Posts

The Story Of Krishna

  In the earthly realm, the number of demons who were kings in name only had increased so much that the Earth Goddess, unable to bear the burden, went to Brahma to plead her case. Taking her with him, Brahma, surrounded by the gods and accompanied by Shiva, went to see Vishnu, the resident of the milky ocean. A divine, disembodied voice resounded there. Hearing it, Brahma told the gods, "Lord Srinivasa is already aware of the Earth Goddess's sorrow. Therefore, he is going to incarnate as a human in the Yadu dynasty on Earth. So, the gods and celestial nymphs must also take birth on Earth and remain there for as long as the Lord roams the world to reduce its burden." The head of the Yadu clan, King Surasena, ruled that land from Mathura. His son, Vasudeva, set out on a chariot with his wife, Devaki. Kamsa, the son of Ugrasena and Devaki's older brother who loved her deeply, held the reins as the charioteer. Suddenly, a disembodied voice cried out, "O foolish one...

கண்ணன் வந்தான் எங்கள் கண்ணன் வந்தான்

Image
பூலோகத்தில் பெயரளவிலேயே அரசர்களாக விளங்கும்  அசுரர்களின் எண்ணிக்கை அதிகமானதால்  பாரம் தாள முடியாமல் பிரம்மனிடம் சென்று முறையிட்டாள் பூமாதேவி. அவளை அழைத்துக்கொண்டு தேவர்கள் புடைசூழ முக்கண்ணன் உடன் வர பாற்கடல் வாசனை காணச் சென்றார் பிரஜாபதி. அங்கோர் அசரீரி ஒலித்தது. அதைக்கேட்ட நான்முகன் தேவர்களை நோக்கி "பூமாதேவியின் மனக்கவலையை  ஸ்ரீனிவாசன் ஏற்கனவே அறிந்திருக்கிறார் ஆகவே அவர் பூலோகத்தில் யது குலத்தில் மானிடராக அவதரிக்க இருக்கிறார் ஆகவே தேவர்களும் தேவ ஸ்த்ரீகளும் பூலோகத்தில் பிறவியை அடைந்து, எவ்வளவு காலம் பகவான் பூபாரத்தை குறைக்க பூவுலகில் சஞ்சரிப்பாரோ அத்துனை காலம் நீங்களும் பூமியிலிருக்க வேண்டும் என்று கட்டளையிட்டார். யது குல தலைவனாகிய  சூரசேனர் மதுராவிலிருந்து அத்தேசத்தை ஆண்டு வந்தார். அவரின் புதல்வர் வசுதேவர் தாம் மணமுடித்த தேவகியுடன் தேரிலேறி புறப்பட்டான். உக்கிரசேனனின் புத்திரனும் தேவகியிடத்தில் அதீத அன்பு கொண்ட தமையனுமாகிய கம்சன் தேரோட்டியாக கடிவாளத்தை பிடிக்க "அறிவுகெட்டவனே எவளை வாகனத்தில் கொண்டு செல்கிறாயோ அவளுடைய எட்டாவது கர்ப்பம் உன்னைக் கொல்லப்போகிறது" என்று அ...

