Posts

ஏரி காத்த ராமரும் பக்த ராமதாஸும்

Image
பக்த ராமதாஸ்  பத்ராச்சல ராமதாஸ் என்னும் பக்த ராமதாஸ் "கோபண்ணா" என்ற பெயரில்  இன்றைய தெலுங்கானா மாவட்டத்தின்  கம்மம்  என்னும் நகரில் 1600-களில் வாழ்ந்தவர். ராம பக்தனான இவர் ராகவ ராமனை போற்றி பல்வேறு பாடல்களை எழுதி கர்நாடக இசையில்  கீர்த்தனைகளாகப் பாடியுள்ளார். இளமை முதலே ராம பக்தனான ராம்தாஸ் இந்தியாவை முகலாய மன்னர்கள் ஆண்ட காலத்தில் அவர்களிடம் வரிவசூல் செய்யும் அதிகாரியாகப் பணியாற்றி உள்ளார். அச்சமயத்தில் பத்ராச்சல ராமர் கோவில் கட்டுமானப் பணிக்காக நிதி பற்றாக்குறை ஏற்பட தான் வசூல் செய்த வரிப்பணத்தை சற்றும் யோசிக்காமல் தந்து விட்டார். சில மாதங்களுக்குப் பின் இதை கண்டறிந்த அதிகாரிகள் ராமதாஸை சுல்தானின் முன் கொண்டு நிறுத்த அரசு நிதியை தவறாக கையாண்ட காரணத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார். 12 வருடங்கள் சிறையில் இருந்த காலத்தில் ராமனை எண்ணி பல்வேறு பாடல்களை பாடியதாக நம்பப்படுகிறது. பகவான் ராமரும் லக்ஷ்மணரும் அரசாங்கத்திற்கு தர வேண்டிய நிதியைத் தந்து சுல்தானிடமிருந்து அவரை விடுதலை செய்ததாக ஒரு கதையும் ஒளரங்கசீப்பின் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததால் அவர் விடுவிக்கப்பட்டார் என்...

Sri Ragavendhra - Sriman Natanagopala Nayaki Swamigal keerthanai

Rama Sri Raghu Nandhana Hari Ragavendra - 2 Nichu Raadhi Dhisumu Thorae Dhyanu Dhae Ragavendra Rama Sri Raghu Nandhana Hari Ragavendra  Nichu Raadhi Dhisumu Thorae Dhyanu Dhae Ragavendra Dasun Sengo Mogo Desthae Ghobbagu Ragavendra - 2 Thaiyai nhee jiyaeth me kogo hovu yaet Ragavendra thu Thaiyai nhee jiyaeth me kogo hovu yaet Ragavendra Maai Bhaab Guru dhev aski thus mogo Ragavendra - 2 Mi Pajae varam mogo therae Sri hari Ragavendra Maai Bhaab Guru dhev aski thus mogo Ragavendra  Mi Pajae varam mogo therae Sri hari Ragavendra Natanam Karae thorae charanu paje mogo Ragavendra - 2 Narayana Govindha gopala Ragavendra Hari Narayana Govindha gopala Ragavendra Ragavendra Ragavendra Ragavendra

அழகான பழனி மலை ஆண்டவா

அழகான பழனி மலை ஆண்டவா  - 2 உன்னை அனுதினமும் பாடவந்தேன் வேலவா  அழகான பழனி மலை ஆண்டவா   உன்னை அனுதினமும் பாடவந்தேன் வேலவா  வள்ளி மயில் நாதனே வா வடிவேலனே - 2 வர வேண்டும் மயில் மீது முருகய்யனே - 2 முருகா - 4 அழகான பழனி மலை ஆண்டவா   உன்னை அனுதினமும் பாடவந்தேன் வேலவா - 2 வெள்ளை திருநீறும் வெற்றி வடிவேலும் உள்ளத்தில் தோன்றுமே - 2 வெள்ளி மயில் ஏறி வேலன் வருவதை நெஞ்சம் காணுமே  வெள்ளை திருநீறும் வெற்றி வடிவேலும் உள்ளத்தில் தோன்றுமே  வெள்ளி மயில் ஏறி வேலன் வருவதை நெஞ்சம் காணுமே  எனை ஆளும் ஆண்டவனே எழில் வேலவா - 2 எளியேனும் உனை பாட அருள்வாய் அய்யா - 2 முருகா - 4 அழகான பழனி மலை ஆண்டவா   உன்னை அனுதினமும் பாடவந்தேன் வேலவா  அழகான பழனி மலை ஆண்டவா   உன்னை அனுதினமும் பாடவந்தேன் வேலவா  நல்லதெல்லாம் என்னை நாடிப் பெருகிட நல்லருள் செய்வாய் - 2 தீயதெல்லாம் உடன் தீய்ந்து கருகிட திருவருள் புரிவாய்  நல்லதெல்லாம் என்னை நாடிப் பெருகிட நல்லருள் செய்வாய்  தீயதெல்லாம் உடன் தீய்ந்து கருகிட திருவருள் புரிவாய்  உனையன்றி வேறில்லை...

