ஶ்ரீராம காவியம் - புதிர் (ஏப்ரல் 21,2021 - ராம நவமி)
ஏப்ரல் 21,2021 இன்று ராம நவமியை முன்னிட்டு ராம காவியம் பற்றிய தகவல்களை கீழ்கண்ட கேள்வி பதில்கள் மூலம் அறிந்து கொள்வோமா?
தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளலாம்..தெரிந்தவர்கள் தங்கள் நினைவுகளிலிருந்து மீட்டுக் கொள்ளலாம் வாருங்கள் :) ஜெய் ஸ்ரீ ராம் 🙏
1) ராமாயணத்தை இயற்றியவர் யார்? - வால்மீகி மஹரிஷி
2) ராமாயணத்தில் மொத்தம் எத்தனை ஸ்லோகங்கள்? - 24,000
3) புத்திரர்களைப் பெற தசரதன் செய்த யாகம் எது? - புத்ரகாமேஷ்டி
4) ராமாயண காலத்தில் சரயு நதி – அதன் இன்றைய பெயர் என்ன? - ககரா (Ghagara)
5) கைகேயியுடன் அவர் அரண்மனையிலிருந்து கூடவே வந்த பணிப்பெண்ணின் பெயர் என்ன? - மந்தரை
6)மஹரிஷி வால்மீகியின் பூர்வ பெயர் என்ன? - ரத்னாகரர்
7) ராமாயணம் எந்த யுகத்தில் நடந்தது - த்ரேதா யுகம்
8) வாலி, சுக்ரீவரின் தந்தை பெயர் என்ன? - ரிக்ஷராஜன்
9) வசிஷ்டர் ஆஸ்ரமத்தில் இருந்த பசுவின் பெயர் என்ன? - சுரபி
10) ஜனக மன்னரின் இயற் பெயர் என்ன? - ஷீரத்வஜன்
11) அசோகவனத்தின் இன்னொரு பெயர் என்ன? - ப்ரமத வனம்
12) லக்ஷ்மணனைக் காப்பாற்ற அனுமன் கொண்டு வந்த மருந்தின் பெயர் என்ன? - சஞ்சீவினி மூலிகை
13) ராமாயணத்தின் இன்னொரு பெயர் என்ன? - புலஸ்த்ய வதம் அல்லது தசானனன் வதம்
14) இன்று வியாச நதி என்று அழைக்கப்படும் நதி ராமாயண் காலத்தில் என்ன பெயரில் அழைக்கப்பட்டது? - விபாஷா
15) லங்கையில் ராவணனின் குல தெய்வம் எங்கு வைக்கப்பட்டிருந்தது? - அசோக வனம்
16) ராமாயண காலத்தில் லவபுரம் என்று அழைக்கப்பட்ட நகரத்தின் இன்றைய பெயர் என்ன? - லாகூர்
17) தசரத மன்னரை அழைக்க அயோத்திக்கு ஜனகர் அனுப்பிய மந்திரியின் பெயர் என்ன? - சுதாமன்
18) ராமாயணம் மொத்தம் எத்தனை காண்டங்கள்? - ஏழு
19) ராமாயணத்தில் பெரிய காண்டம் எது? - யுத்த காண்டம்
20) ராமாயணத்தில் சிறிய காண்டம் எது? - ஆரண்ய காண்டம்
21) அமராவதி நகரின் அரசன் யார்? - இந்திரன்
22) இந்திரனின் யானையின் பெயர் என்ன? - ஐராவதம்
23) அஸ்வமேத யாகத்தில் குதிரையின் நெற்றியில் கட்டப்பட்டிருக்கும் பத்ரத்தின் பெயர் என்ன? - ஜய பத்ரம்
24) கலஹப்ரியர் என்று எந்த மஹரிஷுக்குப் பெயர்? - நாரதர்
25) சஞ்ஜீவினி மூலிகையை அனுமார் எடுத்து வந்த போது தூக்கி வந்த மலையின் பெயர் என்ன? -த்ரோண கிரி
26) மஹரிஷி விஸ்வாமித்திரர் உடலுடன் சொர்க்கத்திற்கு அனுப்பிய மன்னனின் பெயர் என்ன? - திரிசங்கு
27) கல்லாகப் போகக் கடவது என்று மனைவியை சபித்த முனிவரின் பெயர் என்ன? - கௌதமர்
