விஜய தசமி
ஒவ்வொரு வருடமும் விஜய தசமியன்று பெரும்பாலான கோவில்களில் உற்சவர்- கையில் வில் அம்புடன் வீதி உலா வருவது, காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் நிகழ்வு . அவ்வாறு வரும் உற்சவர் கோவிலுக்கு அருகில் காணப்படும் வன்னி மரத்தடியில் சிறிது நேரம் அமர்ந்து விட்டு உலவுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். விஜயதசமி என்றாலே அதர்மத்திற்கெதிரான தர்மத்தின் வெற்றி, நீதியை நிலைநாட்ட அவதாரங்கள் அரக்கர்களை எதிர்த்து நடத்தும் போர் என்றெல்லாம் அனைவரும் அறிந்திருந்தாலும் உற்சவர் அமர ஏன் வன்னி மரத்தடியை தெரிவு செய்கிறார்?! அதற்கான பின்புலக் கதை இதோ ... கௌரவர்களிடம் சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் 13 வருடம் காடேக வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதில் கடைசி வருடம் தங்கள் சுய அடையாளத்தை துறந்து அங்காத வாசம் செய்யவேண்டும் . அவர்கள் இருக்கும் இடமோ அவர்களைப் பற்றியோ ஒற்றர்கள் மூலம் அறிய முடியுமானால் அவர்கள் அடுத்த 13 வருடமும் நாடு புகமுடியாது என்று உறுதி செய்யப்பட்டது. கௌரவர்களோ அங்காத வாசத்தில் பாண்வர்களை கண்டிபிடித்தே ஆக வேண்டும் என்று கடும் சதி செய்தனர். அவர்கள் ஒளிந்திர...