கெளரவ பூர்ணிமா - மார்ச் 9 , 2020
மாசி மாத பவுர்ணமிக்கு ஹோலிப் பண்டிகை, கஜேந்திர மோக்ஷம் என்று பல சிறப்புக்கள் உண்டு அவற்றில் ஒன்று ஸ்ரீ சைதன்ய மகாபிரபு அவதரித்த தினம் ஆகும். பொன் போன்று மின்னும் மேனி அழகால் கௌரங்கா என்றும் அழைக்கப்பட்டார் ஆதலால் இத்தினம் கௌரவ பூர்ணிமா என்றும் அழைக்கப்படுகிறது. உலகெங்கும் அவரது பிறந்த தினம் குறிப்பாக ISKON அமைப்புகளில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பாவத்தை நீக்க எளிய வழி என்று எதைக் கூறுகிறார் என்பதை அவரது வாழ்வில் நிகழ்ந்த ஓர் சம்பவத்தின் மூலம் பின் வருமாறு காணலாம். ஸ்ரீ சைதன்யரின் வட இந்திய யாத்திரையின் போது அவர் மிக்க மகிழ்ச்சியுடன் காசியை அடைந்தார். மணிகர்னிகா கட்டி-ல் (Manikarnika Ghat) அவர் கங்கையில் ஸ்நானம் செய்தார்.கிழக்கு வங்காள சுற்றுப்பிராயணத்தின் போது தன்னிடம் உபதேசம் பெற்று, தனது யோசனையின் படி காசியில் வசிக்கும் தவள மித்ரரை ஸ்ரீ சைதன்யர் சந்தித்தார். அவருடைய துணையுடன் சைதன்யர் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கும் பிந்து மாதவர் சன்னதிக்கும் சென்றார். பின்னர் அவருடைய வீட்டிலேயே தங்கினார். பிற்காலத்தில் ரகுநாத பட்...