Posts

விஜய தசமி

ஒவ்வொரு வருடமும் விஜய தசமியன்று பெரும்பாலான கோவில்களில் உற்சவர்- கையில் வில் அம்புடன் வீதி உலா வருவது, காலம் காலமாக  பின்பற்றப்பட்டு வரும் நிகழ்வு . அவ்வாறு வரும் உற்சவர் கோவிலுக்கு அருகில் காணப்படும் வன்னி மரத்தடியில் சிறிது நேரம் அமர்ந்து விட்டு உலவுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். விஜயதசமி என்றாலே அதர்மத்திற்கெதிரான தர்மத்தின்  வெற்றி, நீதியை நிலைநாட்ட அவதாரங்கள் அரக்கர்களை எதிர்த்து நடத்தும் போர் என்றெல்லாம் அனைவரும் அறிந்திருந்தாலும் உற்சவர் அமர  ஏன் வன்னி மரத்தடியை தெரிவு செய்கிறார்?! அதற்கான பின்புலக் கதை  இதோ ... கௌரவர்களிடம் சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் 13 வருடம் காடேக வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதில் கடைசி வருடம் தங்கள் சுய அடையாளத்தை துறந்து  அங்காத வாசம் செய்யவேண்டும் . அவர்கள் இருக்கும் இடமோ அவர்களைப் பற்றியோ ஒற்றர்கள் மூலம் அறிய முடியுமானால் அவர்கள் அடுத்த 13 வருடமும் நாடு புகமுடியாது என்று உறுதி செய்யப்பட்டது. கௌரவர்களோ அங்காத வாசத்தில் பாண்வர்களை கண்டிபிடித்தே ஆக வேண்டும் என்று கடும் சதி செய்தனர். அவர்கள் ஒளிந்திர...

நவராத்திரி

வருடந்தோறும் புரட்டாசி அமாவாசையை அடுத்த  ஒன்பது தினங்களில்  இப்புடவிற்கே அன்னையரான   முப்பெரும் தேவியரை வணங்கி வழிபடும் , கொண்டாடப்படும் விழவையே நவராத்திரி என்றழைக்கிறோம். அன்னை துர்கா தேவி மகிஷாசுரனை ஒன்பது நாட்கள் போரிட்டு  வதம் செய்த தினம் என்றும் நிம்பன் குசும்பன் உள்ளிட்ட அரக்கர்களை அழித்த நாள் என்றும்  ரகுகுல  ராமன் சக்தியை இந்நாட்களில் வழிபட்டு அவள் அளித்த சக்தியால் இராவணனை வதம் செய்தான் ஆதலால் விஜயதசமி என்றும்  பல்வேறு காரணங்களாலும் பெயர்களாலும் நவராத்திரி அறியப்பட்டாலும் "அதர்மத்தை தர்மம் வென்று நீதியை நிலைநாட்டும் நாள் நவராத்திரி " என்பதே மூலக்கருத்து.  நவராத்திரி கொண்டாடப்படுவதன் நோக்கம்  பலரும் அறிந்ததே எனினும் பரவலாக அறியப்படாத காரணம் ஒன்று உண்டு. அவையாவது : புரட்டாசி மாதம் பித்ருக்களின் மாதம் என்றழைக்கப்படுகிறது ஆகவே இம்மாத அமாவாசை மஹாளய அமாவாசையாக அனுசரிக்கப்பட்டு பித்ரு தமர்பனம் செய்யப்படுகிறது . இக்காலகட்டத்தில் ஆன்மாக்கள் தங்கள் வாழ்ந்த மண்ணுலகை நோக்கி வருவார்கள் என்றும்  நம்பப்படுகிறது. அவ்வாறு வ...

