குருவாயூரப்பா...குருவாயூரப்பா !!!
பரந்தாமர் விஷ்ணு பூலோகத்தில் கிருஷ்ணராக அவதரித்தார் . கோகுலத்தில் வளர்ந்து வந்த அவரை தரிசிக்கவும் பூஜிக்கவும் அனுதினம் தேவர்கள் தேவலோகத்தில் இருந்து வருவது வாடிக்கையாக இருந்தது. அவ்வாறு ஓர் நாள் குருவும் வாயுவும் வருகை தந்திருந்தனர். செல்லக் கண்ணனின் குறும்புக கண்களையும் தேனொழுகும் புன்னகையையும் கண்ட அவர்கள் தங்கள் முன் குழந்தை வடிவில் இருப்பவர் பரம் பொருள் என்பதையும் மறந்து அக்குழந்தையை கையில் அள்ளிக் கொஞ்சினர். பல்வேறு விளையாட்டுகள் செய்து அவனழகில் தங்களையே மறந்தனர் . குருவோ கிருஷ்ணனை தோளில் தூக்கிக் கொள்ள வாயுவோ தன் பலத்தால் அவர்களை பறக்கச் செய்து கண்ணாமூச்சி காட்டினான் . இருவரும் இணைந்து கிருஷ்ணருக்கு அமுது ஊட்டினர் . அவ்வாறு பகவான் வாயுவோடும் குருவோடும் க்ஷண நேரத்தில் பறந்து சென்று அமர்ந்த இடம் தான் குருவாயூர். பல ஆண்டுகளுக்கு முன் குருவாயூரில் பூசகராக இருந்த பிராமணர் ஒருவர் வெண் குஷ்ட நோயால் அவதியுற்று வந்தார். பல்வேறு சிகிச்சைகள் செய்தும் பலனில்லாமல் அக்கிராமத்தில் வாழ்ந்த மருத்துவரிடம் அழைத்து வந்தனர். அவரை சோதித்த மருத்துவரோ மிகுந்த தயக்கத்திற...