் குடிகொள்வதும் அது அழிவை நோக்கி நம்மை அழைத்துச் செல்வதும் உலக வாடிக்கை. சந்திரனும் அதற்கு விதிவிலக்கு அல்ல. நடந்தது என்ன?! அறிந்து கொள்வோமா?! தட்ஷனின் மகளான ரோகிணியின் மேல் காதல் கொண்ட சந்திரன்  தட்ஷனிடம் தனது விருப்பத்தைத்  தெரிவித்தான். ரோகிணியைச் சேர்த்து  தட்ஷனுக்கு 27 புத்திரிகள் இருந்தனர். அனைவரும் சந்திரனின் அழகில் மயங்கி அவனையே திருமணம் செய்து கொள்ள ஆசை கொண்டனர். தட்ஷனும் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி வைத்தான். சந்திரன் தனது காதலியின் கரம் பிடிக்க வேறு வழி தெரியாமல் அவளின் சகோதரிகள் அனைவரையும் மணக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானான் ஆனால்  அவன் ரோகிணியிடம் மட்டுமே அதிக பிரியத்துடன் நடந்து கொண்டான். பொறுத்துப் பார்த்த சகோதரிகள் மனம் உடைந்து தங்களது  தந்தையிடம் முறையிட்டழுதனர். தட்ஷனும் சந்திரனிடம் தனது மகள்களின் குறையைக் கூற...சந்திரனோ தனது மனதை மாற்றிக்கொள்ள மறுத்து விட்டான். கோபத்...

சுக்கிரன்/ வெள்ளி

சுக்கிரன் என்றதும் நம் நினைவிற்கு வருவது சுக்கிர திசை தான். அதிர்ஷ்டம் நம் பக்கம் என்று எண்ண வைக்கும் இக்கிரகத்திற்கு அதிபதியானவர் சுக்ராச்சாரியார். நவகிரகங்களில் சந்திரனுக்கும் புதனுக்கும் நடுவே அமர்ந்திருக்கும் இவரை  வெள்ளி என்றும் அழைக்கின்றோம். இத்திசையில் பிறந்தோர் ஞானம் மிக்கவர்களாக இருப்பர் என்றும் இக்கிரகத்தின் பார்வை நம்மேல் படுமாயின் வாழ்வில் வளம் கூடும் என்றும்  நம்பப்படுகிறது . இனி சுக்கிரனின் கதையைப் பார்ப்போமா?! சப்த ரிஷிகளில் ஒருவரான பிருகுவிற்கும் பிருதைக்கும் மகனாகப் பிறந்தவர் சுக்ராச்சாரியார். ஓர் நாள் தன் தந்தையுடன் வேதம் கற்கச் சென்றிருந்தார். குடிலில் தனித்திருந்த பிருதையிடம் அடைக்கலம் அடைந்தனர் தேவர்களிடமிருந்து தப்பி ஓடிவந்த அசுரர்கள். அவர்களை தன்னிடம் ஒப்படைக்க கூறி பிருதையிடம் முறையிட்டான் இந்திரன். "தாயான நான் என்னிடம் தஞ்சம் அடைந்தவர்களைக்  கைவிட முடியாது" என்று பிருதை மறுத்து விட இந்திரன் காக்கும் கடவுள் ஹரியை அழைத்து வந்தான். அரக்கர்களை காத்த பிருதை  சுதர்சன சக்கரத்திற்கு பலியானாள். இதைக் கண்ட பிருகு முனி விண்ணளந...

யோக நரசிம்மர் - நரசிம்மர் ஜெயந்தி - மே 17, 2019

சப்தரிஷிகளில் ஒருவரான புலஸ்தியர் பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாளை நரசிம்ம அவதாரத்தில் காண விருப்பம் கொண்டார். அதன் பொருட்டு அடர்ந்த காட்டிலுள்ள குன்றின் மேல் அமர்ந்து தவமியற்றத் துவங்கினார். அவ்வனத்தில் வசித்த மலை வேடன் ஒருவன் அவருக்காக கனிகளை பறித்து வந்து அவர் முன் வைத்துவிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். தவத்தில் மூழ்கியிருந்த புலஸ்தியரோ அவன் யார் என்பதை அறிந்திருக்கவில்லை. ஓர் நாள் தவத்திலிருந்து விழித்துக் கொண்ட புலஸ்தியரை  கண்ட வேடன் அவர் முன் வணங்கி "உங்கள பார்த்தா பெரிய சாமி மாதிரி தெரியுறீங்க...ரொம்ப நாளா இங்க எதுக்குயா உக்காந்து சாமி கும்புறீங்க?!" என்று தனது அறியாமையையும் சந்தேகத்தையும் வெளிப்படுத்தினான். கனிவே வடிவாகிய புலஸ்தியரோ ஆழிவண்ணனின் நரசிம்ம வடிவத்தைக் காணும் பொருட்டே அங்கு தவத்தில் ஈடுபட்டுள்ளதாக விளக்கிக் கூறினார். குரு உபதேசம் போல் அவர் உரைத்ததைக்  கேட்டறிந்த வேடன் "அப்பிடியா ?!...நாம கூப்புட்டா சாமி வருமா?!" என்று அதிசயித்தான். சிங்க முகமும் மனித உடலும் கொண்டவர் கடவுளா?! என்று ஆச்சர்யம் கொண்டான். "சாமி நான் இந்த கா...