பிட்டுக்கு மண் சுமந்த படலம் 19-08-2021

முன்னொரு காலத்தில் மதுரையை பாண்டியன் ஆண்ட சமயத்தில் எதிர்பாரா விதமாக வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. நிலைமையை சீர்செய்யவும் கரை புரண்ட வெள்ளம் நகருக்குள் புகாமல் இருக்கவும், கரையை பலப்படுத்தும்   பணிகள் துவங்க இருப்பதாக  அரசாங்க ஆணை வெளியானது. பறை அறிவித்தபடி வந்த காவலன் " அனைவர் வீட்டிலிருந்து குறைந்தபட்சம் ஒருவராவது கரை அமைக்கும் பணியில் ஈடுபட வேண்டும்...இல்லையேல் கடுமையாகத் தண்டிக்கப்படுவீர்...இதற்கு யாரும் விதிவிலக்கல்ல  " என்று வீதி வீதியாகச் சொல்லிக் கொண்டே சென்றான். அந்நகரில் பிட்டு விற்று பிழைப்பு நடத்தும் வந்தி என்ற கிழவி சாமிக்கு  பிட்டை நெய்வேத்தியமாக வைத்தவாறு "சொக்கநாதா...இது என்ன சோதனை...என் வீட்டில் என்னைத் தவிர வேறு  யாரும் இல்லை...என்னால் இக்காரியங்களை செய்ய இயலாதே...என்ன செய்வது, நீதான் என்னைக் காப்பாற்ற வேண்டும்" என்று அழுது புலம்பினாள். அடுத்த நொடி  வாசலில் யாரோ அவளை அழைக்கும் குரல் கேட்டது. வாட்ட சாட்டமான இளைஞன் ஒருவன் "பாட்டி...நான் வெளிஊர்ல இருந்து வர்றேன்..இன்னைக்கு ராத்திரி மட்டும் உன் திண்ணையில படுத்துக்க...

குருவாயூரப்பா...குருவாயூரப்பா !!!

பரந்தாமர் விஷ்ணு பூலோகத்தில் கிருஷ்ணராக அவதரித்தார் . கோகுலத்தில் வளர்ந்து வந்த  அவரை தரிசிக்கவும் பூஜிக்கவும் அனுதினம் தேவர்கள் தேவலோகத்தில் இருந்து வருவது வாடிக்கையாக இருந்தது. அவ்வாறு ஓர் நாள் குருவும் வாயுவும் வருகை தந்திருந்தனர். செல்லக் கண்ணனின் குறும்புக கண்களையும் தேனொழுகும் புன்னகையையும் கண்ட அவர்கள் தங்கள் முன் குழந்தை வடிவில் இருப்பவர் பரம் பொருள் என்பதையும்  மறந்து அக்குழந்தையை கையில் அள்ளிக்  கொஞ்சினர். பல்வேறு விளையாட்டுகள் செய்து அவனழகில் தங்களையே மறந்தனர் . குருவோ கிருஷ்ணனை தோளில் தூக்கிக் கொள்ள வாயுவோ தன் பலத்தால் அவர்களை பறக்கச் செய்து கண்ணாமூச்சி காட்டினான் . இருவரும் இணைந்து கிருஷ்ணருக்கு அமுது ஊட்டினர் . அவ்வாறு பகவான் வாயுவோடும் குருவோடும்  க்ஷண நேரத்தில் பறந்து சென்று அமர்ந்த இடம் தான் குருவாயூர். பல ஆண்டுகளுக்கு முன் குருவாயூரில் பூசகராக இருந்த பிராமணர் ஒருவர் வெண் குஷ்ட நோயால் அவதியுற்று வந்தார். பல்வேறு சிகிச்சைகள் செய்தும் பலனில்லாமல் அக்கிராமத்தில் வாழ்ந்த மருத்துவரிடம் அழைத்து வந்தனர். அவரை சோதித்த மருத்துவரோ மிகுந்த தயக்கத்திற...

செவ்வாய் மற்றும் வியாழன்

இன்றைய காலகட்டத்தில் செவ்வாய் கிரகத்தின் மீதே அதிகப்படியான ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. செயற்கைக் கோள்கள் மற்றும் விண்கலங்களின் உதவியால் அங்கு மனிதன் உயிர் வாழ்வதற்கான  வாய்ப்புகள் உள்ளனவா என்றும் ஆராயப்பட்டு வருகிறது. சிவப்பு கிரகம் என்ற புனைப் பெயர் கொண்ட இச்செவ்வாய் கிரகம் நவகிரகங்களில் சூரியனின் இடப்புறம் அமர்ந்துள்ளான். அவனின் பின்புலம் என்ன?! அறிவோமா?! பனி மூடிய கைலாயத்தின் குளுமையில் குடி கொண்டிருந்தாலும் ருத்ரனின் கோபம்  நாம்  அனைவரும் அறிந்த ஒன்றே. எல்லைமீறிய சினத்தால் கைலாயன் நெற்றிக்கண்ணை திறந்தானென்றால்  அதிலிருந்து வெளிவரும் வெப்பத்தைத் தாள ஒருவராலும் இயலாது...பார்வதி தேவி உட்பட. அப்பேற்பட்ட  முக்கண்ணன் சிவபெருமான் கோபத்தில் கொந்தளித்த போது அவர் கண்களில் வழிந்த   கண்ணீரிலிருந்து (வேர்வை , ரத்தம் என்றும் கூறுவர்) தோன்றியவர் செவ்வாய் ஆதலால் சிவப்பு நிறம் கொண்டவர் ஆனார். அனல் வடிவான இவருக்கு "அங்காரகன்" என்ற மற்றொரு பெயருமுண்டு. இச்செவ்வாய் திசையில் பிறந்தவர் கடும் கோபக்காரராக இருப்பர். நற்...

