ரத ஸப்தமி - பிப்ரவரி 1, 2020
தை மாத அமாவாசையயை தொடர்ந்து வரும் ஏழாம் நாள் அஷ்டமி திதியை "ரத ஸப்தமி"- யாக அனுசரிக்கிறோம். இந்நாளில் சூரிய தேவன், ஏழு புரவிகள் பூட்டப்பட்டு ஒற்றை சக்கரத்தால் இயக்கப்படும் தனது ரதத்தை அருணன் செலுத்த தெற்கிலிருந்து வட திசை நோக்கி பயணிக்கிறார். இதனால் ஏற்படும் பருவநிலை மாற்றத்தால் இன்றிலிருந்து பூமியில் பகல் பொழுது நீண்டு காணப்படுகிறது. இதை உத்ராயணம் என்று அழைக்கிறோம். இதே ரத ஸப்தமி நாளில் தான் பிரம்ம முகூர்த்தத்தில் அம்புப் படுக்கையில் இருந்த பீஷ்மப் பிதாமகர்- தருமனும் பகவான் கிருஷ்ணரும் உடனிருக்க விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தையும் சிவ ஸஹஸ்ரநாமத்தையும் சொல்லிய வண்ணம் தன் ஆத்மாவை தனது உடலிலிருந்து விடுவித்துக்கொண்டார். ஆகவே இந்நாள் "பீஷ்மாஷ்டமி" என்றும் அழைக்கப்படுகிறது. கேட்டதைக் கொடுக்கும் காமதேனுவின் மகளாகிய நந்தினி யாகத்திற்குத் தேவையான நெய்யையும் பாலையும் வழங்கும் பொருட்டு வசிஷ்டரின் தவக்குடிலில் வாழ்ந்து வந்தது. அஷ்ட வசுக்களில் எட்டாவது வசுவாகிய பிரபாசாவின் மனைவி தனக்கு நந்தினி பசு வேண்டும் என்று அதைக் கொண்டு வர தனது கணவனை அன...