சனி
நவகிரகங்களைப் பற்றி அதிகம் தெரியாதவர்களும் அறிந்து கொள்ளும் ஆர்வம் அற்றவர்களும் கூட இவனை அறிந்திருப்பர் காரணம் தயவு தாட்சண்யம் இன்றி அவரவர் கர்ம வினைக்கேற்ப இவன் அளிக்கும் பலன். சினம் மிக்கவனாக இவன் பிடியிலிருந்து யாரும் தப்பவே முடியாது. கண்டுபிடித்து விட்டீர்கள் தானே?! ஆம் உங்கள் கணிப்பு சரியே?! நவகிரகங்களில் ராகுவிற்கும் கேதுவிற்கு நடுவே அமர்ந்திருக்கும் சனி பகவானே அவன்!!! அஷ்டம சனி, ஏழரை நாட்டு சனி என்று இவன் ஏன் நம்மை பாடாய் படுத்துகிறான்?! மேலே படியுங்கள். சூரியனுக்கும் அவன் மனைவி சந்தியாவின் நிழல் உருவான சாயா தேவிக்கும் பிறந்தவன் சனி. தாய்ப்பாசம் மிக்கவன். நிழலுக்கு பிறந்தவனாதலால் கருமை நிறம் கொண்டான் ஆனால் சூரியனின் ஞானம் கிடைக்கப்பெற்றவன் ஆனான். கானகம் சென்ற சந்தியா தன் இருப்பிடம் திரும்ப, நிழல் வடிவான சாயா மறைந்தாள். சந்தியாவையே தன் தாய் என நினைத்த சனிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சந்தியாவின் புதல்வனான யமன் தன் தாயை சனியுடன் பங்கிட்டுக் கொள்ள விரும்பவில்லை. சந்தியாவும் அவனைத் தன் புதல்வனாக ஏற்கவில்லை. தாய்ப்பாசத்திற்கு ஏங்கித் தவித்த சனி தன் சுற்றத்தார் அனைவ...