28) சூரியனை பழம் என்று நினைத்து உண்ணச் சென்றவர் யார்? - ஹனுமான்
29) யமனுடன் போர் புரிந்த ராக்ஷஸன் யார்? - ராவணன்
30) ராம பட்டாபிஷேகத்தின் போது ஐந்து புனித நதிகளிலிருந்து நீர் கொண்டு வந்தவர் யார்? - ஜாம்பவான்
31)ராவணனை தன் மகனின் தொட்டிலில் ஆறு மாதங்கள் கட்டி வைத்திருந்த வீரன் யார்? - வாலி
32) விஸ்வாமித்திரர் ராமனை அழைக்க வந்த போது அவரிடம் தசரதன் தன் வயது எவ்வளவு என்று சொன்னார்? - 60000 வருடங்கள்
33) பத்தாயிரம் வீரர்களை ஒரே சமயத்தில் எதிர் கொள்ள வல்ல வீரனின் பெயர் என்ன? - அதிரதன்
34) ஒரே சமயத்தில் லக்ஷ்மணன் எத்தனை அம்புகளை விட வல்லவ்ன்? - 500
35) வால்மீகிக்கு அந்தப் பெயர் ஏன் வந்தது? - அவர் தவம் செய்த போது அவர் புற்றினால் மூடப்பட்டு இருந்ததால்
36) இந்திரஜித்தின் இயற்பெயர் என்ன? - மேகநாதன்
37) பத்து அவதாரங்களில் ராமாவதாரம் எத்தனையாவது அவதாரம்?
37) ஏழாவது
38) ராமரின் வனவாசம் எத்தனை ஆண்டுகள்?
38) 14
39) ராமர் திரும்பி வரும் வரை பரதன் எதை பூஜித்து அயோத்தியை ஆண்டு வந்தார்?
39) பாதுகை
40) சீதையைத் தேடி லங்கைக்குச் சென்றது யார்?
40) ஹனுமான்
41) தன் அடையாளமாக அசோகவனத்தில் ஹனுமானிடம் சீதை தந்தது என்ன?
41) சூடாமணி
42) மிதிலையில் ராமர் நாண் ஏற்றிய வில் யார் தந்தது?
42) சிவபிரான் தந்த வில்
43) எந்த திதியில் இராவணனை இராமர் வென்றார்?
43) தசமி
44) அயோத்தியின் முதல் அரசன் யார்?
44) இக்ஷ்வாகு
45) ஜனகர் எந்த நாட்டின் அரசர்?
45) விதேஹநாடு
46) இறுதியில் வைகுந்தம் ஏக ராமர் எந்த நதியில் இறங்கினார்?
46) சரயு
47) அரக்கன் சுபாகுவை வதம் செய்தது யார்?
47) ராமர்
48) மாரீசனைக் கொன்றது யார்?
48) ராமர்
49) கும்பகர்ணனை வதம் செய்தது யார்?
49) ராமர்
50) லவணாசுரன் ராவணனுக்கு என்ன உறவு?
50)சகோதரியின் மகன்
51) மேகநாதனின் மாமா யார்?
51) துந்துபி
52) பரசுராமரின் தந்தை யார்?
52) ஜமதக்னி முனிவர்
53) பரசுராமரின் தாய் யார்?
53) ரேணுகா
54) சுக்ரீவனின் தந்தை பெயர் என்ன?
54) ரிக்ஷராஜன்
55) ஹனுமானின் தந்தை யார்?
55) கேசரி
56) இராவணனின் மனைவி பெயர் என்ன?
56) மண்டோதரி
57) மண்டோதரியைத் தவிர இராவணனுக்கு எத்தனை மனைவிகள்?
57) 1000
58) இராவணனுக்குப் பயந்து காகமாக உருவெடுத்தது யார்?
58) யமன்
59) மஹரிஷி பரசுராமருக்கு பார்கவ என்ற பெயர் ஏன் வந்தது?
59) அவர் பிருகு வம்சத்தில் பிறந்ததால்
60) தனுர் வேதத்தில் எத்தனை வகை உண்டு?
60) 4
61) இக்ஷ்வாகுவிற்கு எத்தனை புதல்வர்கள்?
61) 100
62) ரோமபாதர் எந்த தேசத்தின் அரசர்?
