நரியை பரியாக்கிய படலம் 18-08-2021
மதுரையை ஆண்ட வரகுணபாண்டியனிடம் அமைச்சராக இருந்தவர் மாணிக்கவாசகர். மன்னரின் நம்பிக்கைக்கு பாத்திரமான அவரிடம் இராஜ்யத்திற்கு தேவையான அரேபிய குதிரைகளை வாங்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அவரும் அதனை ஏற்று அதற்குத் தேவையான பொற்காசுகளுடன் பயணம் மேற்கொண்டார். செல்லும் வழியில் திருப்பெருந்துறை என்னும் ஊரில் ஓர் சிவத்துறவியைக் கண்டார். மரத்தடியில் அமர்ந்திருந்த அவரை வணங்கிய மாணிக்கவாசகரின் மனதில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட, ராஜாங்க காரியத்தை விடுத்து அவ்வூரில் சிவாலயம் ஒன்றை நிர்மாணிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. அத்துறவியிடம் இதைப்பற்றிக் கேட்கலாம் என்று அவ்விடம் சென்ற மாணிக்கவாசகர் துறவியைக் காணாது வியந்தார் ஆனால் குதிரை வாங்க வைத்திருந்த பொற்காசுகளைக் கொண்டு ஆலயம் கட்டும் பணியைத் துவக்கினார்.
அவரிடம் அளவு கடத்த நம்பிக்கை கொண்ட அரசரும் அவரிடம் எவ்வித கேள்விகளையும் கேட்பதில்லை எனினும் அரசாங்க காரியத்திற்கு வழங்கப்பட்ட நிதியில் மாணிக்கவாசகர் ஆலயம் அமைப்பதை ஒற்றர்கள் மூலம் அறிந்தார். இதை முதலில் நம்பாத அரசர் குதிரைகள் லாயத்திற்கு வந்து சேராததால் குழப்பம் அடைந்தார். மன்னனின் மன நிலையை யூகித்த மாணிக்கவாசகர் கலக்கம் அடைந்தார். அன்றிரவு அவரின் கனவில் தோன்றிய சிவபெருமான் ஆவணி மாதம் மூல நட்சத்திர நாளில் குதிரைகள் அரண்மனை லாயத்தை வந்தடையும் என்று கூறினார்.
அவ்வண்ணமே அரேபிய குதிரைகளுடன் குதிரைக்காப்பான் ஒருவன் அரண்மனையை வந்தடைய மன்னனின் குழப்பமும் சந்தேகமும் நீங்கியது. நாட்கள் நகர்ந்தன. அன்று அமாவாசை இரவு. திடீரென்று குதிரை லாயத்திலிருந்து வெளிவந்த நரிகளின் ஊளை அனைவரின் காதைப் பிளந்தது. நகர மக்களும், காவல் வீரர்களும், அமைச்சர்களும், அரசரும் லாயத்திற்கு விரைந்தனர். அங்கு கண்ட காட்சியால் வாயடைத்து, ஸ்தம்பித்து நின்றனர். அனைத்து குதிரைகளும் நரிகளாக மாறி அங்கிருந்த குதிரைகளைத் தாக்கிவிட்டு ஊளையிட்டுக்கொண்டிருந்தன . பின் தங்கள் கட்டுக்களை அறுத்துக்கொண்டு காட்டில் சென்று மறைந்தன.

இச்சம்பவத்தினால் கடும் கோபமுற்ற அரசர் தன்னை ஏமாற்றிய குற்றத்திற்காக மாணிக்கவாசகரை சிறையிலடைக்க உத்தரவிட்டதோடு வைகை ஆற்றுப் படுகையிலிருக்கும் தகிக்கும் மணலில் புரட்டி எடுக்க ஆணையிட்டார். தண்டனையை நிறைவேற்றும் பொருட்டு மாணிக்கவாசகர் இடையாடையுடன் ஆற்றங்கரைக்கு அழைத்து வரப்பட்டார். சிவபெருமானை மனதில் நினைத்து கண்ணீர் வடித்தபடி நின்றார் மாணிக்க வாசகர். அவரை மணலில் படுக்க வைக்கும் அதே நொடியில், யாரும் எதிர்பாரா வகையில் ஆற்று வெள்ளம் கரை புரண்டு பொங்கியது. செய்வதறியாது அனைவரும் சிதறி ஓடினர். கூச்சலும் குழப்பமுமாக மாறிய அவ்விடத்தை கட்டுப்படுத்தும் பணியில் காவலர்கள் மூழ்க, மாணிக்க வாசகரை அனைவரும் மறந்தனர்.
கரையை பலப்படுத்தும் பணிகள் தொடங்கின. அவ்வூரில் வசித்த வந்தி என்ற மூதாட்டிக்கு பதிலாக மண் சுமந்த இளைஞன் எப்பணியையையும் சரிவர செய்யாததால் அவரை தளபதி தண்டிக்க முயல, அவ்விளைஞனே சிவ பெருமான் என்ற உண்மை விளங்கியது.
"மாணிக்கவாசகருக்கு சிவ துறவியாக வந்து உபதேசம் செய்தவரும், குதிரைப் பாகனாக வந்தவனும் நானே" என்று ஒலித்த அசரீரியைக் கேட்டு அனைவரும் அதிசயித்து நின்றனர். என் பக்தனாகிய மாணிக்கவாசகரைக் காக்கும் பொருட்டே வெள்ளத்தை வரவழைத்தோம் அதன் மூலம் என் பக்தையாகிய வந்திக்கு காட்சி அளித்து இத்திருவிளையாடலை நிகழ்த்தினேன் என்று கூறி அகன்றது அசரீரி.
அவ்விடத்திலேயே வந்திக்கிழவிக்கு முக்தி கிடைத்தது. மாணிக்கவாசகர் அன்று முதல் அரச பதவியைத் துறந்து சிவப்பணிகளில் ஈடுபடலானார் ஆதலால் சிவபுராணமும் நமக்குக் கிடைத்தது. அன்றிலிருந்து சிவ பக்தனாக மாறிய பாண்டிய மன்னன் சைவ மார்கத்தை பரப்பும் பொருட்டு பல்வேறு ஆன்மீகப் பணிகளை ஆற்றினான் என்றும் மாணிக்கவாசகர் ஆரம்பித்த கோயில் கட்டுமானத்தை சிறப்பாக முடித்து வைத்தான் என்றும் வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.
பின் குறிப்பு : மதுரையில் நடந்ததாகக் கூறப்படுகின்ற 64 திருவிளையாடல்களில் நரியை பரியாகிய படலமும் ஒன்று. ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் சொக்கநாதர் அம்மை மற்றும் மாணிக்கவாசகரோடு தன் பக்தர்களுக்கு மதுரை சிம்மக்கல் பகுதியில் அருள் பாலிக்கிறார். மதுரை ஆவணி மூல வீதியில் வருடம் தோறும் இத்திருவிளையாடல்கள் நாடகங்களாக அரங்கேற்றம் செய்யப்படுகின்றன.
சொன்னவர் : துளசி

மூலம் : திருவிளையாடல் புராணம்
Comments
Post a Comment