குரு பூர்ணிமா

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு பாரதத்தின் சமய பாரம்பரியத்தில் ஒரு முக்கிய, தனித்துவமிக்க இடம் பெற்றவராகத் திகழ்ந்தார். வேத காலத்திலிருந்து பக்தி தத்துவம் பல சிறந்த  மகான்கள் அறிந்து பின்பற்றிய ஒன்று. ஆயினும் ஸ்ரீ சைதன்யரே பக்தி மார்கத்திற்கு ஒரு முக்கிய இடத்தை அளித்தவர். அதற்கு தனிப்பட்ட மகத்துவத்தை  அளித்து ஆன்மிக தத்துவத்தை முழுமையாகவும்  ஆக்கியவரும் அவரே. அவர் இறைவனிடத்தான தூய அன்பை பக்தி மார்க்கத்தின் மற்ற அம்சங்களிலிருந்து பிரித்து போதித்தார். எல்லாவற்றையும் இறைவனாக ஏற்கும் ஒரு கருணைமிகு பாதையாக பக்தி மார்க்கத்தை மாற்றியவரும் அவரே!!! அப்பேர்பட்ட சைதன்யருக்கு பிறகு அவரைப்  போல அவருக்கு இணையான மகானாக விளங்கும் ஒருவருக்காக உலகம் பல காலம் காத்திருக்க வேண்டி இருந்தது. அதன் பிறகு தோன்றியவரே மாமனித உருவில் பக்தியை உலகிற்கு வாழ்ந்து காட்டிய ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். இது ஒன்றே இருவருக்கும் இடையேயான பொதுவான அம்சம் என்று கூறிவிட முடியாது.

ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுத மொழிகளில் மகாபிரபுவின் அருமையையும் லீலைகளைப் பற்றியும் மிக விரிவாக அறிய முடிகிறது. சைதன்யரைப் பற்றி அவர் கூறாத அத்தியாயங்கள் மிகச் சிலவே. தன் வாழ்நாள் முழுவதும் சைதன்யரின் உபதேசங்கங்களை பின்பற்றும் பக்தர்களுக்கு ராமகிருஷ்ணர் மிக மரியாதை செலுத்தி வந்தார்.

ஸ்ரீ சைதன்யரும் (நிமாய்) - ஸ்ரீ ராமகிருஷ்ணரும் (கதாதரன்)

இவ்விரு மகான்களின் வாழ்க்கையை அறிந்த எவரும் அவர்களுக்கிடையே இருந்த ஒற்றுமைகளை  காணத்தவறியதில்லை. ராமகிருஷ்ணரின் சீடர்களான மகேந்திரநாத் குப்தர், பல்ராம் போஸ், ராமச்சந்திர தத்தர் போன்றவர்கள் இந்த ஒற்றுமையின் அம்சங்களை அடையாளம் கண்டர்வர்கள். இருவரும் பழமையான அந்தணக்  குடும்பத்தில் பிறந்தவர்கள் அந்த அடையாளத்தை வாழ்நாள் முழுதும் கட்டிக் காத்தவர்கள். ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பிறப்பு அவரின் தந்தைக்கு கயா விஷ்ணு கோவிலில் காட்சி மூலம் அறிவிக்கப்பட்டது. ஸ்ரீ சைதன்யர் ஆன்மீக நிலைக்குத் திரும்பும் நிகழ்வும் அவ்வாறே. சைதன்யர் தனது தந்தைக்கு கயாவில் ஈமச்சடங்குகள் செய்யும் போது ஓர் துறவி எதிர்பாரா விதமாக விரைந்து வந்து  அவர் கைகளைப் பற்றிய போது ஏற்பட்டது.

