சந்திரன்
ஒன்பது கிரகங்களிலேயே அழகும் வசீகரமும் கொண்டவன் சந்திரன். நாம் வாழும் பூமியில் இருந்தே இக்கிரகத்தைக் கண்குளிரக் காணலாம். அழகு இருக்கும் இடத்தில் ஆணவம் குடிகொள்வதும் அது அழிவை நோக்கி நம்மை அழைத்துச் செல்வதும் உலக வாடிக்கை. சந்திரனும் அதற்கு விதிவிலக்கு அல்ல. நடந்தது என்ன?! அறிந்து கொள்வோமா?!
தட்ஷனின் மகளான ரோகிணியின் மேல் காதல் கொண்ட சந்திரன் தட்ஷனிடம் தனது விருப்பத்தைத் தெரிவித்தான். ரோகிணியைச் சேர்த்து தட்ஷனுக்கு 27 புத்திரிகள் இருந்தனர். அனைவரும் சந்திரனின் அழகில் மயங்கி அவனையே திருமணம் செய்து கொள்ள ஆசை கொண்டனர். தட்ஷனும் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி வைத்தான். சந்திரன் தனது காதலியின் கரம் பிடிக்க வேறு வழி தெரியாமல் அவளின் சகோதரிகள் அனைவரையும் மணக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானான் ஆனால் அவன் ரோகிணியிடம் மட்டுமே அதிக பிரியத்துடன் நடந்து கொண்டான். பொறுத்துப் பார்த்த சகோதரிகள் மனம் உடைந்து தங்களது தந்தையிடம் முறையிட்டழுதனர். தட்ஷனும் சந்திரனிடம் தனது மகள்களின் குறையைக் கூற...சந்திரனோ தனது மனதை மாற்றிக்கொள்ள மறுத்து விட்டான்.
கோபத்தில் கொந்தளித்த தட்ஷனின் கண்களை தந்தை பாசம் மறைத்தது.
"உனது அழகிய தோற்றத்தினால் தானே அகங்காரம் கொண்டலைகிறாய்...இன்று முதல் நீ சிறிது சிறிதாகத் தேய்ந்து...முற்றிலும் இல்லாமல் ஆவாய்" என்று சபித்துவிட்டார். அன்றிலிருந்து தேய்பிறை ஆரம்பம் ஆனது. செய்வதறியாது திகைத்த ரோகிணி அழுது அரற்றினாள். கடைசியாக கணவன் மனைவி இருவரும் கைலாயநாதன் சிவபெருமானின் திருவடியைச் சரணடைந்தனர்.
மூன்றாம் பிறையாக இருந்த சந்திரனை தனது சடைமுடியில் ஏந்திய மகேஸ்வரன் கங்கைக்கு அருகே அமர்த்திக் கொண்டார். பின் "கவலை வேண்டாம்...தட்ஷனின் சாபத்தை மாற்ற இயலாது ஆகையால் சிறிது சிறிதாகத் தேய்ந்து மறைந்தாலும் மீண்டும் வளரும் வரத்தைப் பெறுவாய். மாதத்தில் ஓரிரு நாட்களே நீ முழு நிலவாகக் காட்சி தர இயலும்" என்று கூறி சந்திரனை முழு அழிவிலிருந்து காத்தார் நீலகண்டன். அன்றிலிருந்து வளர்பிறையும் தேய்பிறையுமாக சந்திரனின் வாழ்கை மாறியது.
சந்திரனின் ஆணவத்திற்கு கூற்றாக மற்றுமொரு கதையும் உண்டு.
ஓர் நாள் ஆனைமுகன் விநாயகனைக் கண்ட சந்திரன் அவருடைய முகத்தையும் உடல் அமைப்பையும் கேலி செய்தான். அழகிற்கு இலக்கணமான தன்னை பற்றி பெருமை பாடினான். பொறுத்துப் பார்த்த கணேசன் பொறுமை இழந்தார். ஆத்திரத்தில் தனது தந்ததில் ஒன்றை உடைத்து சந்திரனின் முகத்தில் விட்டெறிந்தான். கீறல் விழுந்த முகத்தோடு அலறியபடி கீழே விழுந்த சந்திரனிடம் " இனி உன் முகம் முழுப் பொலிவோடு இருக்காது...சிறிது சிறிதாகத் தேயும் உன்னை காண்பவர்களை தோஷம் பற்றிக் கொள்ளும் " என்று சபித்தார். தனது தவறை உணர்ந்து மன்னிப்புக் கோரிய சந்திரனிடம் "நான்காம் பிறையை நோக்குபவர்கள் மட்டுமே பாதிக்கப்படுவார்கள். சதுர்த்தி நாளன்று விரதமிருந்து என்னை சரணடைபவர்கள் அத்தோஷத்திலிருந்து விடுபடலாம் " என்று ஆசி வழங்கினார்.
பௌர்ணமி நாளின் முழு நிலவில் நாம் காணும் குண்டும் குழியும் விநாயகரின் தந்ததால் ஏற்பட்ட பாதிப்பே !!!
சந்திர திசையில் பிறந்தவர்களுக்கும் இதே பலன்கள் தான். அழகும் புகழும் நிறைந்தவர்களாக இருந்தாலும் அவை வளர்வதும் தேய்வதுமாகத்தான் இருக்கும். ஆணவத்திலிருந்து விடுபடுவதன் மூலம் அழிவிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ளலாம்.
சொன்னவர் : துளசி
தொடரும்...

Comments
Post a Comment