62) அங்க தேசம்
63) புரு எந்த பிரதேசத்தின் அரசன்?
63) காசி
64) அனுமனால் கொல்லப்பட்ட ராவணனின் மகன் பெயர் என்ன?
64) அக்ஷயகுமாரன்
65) பரதன் தன் இளமைப் பருவத்தைக் கழித்தது எங்கு?
65) தாய் மாமன் வீட்டில்
66) ஹனுமான், அங்கதன் சீதையைத் தேடச் சென்ற திசை எந்த திசை?
66) தெற்கு
67) கேகய நாட்டின் தலைநகர் எது?
67) ராஜக்ருஹம்
68) ராமர், சீதை, லக்ஷ்மணன் தங்கியிருந்த பஞ்சவடி எந்த நதிக் கரையில் அமைந்துள்ளது?
68) கோதாவரி நதி
69) கர,தூஷணர் வசித்த இடம் எது?
69) தண்டகாரண்யம்
70) ராமர் ராவணனை எந்த அஸ்திரத்தை ஏவி வதம் செய்தார்?
70) ப்ரஹ்மாஸ்திரம்
71) யாரிடமிருந்து இராவணன் வாளைப் பெற்றான்?
71) சிவபிரானிடமிருந்து
72) இராவணனின் வாளின் பெயர் என்ன?
72) சந்திரஹாஸம்
73) ராமருக்கு தண்டசக்ரா, காலசக்ரா, விஷ்ணுசக்ரா, ஐந்திரசக்ரா ஆகிய ஆயுதங்களைத் தந்தது யார்?
73) விஸ்வாமித்ரர்
74) நாராயணாஸ்திரத்தை ராமருக்குக் கொடுத்தது யார்?
74) விஸ்வாமித்ரர்
75) இந்திரனின் தேர் சாரதி யார்?
75) மாதலி
76) இந்திரஜித்திற்கு அந்தப் பெயர் ஏன் வந்தது?
76) இந்திரனை வென்றதால்
77) சீதைக்கு ஜானகி என்ற பெயர் எப்படி வந்தது?
77) ஜனகரின் மகளானதால்
78) ஜனக மகாராஜனுடைய மந்திரியின் பெயர் என்ன?
78) சதாநந்தர்
79) லெட்சுமணன், பரதன். சத்ருக்னன் ஆகியோரின் மனைவியர் பெயர் என்ன?
79) முறையே ஊர்மிளை, மாண்டவி, ஸ்ருதகீர்த்தி
80) இராம சேது எனப்படும் கடல் பாலம் அமைத்த பெருமை யாரைச் சாரும்?
80) விஸ்வகர்மாவின் புதல்வர்கள் நளன், நீலன் ஆகிய வானர சகோதரர்களை .
81) சீதை எந்த நாட்டு இளவரசி? அந்த நாட்டின் தலை நகரம் எது?
81) விதேஹ நாட்டின் இளவரசி, தலை நகர் மிதிலை
82) இராவணனுடைய தாய் தந்தையர் யார்?
82) புலஸ்திய மகரிஷியின் மகனான விஸ்ரவஸ் என்ற முனிவர், சுமாலியின் மகள் கைகசி என்ற அரக்கி
83) இராவணனுடைய மந்திரிகள் பெயர் என்ன?
83) மகோதரன், மால்யவான்
84)வாலி, சுக்ரீவர்களுடைய தந்தையின் பெயர் என்ன?
84) ரிக்ஷராஜன்
85) இராமாயணத்தில் சத்ருக்னனுக்கு எந்த இடத்தில் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது?
85) மது என்ற அரக்கனின் மகனான லவணாசுரனைக் கொன்று அவனுடைய மதுராபுரியை இராமராஜ்யத்தில் சேர்த்தான் இராமன். பிறகு அதற்கு அரசனாக சத்ருனனை பட்டம் சூட்டினான்.
86) சீதையைக் கண்டு பிடிப்பதற்காக சுக்ரீவனிடம் நட்புகொள்ள வேண்டிய அவசியத்தை இராமனுக்கு சுட்டிக்காட்டியவன் யார்?
86) கபந்தன் என்னும் அரக்கன்
87) வாலி, சுக்ரீவர் மனைவியர் பெயர்கள் என்ன?