ராகு கேது

ராகு காலம், ராகு கேது பெயர்ச்சி , அதன் பலன்கள் பரிகாரங்கள் என்று நவகிரகங்களில் சனிக்கு வலம் இடமாக அமர்ந்திருக்கும் ராகு கேதுவை அறிந்திருக்கிறோம். ஆனால் ராகுவின் பின்புலம்  நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் ?! அறிந்துகொள்வோமா!!! மந்திர மலையை மத்தாகவும் வாசுகி என்னும் நாகத்தை கயிறாவும் கொண்டு பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுக்கவும் அதை உண்டு இறவாநிலையை  அடையவும் தேவர்களும் அசுரர்களும் விண்ணளந்தோனின் தலைமையில் முடிவெடுத்தனர். விஷ்ணு தன்னை கூர்மமாக மாற்றிக்கொண்டு தன் மேல் மந்திர மலையைத் தாங்கிக்கொள்ள கடைதல் தொடங்கியது. பல்வேறு அரிய பொருட்கள் பார்கடலில் இருந்து வெளிவந்தது. அதிலிருந்து வெளிப்பட்ட லக்ஷ்மியை மகாவிஷ்ணு தன் நெஞ்சில் ஏந்தி தாரமாக ஏற்றுக்கொண்டார். அந்நாள் பங்குனி உத்திரமாக கொண்டாடப்பட்டது. கற்பக விருட்சம், காமதேனு, ஐராவதம் என்று வெளிவந்த அனைத்தையும் தேவர்களே சொந்தமாக்கிக்கொள்ள அசுரர்கள் ஏமாற்றமடைந்தனர் ஆனால் அமிர்தத்திற்காக பொறுத்துக்கொண்டனர். நஞ்சை சடைமுடியான் விழுங்கி அகிலத்தைக் காக்க கடைசியில் அமிர்தம் வெளிப்பட்டது. எங்கே தேவர்கள் இதையும் அபகரித்து விடுவ...

ராம நவமி

பாற்கடலில் வாசம் செய்யும்  பரந்தாமன் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் தசாவதாரங்களிலேயே கருணையும் கனிவும் நிரம்பியவர் தசரத மைந்தன் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியே என்றால் அது மிகையாகாது. சக மனிதர்களிடத்து மட்டுமின்றி அனைத்து உயிரினத்திடமும் கரிசனம் மிக்க  மனிதராக அவதரித்தவர் ராகவ ராமன். தன் தந்தையின் கட்டளையை ஏற்று சித்திரகூடம் என்னும்  வனத்தில் வாசம் செய்து கொண்டிருந்தார்  ராமர். ஓர் நாள் தனது துணைவி சீதையோடு கோதாவரி நதியில் நீராட சென்று கொண்டிருந்த சமயம் வழியில் கிடந்த முள் சீதையின் பாதத்தில்  தைக்க மேலும் நடக்க இயலாமல் அங்கிருந்த பாறையின் மேல் அமர்ந்துவிட்டாள். "எருக்களைப் பூவிலிருந்து வடியும் பாலை ஊற்றினால் முள் தானாகவே வெளி வந்துவிடும். இங்கேயே அமர்ந்திரு...வந்து விடுகிறேன்" என்று கூறிவிட்டு அச்செடியைத் தேடி விரைந்தார் ராமர். சிறிது நேரத்தில் அச்செடி அவர் கண்களில் படவே அதனருகே சென்றவர் சக மனிதனைப் போல் அதனிடத்தே அன்போடு  பேசினார். பாசத்தோடு தடவிக் கொடுத்தார். பின் தனக்கு நிகழ்ந்தவற்றை எடுத்துக் கூறி அதன் மலர்களைக் கொய்ய அனுமதி கோரினார். அச்செடியும்...

உ(யு )காதிப் பண்டிகை

வாரணாவத அரக்கு மாளிகையை எரியூட்டி சுரங்கப் பாதை வழியாக விதுரரின் உதவியில் தப்பிய பாண்டவர்கள் இடும்ப வனத்தில் சில காலம் வாழ்ந்து வந்தனர் . கௌரவர்களின் சதியிலிருந்து தாங்கள் தப்பியதை யாரும் தெரிந்து கொள்ளாதிருக்கவும் தங்கள் சுய அடையாளத்தை மறைக்கும்  பொருட்டும்  அந்தணர்கள் போல் மாறுவேடமிட்டு ஏகசக்கராநகர் என்னும் கிராமத்திற்கு வந்தனர் பாண்டவர்களும் குந்தியும் . அங்கு ஓர் பிராமணர் அவர்களுக்கு தன்னுடைய வீட்டில்   தங்க அனுமதி அளித்தார்.  ஒரு நாள் இரவு அந்தணரும் அவர் மனைவியும் எதோ தங்களுக்குள் பேசிப் புலம்பிக் கொண்டிருப்பதையும் அதைத் தொடர்ந்து மனைவியின் அழுகுரல்  ஓசையையும் குந்தி கேட்க நேர்ந்தது . அவர்களிடம் நடப்பதென்ன என்பதை அறியும் பொருட்டு குந்தி வினவினார் . அதற்கு அந்தணர் ஏகசக்கராநகரில் சிறிது நாட்களாக பகாசுரன் என்ற அரக்கன் அட்டூழியம் செய்து வருவதாகக் கூறினார். "அவன் கிராமத்தில் புகுந்து மனிதர்களையும் கால்நடைகளையும் வேட்டையாடி எங்கள் குடிசைகளை துவம்சம் செய்து கொண்டிருந்தான் . எவராலும் அவனை வெல்ல முடியவில்லை இறுதியில் எங்கள் அரசர் அவனிடம் ஓர் உடன...