Posts

Showing posts from October, 2022

புரட்டாசி மாத சிறப்புக் கட்டுரைகள் #5 - சுவாமி யோக நரசிங்கப் பெருமாள்

தெலுங்கானா மாநிலத்தில் மட்டப்பள்ளி என்ற கிராமத்தில் கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள குகைக்கோயிலில் வீற்றிருக்கிறார் யோக நரசிம்மர். மிகவும் பழமை வாய்ந்த க்ஷேத்திரங்களில் ஒன்றாகக் கருதப்படும் இத்தலத்திற்கு ஓர் அறிய பெருமை உண்டு. சுவாமிக்கு பால், தயிர், தேன், மஞ்சள், குங்குமம் என்று அபிஷேகம் செய்வது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே ஆனால் இதோடு பானகம் என்று சொல்லக்கூடிய பானத்தாலும் இங்குள்ள நரசிம்மர் அபிஷேகம் செய்யப்படுகிறார். முற்காலத்தில் அபிஷேகம் செய்யப்படக்கூடிய பொருட்கள் நரசிம்மரின் அகன்ற வாயில் ஊற்றப்படுமாம். அதில் சரி பாதியை உள் வாங்கிக் கொண்ட பெருமான் மீதம் சரிபாதியை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கி விடுவாராம். அபிஷேக பொருட்கள் பெரிய அண்டா போன்ற பாத்திரத்தில் ஊற்றப்பட்டாலும் சிறிய கோப்பையில் ஊற்றப்பட்டாலும் சரி பாதி மீளுமாம். அதோடு அங்கு நைவேத்தியத்திற்கு வைக்கப் படும் பொருட்களின் மேல் ஒரு ஈ கூட அமராதாம் ஆனால் அவையே பிரசாதமாக மாறும் போது ஈக்கள் மொய்ப்பதை காணலாமாம். இன்றளவும் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள அஹோபில (Ahobila Mutt) மடத்தில் மேற்கூறிய சடங்குகள் நடந்தேறி வருகின்றன என்று ...

புரட்டாசி மாத சிறப்புக் கட்டுரை # 4 - மஹாலக்ஷ்மி ஸ்தோத்ரம்

முன்னொரு காலத்தில் வித்யாதரன் என்பவன் வாழ்ந்து வந்தான். சம்சாரியான அவன் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடுடையவன். பக்திமான். அவன் ஓர் ஆஸ்ரமத்தையும் நிர்மாணித்து நடத்தி வந்தான். வறுமை அவனை வாட்டியது. பல்வேறு பொறுப்புக்களால் லௌதீக வாழ்க்கையை விட்டு விலக முடியாமல் தவித்த வித்யாதரன் மனமொன்றி மஹாலக்ஷ்மியை பிரார்த்தித்து அவளை துதித்து ஸ்தோத்திரம் ஒன்றைப் பாடினான். அவனுடைய பக்தியில் மகிழ்ந்த மஹாலக்ஷ்மி அவனுக்கு காட்சி அளித்தாள். தன்னுடைய வறுமையை போக்க செல்வம் வேண்டி நின்ற அவனிடம் "உன்னுடைய கர்ம வினையின் படி வறுமை உனக்கு விதிக்கப்பட்டுள்ளது அதை மாற்ற இயலாது" என்று கூறிய மஹாலக்ஷ்மி "உன்னுடைய அடுத்த பிறவியில் வேண்டும் செல்வம் அனைத்தும் பெற்று மகிழ்ந்து வாழ்வாய்" என்று வரமளித்து மறைந்தாள். செய்வதறியாது திகைத்த வித்யாதரனுக்கு ஒரு யோசனை தோன்றியது. அக்கணமே குடும்ப வாழ்க்கையைத் துறந்து துறவறம் பூண்டான். எவனொருவன் அனைத்து பந்தங்களையும் விடுத்து துறவி ஆகிறானோ அவன் இப்பிறப்பிலேயே மறு பிறப்பு அடைந்தவன் ஆகிறான். தன்னை நோக்கி தூய பக்தியுடன் தொழும் வித்யாதரனுக்கு காட்சி அளித்த மஹாலக்ஷ்மி தாயார...

புரட்டாசி மாத சிறப்புக் கட்டுரை # 3 - ராதே கிருஷ்ணா

கண்ணனின் மனதில் நீங்காமல் குடி கொண்டிருப்பவர் ராதை. கோகுலத்தில் பிறந்த ராதை கண்ணன் அவதரிப்பதற்கு சில ஆண்டுகளுக்கு (8 வருடம் என்று சொல்லப்படுகிறது) முன்னே யாதவ அரசர் விருஷபானுவால் கண்டெடுக்கப்படுகிறார். ஆனால் அவர் கண்களைத் திறக்கவே இல்லை. சிறுமியாக வளர்ந்த ராதை ஓர் நாள் நந்த கோபரால் கோகுலத்தில் விடப்பட்ட கிருஷ்ணனை காண அழைத்துச் செல்லப் படுகிறாள். கோகுலத்தில் உள்ள அனைவரும் கண்ணனை பார்க்க அலை மோதுகிறார்கள். குழந்தையின் அருகில் அழைத்துச் செல்லப்பட்ட ராதை கண்ணனை குனிந்து உச்சி முகர்கிறாள் அப்போது அவனின் பூங்கரம் அவளின் கண்களின் மேல் பட முதல் முதலாக கண் திறந்த ராதை மழலைக் கண்ணனைப் பார்க்கிறார் தனது மனதைப் பறி கொடுக்கிறாள். அன்று முதல் அவனுக்காகவே வாழ்கிறாள். இன்றும் அஸ்ஸாம் மாநிலத்தில் இப்பழக்கம் வழக்கத்தில் உள்ளது. ராதையாக அலங்கரிக்கப்பட்ட சிறுமியர் பச்சிளம் குழந்தையிடம்  அழைத்துச் செல்லப்பட்டு அதன் மழலைக் கரங்களை  சிறுமியரின் கண்களின் மேல் வைக்கிறார்கள். கண்ணனின் மேல் ராதைக்கு இருந்த அன்பு அப்பழுக்கற்றது, பரிசுத்தமானது. எந்த விதமான எதிர்பார்ப்பும் அற்றது. அவளைப் போல் நாமும் அவன் ம...