ஏரி காத்த ராமரும் பக்த ராமதாஸும்

Image
பக்த ராமதாஸ்  பத்ராச்சல ராமதாஸ் என்னும் பக்த ராமதாஸ் "கோபண்ணா" என்ற பெயரில்  இன்றைய தெலுங்கானா மாவட்டத்தின்  கம்மம்  என்னும் நகரில் 1600-களில் வாழ்ந்தவர். ராம பக்தனான இவர் ராகவ ராமனை போற்றி பல்வேறு பாடல்களை எழுதி கர்நாடக இசையில்  கீர்த்தனைகளாகப் பாடியுள்ளார். இளமை முதலே ராம பக்தனான ராம்தாஸ் இந்தியாவை முகலாய மன்னர்கள் ஆண்ட காலத்தில் அவர்களிடம் வரிவசூல் செய்யும் அதிகாரியாகப் பணியாற்றி உள்ளார். அச்சமயத்தில் பத்ராச்சல ராமர் கோவில் கட்டுமானப் பணிக்காக நிதி பற்றாக்குறை ஏற்பட தான் வசூல் செய்த வரிப்பணத்தை சற்றும் யோசிக்காமல் தந்து விட்டார். சில மாதங்களுக்குப் பின் இதை கண்டறிந்த அதிகாரிகள் ராமதாஸை சுல்தானின் முன் கொண்டு நிறுத்த அரசு நிதியை தவறாக கையாண்ட காரணத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார். 12 வருடங்கள் சிறையில் இருந்த காலத்தில் ராமனை எண்ணி பல்வேறு பாடல்களை பாடியதாக நம்பப்படுகிறது. பகவான் ராமரும் லக்ஷ்மணரும் அரசாங்கத்திற்கு தர வேண்டிய நிதியைத் தந்து சுல்தானிடமிருந்து அவரை விடுதலை செய்ததாக ஒரு கதையும் ஒளரங்கசீப்பின் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததால் அவர் விடுவிக்கப்பட்டார் என்...

Sri Ragavendhra - Sriman Natanagopala Nayaki Swamigal keerthanai

Rama Sri Raghu Nandhana Hari Ragavendra - 2 Nichu Raadhi Dhisumu Thorae Dhyanu Dhae Ragavendra Rama Sri Raghu Nandhana Hari Ragavendra  Nichu Raadhi Dhisumu Thorae Dhyanu Dhae Ragavendra Dasun Sengo Mogo Desthae Ghobbagu Ragavendra - 2 Thaiyai nhee jiyaeth me kogo hovu yaet Ragavendra thu Thaiyai nhee jiyaeth me kogo hovu yaet Ragavendra Maai Bhaab Guru dhev aski thus mogo Ragavendra - 2 Mi Pajae varam mogo therae Sri hari Ragavendra Maai Bhaab Guru dhev aski thus mogo Ragavendra  Mi Pajae varam mogo therae Sri hari Ragavendra Natanam Karae thorae charanu paje mogo Ragavendra - 2 Narayana Govindha gopala Ragavendra Hari Narayana Govindha gopala Ragavendra Ragavendra Ragavendra Ragavendra

அழகான பழனி மலை ஆண்டவா

அழகான பழனி மலை ஆண்டவா  - 2 உன்னை அனுதினமும் பாடவந்தேன் வேலவா  அழகான பழனி மலை ஆண்டவா   உன்னை அனுதினமும் பாடவந்தேன் வேலவா  வள்ளி மயில் நாதனே வா வடிவேலனே - 2 வர வேண்டும் மயில் மீது முருகய்யனே - 2 முருகா - 4 அழகான பழனி மலை ஆண்டவா   உன்னை அனுதினமும் பாடவந்தேன் வேலவா - 2 வெள்ளை திருநீறும் வெற்றி வடிவேலும் உள்ளத்தில் தோன்றுமே - 2 வெள்ளி மயில் ஏறி வேலன் வருவதை நெஞ்சம் காணுமே  வெள்ளை திருநீறும் வெற்றி வடிவேலும் உள்ளத்தில் தோன்றுமே  வெள்ளி மயில் ஏறி வேலன் வருவதை நெஞ்சம் காணுமே  எனை ஆளும் ஆண்டவனே எழில் வேலவா - 2 எளியேனும் உனை பாட அருள்வாய் அய்யா - 2 முருகா - 4 அழகான பழனி மலை ஆண்டவா   உன்னை அனுதினமும் பாடவந்தேன் வேலவா  அழகான பழனி மலை ஆண்டவா   உன்னை அனுதினமும் பாடவந்தேன் வேலவா  நல்லதெல்லாம் என்னை நாடிப் பெருகிட நல்லருள் செய்வாய் - 2 தீயதெல்லாம் உடன் தீய்ந்து கருகிட திருவருள் புரிவாய்  நல்லதெல்லாம் என்னை நாடிப் பெருகிட நல்லருள் செய்வாய்  தீயதெல்லாம் உடன் தீய்ந்து கருகிட திருவருள் புரிவாய்  உனையன்றி வேறில்லை...

அயோத்திக்கும் திருவரங்கத்திற்கும் உள்ள தொடர்பு ..

Image
கடந்த ஜனவரி மாதம் உத்திர பிரதேச மாநிலத்தில் ராமரின் ஜன்ம பூமியான  அயோத்தியில் பாரதப் பிரமர் மோடியால் ப்ராண பிரதிஷ்டை செய்யப்பட்டு  பால ராமர் கோவில்  திறக்கப்பட்டது நாம் அனைவரும் அறிந்ததே.!! தமிழகத்தின் திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் கோவிலில் பாற்கடல் வண்ணனாக வீற்றிருக்கும் ரங்கநாதர் அயோத்தியில் இருந்து வந்தவர் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?! தசரதனின் மைந்தன் ராகவ ராமன் இலங்கை வேந்தன் ராவணனை யுத்தத்தில் வென்று சீதையுடன் அயோத்திற்கு வருகிறான். அங்கு அவரின் பட்டாபிஷேகம் வெகு விமரிசையாக நிகழ்கிறது. அவ்விழாவிற்கு பல்வேறு அரசர்கள் வருகை புரிந்தனர் அவர்களுள் புதிதாக இலங்கை மன்னனாக முடி சூடியுள்ள விபீஷணனும் இருந்தான். அயோத்திக்கு அரசனான ராமர் அனைவருக்கும் அவரவர் விரும்பிய பரிசுகளை வழங்க தன்னை விட்டு பிரிய வேண்டியதை நினைத்து கலங்கிய விபீஷணனுக்கு விஷ்ணு பாற்கடலில் சஞ்சரித்த நிலையில் இருக்கும் சிலையை  இலங்கைக்கு கொண்டு செல்ல வழங்கி இனி இவர் உன்னை வழி நடத்துவார் என்று கூறினார். விபீஷணனும் அக மகிழ்ந்து  அச்சிலையை சுமந்த வண்ணம் ஆகாய மார்கமாக இலங்கைக்குச்  சென்றார...

அவதாரங்களின் முடிவு - நரசிம்ம அவதாரம்

Image
"நானே கடவுள் என்னை அன்றி யார் பெயரையும் உச்சரிக்க கூட அனுமதி இல்லை" என்று மூன்று உலகங்களையும் வென்று விட்ட மமதையில் இருந்த இரண்யகசிபுவிற்கு மகனாகப் பிறந்த பிரஹலாதன் ஹரியைத் தவிர வேறொரு நாமத்தை தனது  நா கூறாது என்று உறுதியுடன் இருந்து தனது உயிரையும் துறக்க தயாராக இருந்தான்.  "எங்கே உந்தன் நாராயணன்" என்று தந்தை வினவ " எங்கும் வியாபித்திருக்கும் பரந்தாமன் இந்த தூணிலும் இருப்பான்..எந்த துரும்பிலும் இருப்பான்" என்று கூறிய மைந்தன் முன் இரண்யகசிபு தூணை சுக்கு நூறாக உடைக்க அதிலிருந்து தோன்றிய நரசிம்மன் அவ்வரக்கனின் நெஞ்சைக் கிழித்து அவனின் கொடுமைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார் என்பது நாம் அனைவரும் அறிந்த கதை. கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்த நரசிம்மரின் ஆவேசம் அங்கு சாந்தமடையவில்லை. அரண்மனையை விட்டு வெளியேறிய சிங்கமுகன் அருகிலிருந்த காட்டில் புகுந்து துவம்சம் செய்தார். அங்கு வசித்துக் கொண்டிருந்த பழங்குடி மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டு பயத்தில் மறைந்து வாழத் துவங்கினர். காலங்கள் கடந்தது. தனது அவதாரத்தின் பலன் நிறைவடைந்த பிறகும் விஷ்ணு வைகுண்டம் திரும்பவ...