சனி

நவகிரகங்களைப் பற்றி அதிகம் தெரியாதவர்களும் அறிந்து கொள்ளும் ஆர்வம் அற்றவர்களும் கூட  இவனை அறிந்திருப்பர் காரணம் தயவு தாட்சண்யம் இன்றி அவரவர் கர்ம வினைக்கேற்ப இவன் அளிக்கும் பலன். சினம் மிக்கவனாக இவன் பிடியிலிருந்து யாரும் தப்பவே முடியாது. கண்டுபிடித்து விட்டீர்கள் தானே?! ஆம் உங்கள் கணிப்பு சரியே?! நவகிரகங்களில் ராகுவிற்கும் கேதுவிற்கு நடுவே அமர்ந்திருக்கும் சனி பகவானே அவன்!!! அஷ்டம சனி, ஏழரை நாட்டு சனி என்று இவன் ஏன் நம்மை பாடாய் படுத்துகிறான்?! மேலே படியுங்கள். சூரியனுக்கும் அவன் மனைவி சந்தியாவின் நிழல் உருவான சாயா தேவிக்கும் பிறந்தவன் சனி. தாய்ப்பாசம் மிக்கவன். நிழலுக்கு பிறந்தவனாதலால் கருமை நிறம் கொண்டான் ஆனால் சூரியனின் ஞானம் கிடைக்கப்பெற்றவன் ஆனான். கானகம் சென்ற சந்தியா தன் இருப்பிடம் திரும்ப, நிழல் வடிவான சாயா மறைந்தாள். சந்தியாவையே தன் தாய் என நினைத்த சனிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சந்தியாவின் புதல்வனான யமன் தன் தாயை சனியுடன் பங்கிட்டுக் கொள்ள விரும்பவில்லை. சந்தியாவும் அவனைத் தன்  புதல்வனாக ஏற்கவில்லை. தாய்ப்பாசத்திற்கு ஏங்கித் தவித்த சனி தன் சுற்றத்தார் அனைவ...

புதன்

"பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது " என்பது பழமொழி. அப்பெருமைக்குரிய புதன் திசையில் பிறந்தவர்கள் புத்திசாலிகளாகவும் சூழ்நிலையை அனுசரித்து வாழத்தெரிந்தவர்களாகவும் இருப்பர். இக்கிரகத்திற்குண்டான கதை என்ன?! தெரிந்து கொள்வோம். சந்திரனுக்கு, பிரகஸ்பதியின்(வியாழன்) மனைவியான தாராவில் பிறந்தவன் புதன். தன் விருப்பத்திற்கு மாறாக பிறந்ததால் தாரா புதனை கைவிட சந்திரனாலும் புறக்கணிக்கப்பட்டான். தாய் தந்தையரன்றி வளர்ந்தவன் தன் தனிமைக்குக் காரணமான சந்திரனை வெறுத்தான். இலா  என்ற அரசகுமாரியை மணந்தவனின் மண வாழ்க்கையின் மகிழ்ச்சியும் நீடிக்கவில்லை. இலாவின் பெற்றோர்கள் அவள் பிறப்பிற்கு முன் பல ஆண்டுகள்  புத்திரபாக்கியம் இன்றித்  தவித்தனர். இறுதியில் அரசாள வாரிசு வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் செய்தனர். யாகத்தில் மகிழ்ந்து அக்னியில்  தோன்றிய சிவன் அவர்களுக்கு என்ன வாரிசு வேண்டும் என்று கேட்க அரசி பெண் குழந்தை என்று தன்னை அறியாமல் கூறிவிட ...அவர்களுக்கு அழகான பெண்குழந்தை பிறந்தது. அரசனும் அரசியும் மகிழ்வுடன் மகவை ஏற்றுக்கொண்டனர் ஆனால் ஆண்டுகள் செல்லச் செல்ல நாடாள  மைந்தன்...