அயோத்திக்கும் திருவரங்கத்திற்கும் உள்ள தொடர்பு ..

Image
கடந்த ஜனவரி மாதம் உத்திர பிரதேச மாநிலத்தில் ராமரின் ஜன்ம பூமியான  அயோத்தியில் பாரதப் பிரமர் மோடியால் ப்ராண பிரதிஷ்டை செய்யப்பட்டு  பால ராமர் கோவில்  திறக்கப்பட்டது நாம் அனைவரும் அறிந்ததே.!! தமிழகத்தின் திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் கோவிலில் பாற்கடல் வண்ணனாக வீற்றிருக்கும் ரங்கநாதர் அயோத்தியில் இருந்து வந்தவர் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?! தசரதனின் மைந்தன் ராகவ ராமன் இலங்கை வேந்தன் ராவணனை யுத்தத்தில் வென்று சீதையுடன் அயோத்திற்கு வருகிறான். அங்கு அவரின் பட்டாபிஷேகம் வெகு விமரிசையாக நிகழ்கிறது. அவ்விழாவிற்கு பல்வேறு அரசர்கள் வருகை புரிந்தனர் அவர்களுள் புதிதாக இலங்கை மன்னனாக முடி சூடியுள்ள விபீஷணனும் இருந்தான். அயோத்திக்கு அரசனான ராமர் அனைவருக்கும் அவரவர் விரும்பிய பரிசுகளை வழங்க தன்னை விட்டு பிரிய வேண்டியதை நினைத்து கலங்கிய விபீஷணனுக்கு விஷ்ணு பாற்கடலில் சஞ்சரித்த நிலையில் இருக்கும் சிலையை  இலங்கைக்கு கொண்டு செல்ல வழங்கி இனி இவர் உன்னை வழி நடத்துவார் என்று கூறினார். விபீஷணனும் அக மகிழ்ந்து  அச்சிலையை சுமந்த வண்ணம் ஆகாய மார்கமாக இலங்கைக்குச்  சென்றார...

அவதாரங்களின் முடிவு - நரசிம்ம அவதாரம்

Image
"நானே கடவுள் என்னை அன்றி யார் பெயரையும் உச்சரிக்க கூட அனுமதி இல்லை" என்று மூன்று உலகங்களையும் வென்று விட்ட மமதையில் இருந்த இரண்யகசிபுவிற்கு மகனாகப் பிறந்த பிரஹலாதன் ஹரியைத் தவிர வேறொரு நாமத்தை தனது  நா கூறாது என்று உறுதியுடன் இருந்து தனது உயிரையும் துறக்க தயாராக இருந்தான்.  "எங்கே உந்தன் நாராயணன்" என்று தந்தை வினவ " எங்கும் வியாபித்திருக்கும் பரந்தாமன் இந்த தூணிலும் இருப்பான்..எந்த துரும்பிலும் இருப்பான்" என்று கூறிய மைந்தன் முன் இரண்யகசிபு தூணை சுக்கு நூறாக உடைக்க அதிலிருந்து தோன்றிய நரசிம்மன் அவ்வரக்கனின் நெஞ்சைக் கிழித்து அவனின் கொடுமைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார் என்பது நாம் அனைவரும் அறிந்த கதை. கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்த நரசிம்மரின் ஆவேசம் அங்கு சாந்தமடையவில்லை. அரண்மனையை விட்டு வெளியேறிய சிங்கமுகன் அருகிலிருந்த காட்டில் புகுந்து துவம்சம் செய்தார். அங்கு வசித்துக் கொண்டிருந்த பழங்குடி மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டு பயத்தில் மறைந்து வாழத் துவங்கினர். காலங்கள் கடந்தது. தனது அவதாரத்தின் பலன் நிறைவடைந்த பிறகும் விஷ்ணு வைகுண்டம் திரும்பவ...

