ராம நவமி
பாற்கடலில் வாசம் செய்யும் பரந்தாமன் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் தசாவதாரங்களிலேயே கருணையும் கனிவும் நிரம்பியவர் தசரத மைந்தன் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியே என்றால் அது மிகையாகாது. சக மனிதர்களிடத்து மட்டுமின்றி அனைத்து உயிரினத்திடமும் கரிசனம் மிக்க மனிதராக அவதரித்தவர் ராகவ ராமன்.
தன் தந்தையின் கட்டளையை ஏற்று சித்திரகூடம் என்னும் வனத்தில் வாசம் செய்து கொண்டிருந்தார் ராமர். ஓர் நாள் தனது துணைவி சீதையோடு கோதாவரி நதியில் நீராட சென்று கொண்டிருந்த சமயம் வழியில் கிடந்த முள் சீதையின் பாதத்தில் தைக்க மேலும் நடக்க இயலாமல் அங்கிருந்த பாறையின் மேல் அமர்ந்துவிட்டாள். "எருக்களைப் பூவிலிருந்து வடியும் பாலை ஊற்றினால் முள் தானாகவே வெளி வந்துவிடும். இங்கேயே அமர்ந்திரு...வந்து விடுகிறேன்" என்று கூறிவிட்டு அச்செடியைத் தேடி விரைந்தார் ராமர். சிறிது நேரத்தில் அச்செடி அவர் கண்களில் படவே அதனருகே சென்றவர் சக மனிதனைப் போல் அதனிடத்தே அன்போடு பேசினார். பாசத்தோடு தடவிக் கொடுத்தார். பின் தனக்கு நிகழ்ந்தவற்றை எடுத்துக் கூறி அதன் மலர்களைக் கொய்ய அனுமதி கோரினார். அச்செடியும் தென்றலில் அசைந்து அதன் இசைவைத் தெரிவித்தது அதன் பின்னரே அதன் மலர்களைப் பறித்தார்.
காலங்கள் கடந்தோடின. சீதை கடத்திச் செல்லப்பட்டாள்.
சீதையைக் கவர்ந்து சென்றவன் இலங்கை வேந்தன் இராவணன் என்று அறிந்த பின்னர் ஜானகியை மீட்க இலங்கையின் மேல் படை கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. அதன் பொருட்டு சமுத்திரத்தின் மேல்
வாணரங்களின் உதவியோடு பாலம் அமைக்கப்பட்டது. ஒருவர் பின் ஒருவர் செல்லும் வண்ணம் கரும் பாறைகளால் ஆன பாலத்தில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி நடந்து செல்ல அவரது தரிசனத்தைக் காண கடலில் வாழும் அனைத்து உயிரினங்களும் முந்தி அடித்தன. அவரின் மென் பாத அழகைக் கண்ட மீனினங்கள் தங்களை மறந்த பக்திப் பரவச நிலையை அடைந்திருந்தன. அதன் கூரிய வாயை தண்ணீருக்கு வெளியே காட்டிய வண்ணம் நெருக்கமாக நின்றிருந்த மீனினங்களை கரையிலிருந்து பார்ப்பதற்கு பாலத்தின் நீட்சி போல காட்சி அளித்ததன. ராமரைத் தொடர்ந்து வந்த வாணரப்படைகள் அதன் மேல் நடந்து கண்ணிமைக்கும் கணத்தில் மறுகரையை அடைந்தன.
ராமாவதாரத்தின் போது பகவான் விஷ்ணு எவ்வாறு சகல உயிரிடத்தும் ஈடு இணையற்ற அன்பைப் பொழிந்தாரோ அதற்கு இணையான அன்பையும் பக்தியையும் அவ்வுயிரினங்களும் அவரிடத்தே கொண்டிருந்தன என்பதையே இவ்விரு நிகழ்வுகளும் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன.
ராமர் அவதரித்த "ராம நவமி" நாளிலிருந்தாவது அனைவரிடத்தும் அன்பும், பரிவும், சகிப்புத்தன்மையும் கொண்டவர்களாக நம்மை மாற்றிக் கொண்டு ...அனைத்து உயிரினங்களும் மகிழ்வுடன் வாழ்வதற்கு ஏற்ற இடமாக இப்புவியை மாற்றுவோம்!!! ஜெய் ஸ்ரீ ராம் !!!

Comments
Post a Comment