மாரியம்மா.. மாரியம்மா
தை மாதம் என்றாலே சக்தி வழிபாடும் சக்தியிலிருந்து தோன்றிய சண்முகன் வழிபாடும் கோவில்களில் கலை கட்டும். பாத யாத்திரை, பால் குடம் என்று பக்தர்கள் கூட்டம் சரவணனின் கோவில்களில் அலை மோதும் என்றாலும் தை வெள்ளிக்கிழமைகளில் "தாயே..நீயே கதி" என்று தாய்மார்கள் கூடுவது அம்மன் சன்னதிகளில் தான் குறிப்பாக மதுரை வண்டியூர் மாரியம்மன் கோவிலில் தை மாதம், தை பூச நாளில் (ஜனவரி 28, 2021) நடைபெறும் தெப்பத்திருவிழா மிகப் பிரசித்தி பெற்ற கொண்டாட்டங்களில் ஒன்றாகும். மாரியம்மா பெயர் காரணம் என்ன? அறிந்து கொள்வோமா? சப்த ரிஷிகளில் ஒருவரான ஜமதக்னி முனிவருக்கு ரேணுகா என்ற மனைவியும் ஐந்து புத்திரர்களும் இருந்தனர் அவர்களில் கடைசிப் புதல்வன்தான் வீரத்திற்கும் கோபத்திற்கும் பெயர் போன மஹாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமர். அனு தினமும் ஆற்றங்கரைக்குச் செல்லும் ரேணுகாதேவி அங்குள்ள ஈர களிமண்ணில் குடம் வடித்து அதில் தண்ணீர் எடுத்துக் கொண்டு ஆசிரமத்திற்கு திரும்புவது வழக்கம். பதி விரதத்தால் அவள் பெற்ற சக்தியே இதை சாத்தியமாகியது. ஓர் நாள் அவ்வாறு குடம் செய்து கொண்டிருக்கையில் வானத்...