அவதாரங்களின் முடிவு - வராஹ அவதாரம்

Image
உலகில் அதர்மம் தன் எல்லயைக் கடக்கும்  சமயங்களில் எல்லாம் பகவான் விஷ்ணு அவதாரம் செய்து இப்பூவுலகை காப்பதும் அரக்கர்களை அழிப்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அவ்வாறு எடுக்கும் அவதாரங்கள் மனித அவதாரமாக இருக்கும் பட்சத்தில் தன்னுடைய கர்ம வினைகளுக்கு விதிக்கப்பட்ட வாழ்வை முழுவதுமாக வாழ்ந்து விட்டே பரந்தாமன் வைகுண்டம் திரும்புகிறார் என்பது ராம, கிருஷ்ண அவதாரங்களின் மூலம் நாம் அறிகிறோம் ஆனால் மிருக முகமும் மனித உடலும் இணைத்த அவதாரங்களான மச்ச, கூர்ம, வராஹ, நரசிம்ம அவதாரங்களில் என்ன நடந்தது?! அறிந்து கொள்வோமா!!! வராஹமாக அவதரித்து இரண்யாக்ஷனை வதம் செய்து பூமாதேவியை மீட்ட விஷ்ணு காட்டிற்குள் நுழைந்து அங்கு ஓர் பெண் பன்றியுடன் இணைந்து பல்வேறு பன்றிக் குட்டிகளை ஈன்று வாழ்ந்து கொண்டிருந்தார். ஜீவாத்மாவான இறைவனுடன் ஒன்றற கலந்த பெண் பன்றி சிறிது காலத்தில் தனது உயிரை விட்டது. தனது அவதார நோக்கத்தை நிறைவேற்றிய பின்பும் ஹரி  வைகுண்டம் திரும்பாமை கண்டு வருத்தமுற்ற தேவர்கள் அவரை அழைத்து வருவதற்காக பூலோகம் சென்றனர். அங்கு தனது குட்டிகளுடன் சேற்றிலும் புழுதியிலும் பிரண்டு கொண்டு மலத்தை ருசித்து உண்ட...

பங்குனி உத்திரம்

Image
மந்தர மலையை மத்தாகவும் வாசுகி பாம்பை கயிறாகவும் கொண்டு மும்மூர்த்திகளின் தலைமையில்  பாற்கடலை கடைய முடிவெடுத்தனர் தேவர்களும் அசுரர்களும். மந்தரமலை சமுத்திரத்தில் நிலையாக நிற்கும் பொருட்டு கூர்மமாக தன்னை மாற்றிக் கொண்ட பரந்தாமன் தன்னுடைய முதுகின் மேல் (ஆமை ஓட்டின்) மந்தர மலையைத் தாங்கிக் கொண்டார். பாற்கடலில் இருந்து வெளிப்படும் அமிர்தத்தை தேவர்களும் அசுரர்களும் சமமாக பங்கிட்டுக் கொள்வதாக முடிவு செய்யப்பட்டது. பாற்கடலில் இருந்து பல்வேறு வஸ்துக்கள் வெளிப்பட்டன அத்தோடு அதிலிருந்து தோன்றினாள் மஹாலக்ஷ்மி. அவரை கரம் பிடித்து தனது நெஞ்சில் அமர்த்தினார் பரந்தாமன். இப்பங்குனி உத்திர நாளில் தான் மஹாலஷ்மி பாற்கடலில் இருந்து வெளிப்பட்டார் என்பதால் இந்நாளை "மஹாலக்ஷ்மி ஜெயந்தி" ஆகவும் அனுசரிக்கிறார்கள் அத்தோடு அனைத்து விஷ்ணு தலங்களில் பெருமாளுக்கும் லக்ஷ்மிக்கும் விஷேஷமாக மணவிழா நடைபெறுகிறது. இதே பங்குனி உத்திர நாளிலேயே முருகப்பெருமான் தெய்வானையை கைபிடித்ததாகவும் காஞ்சியில் சிவபெருமான் கௌரியை மணந்ததாகவும், கோதை நாச்சியார் விஷ்ணுவுடன் ஒன்றறக்  கலந்ததாகவும் கூறப்படுகிறது. சுவாமி ஐயப்பனும் இதே ...