இளைமைக்காலத்தில் இருவருமே பிள்ளை விளையாட்டுகளில் ஈடுபட்டவர்கள் ஆனால் நிமாய் புத்தி கூர்மை மிக்க மாணவராக இருந்தார் ஆனால் கதாதரனோ பள்ளிப் படிப்பில் ஆர்வமற்றவராகவே வளர்ந்தார். இவ்விருவரும் ஏழை கிராமத்து மக்களிடம் (சாதி பேதமின்றி) நெருங்கிப்  பழகும் இயல்பு கொண்டவர்களாக இருந்தனர். சங்கு விற்கும் ஸ்ரீ சீனிவாசன் என்பவரால் இறைவனாக வழிபடப்பட்டார் அதேபோல் நிமாய் ஸ்ரீதரன் என்னும் ஏழை காய்கறி விற்பவனால் போற்றப்பட்டார். இருவரும் மெலிந்த உடல்வாகு கொண்டவர்களாக இருப்பினும் தமது இயல்பான கம்பீரத்தால் துணிவும் ஈர்ப்பும் உள்ளவர்களாவும் முகஸ்துதியை விரும்பாதவர்களாகவும்  செல்வந்தர்களை அனாவசியமாக புகழாதவர்களாகவும் விளங்கினர் உதாரணமாக சைதன்யர் காசி நவத்வீப் முஸ்லீம் மாஜிஸ்திரேடின் தவறான நடவடிக்கைகளால் மிகவும் கோபமுற்றார். ராமகிருஷ்ணர் பதவியும் பட்டமும் உள்ள ஒரு மேல் குடிகாரரை அரசர் என்று அழைக்க
மறுத்தார்.

சைதன்யர் ஒரு முறை அத்வைத கோசாமியை ஏதோ காரணத்திற்காக பலமாக அறைந்துவிட்டார். ராமகிருஷ்ணரும் தக்ஷிணேஷ்வர் கோவிலில் இருந்த ராணி ராஜாமணி  இறைவனைப் பற்றி சிந்திக்காமல் வேறு ஏதோ நினைப்பில் இருந்ததால் கன்னத்தில் அறைந்தார். இருவரும் வாழ்க்கையில் தவறிய பெண்களையும் சமூக விரோதிகளாக  இருந்த ஆண்களையும் நல்வழிப்படுத்தினர். இருவருமே சிறந்த ஆளுமை ஈர்ப்பு கொண்டவர்கள். இவர்கள் சென்ற இடங்களில் எல்லாம் இவர்களை தரிசிக்க மக்கள் பெருமளவு கூடினர். இருவரும் தங்கள் தெய்வீகத் தன்மையை அறிந்திருந்தும் சாமானிய மக்களிடம் கலந்து பழகி அவர்களுக்கு உபதேசங்களை வழங்கினார்.

மேற்கண்ட ஒற்றுமைகளின் மூலம் இவ்விரு மஹாபுருஷர்களும் ஒருவரே என்று நிரூபணம் ஆகிறது. நாம சங்கீர்த்தனத்தை பரப்பியதில் இருவருமே முன்னோடிகள். சைதன்யர் அதை துவங்கி வைத்தார். ராமகிருஷ்ணர் அதற்கு புத்துயிர் அளித்தார். இக்கலியுகத்திற்கு நாம வழிபாடே உகந்தது என்று வலியுறுத்தினார். அவர்களைப் பொறுத்தவரை நாமமும் அதற்கு தலைவனான இறைவனும் ஒன்றே. சரணாகதி தத்துவம் மற்றும் சங்கீர்தனம் இரண்டுமே அவர்களின் மிக முக்கிய  உபதேசங்கள். இருவருமே சக மனிதர்களுக்கு சேவை செய்வதையே இறை சேவையாக வலிறுயுறுத்தினர். ராமகிருஷ்ணரின் வாழ்வோ மகாசைதன்யரின் வாழ்விற்கு ஓர் முழுமையான  நிரூபணம். சைதன்யரின் வாழ்வு ஸ்ரீராமகிருஷ்ணரின் அவதாரத்திற்கு ஒரு பலமிக்க அடித்தளமாக அமைந்துள்ளது.

ஸ்ரீ சைதன்யர் ஜெயந்தி - மார்ச் 21, பங்குனி பௌர்ணமி

ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஜெயந்தி - மார்ச் 8, 2019.

மூலம் : ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம், மார்ச் 2019.

சொன்னவர் : துளசி.






Comments

Popular posts from this blog

அவதாரங்களின் முடிவு - நரசிம்ம அவதாரம்

கண்ணன் வந்தான் எங்கள் கண்ணன் வந்தான்

அயோத்திக்கும் திருவரங்கத்திற்கும் உள்ள தொடர்பு ..