87) தாரா, ருமா
88) வாலி, அர்ஜுனன் இருவருக்கும் உள்ள ஒற்றுமை என்ன?
88) இருவரும் தேவேந்திரனின் அருளால் பிறந்தவர்கள்
89) லெட்சுமணனிடம் ஒருதலைக் காதல்கொண்ட ஒரு பெண் சூர்ப்பநகை. மற்றொரு பெண் யார்? எங்கே நடந்தது?
89) அயோமுகி என்னும் அரக்கி, மதங்க முனிவரின் ஆஸ்ரமத்தில்
90) தசரதர் ஏற்பாடு செய்த புத்ர காமேஷ்டி யாகத்தை முன்னின்று நடத்தி வைத்த முனிவர் யார்?
90) ரிஷ்யஸ்ருங்கர்
91) இராம,லெட்சுமண பரத சத்ருக்னர் பிறந்த நட்சத்திரங்கள் எவை?
91) ராமன்—புனர்வசு/ புனர்பூசம், லெட்சுமணன்—ஆயில்யம், பரதன்—பூசம், சத்ருக்னன்- ஆயில்யம்
92) அவர்களுடைய லக்னங்கள் அல்லது ராசி என்ன?
92) ராமன்—கடக லக்னம், லெட்சுமணன்—சிம்ம ராசி , பரதன்—மீன லக்னம், சத்ருக்னன்- சிம்ம ராசி.
93) இராமர் ஜாதகத்தில் எத்தனை கிரகங்கள் உச்சம்?
93) ஐந்து கிரகங்கள்
94) இராமர் வாழ்வில் எண் 2, 7, 14 ஆகியன மறக்க முடியாதவை .ஏன்?
94) இரண்டு வரங்கள் மூலம் காட்டுக்கு அனுப்பப்பட்டான், பரதன் ஆள்வதற்கு அனுமதித்தான், ஏழு மரா மரங்களைத் துளைக்கும் போட்டியில் வெற்றி பெற்றவுடனேயே வானரசேனை உதவி கிட்டியது, பதினான்கு ஆண்டு வனவாசம்
95) வால்மீகியின் கூற்றுப்படி தசரதனுக்கு ஒரு பெண் உண்டு. அவள் பெயர் என்ன?
95) சாந்தி
96) தண்டகாரண்யத்தில் இராமர் சந்தித்த அகத்திய முனிவரின் தம்பி பெயர் என்ன?
96) சுதர்சனன்
97) ஜடாயுவின் சகோதரர் பெயர் என்ன?
97.சம்பாதி
98) அனுமனின் தந்தை யார்?
98.கேசரி
99) இராவணன் எந்த ரிஷியின் வம்சத்தில் வந்தவன்?
99.புலஸ்த்ய ரிஷி
100) ரிஷ்யமுக பர்வதத்தில் வாலி நுழையமுடியாதபடி சாபம் இட்ட முனிவர் யார்?
100.மதங்க முனிவர்
101) கைகேயியின் தந்தை யார்?
101. அஸ்வபதி
102) ரிஷ்யஸ்ருங்கருக்கும் தசரதருக்கும் என்ன உறவு முறை?
102.தசரதரின் மருமகன் ரிஷ்யஸ்ருங்கர்
103) வசிஷ்டரின் மகனிடம் சீதாதேவி எல்லா நகையையும் கொடுத்துவிட்டு கானகம் சென்றாள். யார் அந்த மகன்/ முனிவர்?
103.சுயஜ்னன்
104) இராமர் கொடுத்த பாதுகைகளை பரதன் எங்கே வைத்து பூஜை செய்தான்?
104.நந்திக்ராமம்
105) இராமரிடம் காட்டும்படி அனுமனிடம் சீதை கொடுத்த நகை எது?
105.சூடாமணி
106) இந்திரஜித்தையும், கும்பகர்ணனையும் போரில் யார் கொன்றார்கள்?
106.இந்திரஜித்- லெட்சுமணன், கும்பகர்ணன்- ராமன்
107) வாலியின் மகன் பெயர் என்ன?
107.அங்கதன்
108) இலங்கையை காவல் காத்த அரக்கியின் பெயர் என்ன?
108.லங்கினி
மூலம் : அகத்தியர் ஆலோசனை மைய வாட்ஸ் அப் குரூப்பில் பகிரப்பட்ட தகவல்கள் இங்கு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment