அனுமார் ஜெயந்தி - ஜனவரி 11, 2024

அன்று அயோத்தி ராஜ சபையில் தனது குருக்களான வசிஷ்டர், விஷ்வாமித்ரர் உடனுறைய தனது சகோதரர்கள், அமைச்சர்கள் புடை சூழ ராஜ பரிபாலனம் செய்து கொண்டிருந்தார் அரசர் ராம சந்திரமூர்த்தி. அப்போது அவரைக்கான வந்த காசி நாட்டரசர் அனைவருக்கும் உரித்தான மரியாதைகளையும் வணக்கங்களையும் தனித்தனியாக தெரிவித்தவன் விஷ்வாமித்ரரை மட்டும் பொதுவாக வணங்கிவிட்டு தனது இருக்கைக்கு சென்று அமர்ந்து விட்டான். ராஜசபையும் தொடர்ந்தது. அச்சபையில் வீற்றிருந்த தேவ ரிஷி நாரதர் அமைதியாக இருந்த விஷ்வாமித்ரரிடம் காசி நாட்டரசன் செய்த காரியத்தை மிகப் பெரிய தவறு என்று சுட்டிக் காட்டி கலகத்தை துவக்கி வைத்தார். காசி நாட்டரசனின் செய்கையை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்த விஷ்வாமித்ரர் நாரதரின் விளக்கத்தைக் கேட்டு பெரும் கோபம் அடைந்தார். அரசரும் தனது மாணவனும் ஆகிய ராகவ ராமனிடம் "எனக்கு குருதட்சணையாக அந்த மரியாதை கெட்டவனின் தலையை கொண்டு வா" என்று ஆணை இட்டார். தனக்கு ஏற்பட்ட ஆபத்தை உணர்ந்த காசி அரசன் அனுமனின் தாயாகிய அஞ்சனையிடம் அடைக்கலம் அடைந்தான். அனுமனை அழைத்த தாய் நடந்த விடயங்களை கூறாமல் காசி அரசன் ஆபத்தில் உள்ளான் என்றும் அ...