சூரியன்
கஷ்யப மஹரிஷிக்கும் அதிதிக்கும் பிறந்த சூரியன் ஒன்பது கிரகங்களில் முதன்மையானவன். மையத்தில் அமர்ந்திருக்கும் அவனையே அனைத்து கிரகங்களும் சுற்றி வருகின்றன. இதையே அறிவியலும் வலியுறுத்துகிறது. சூரிய திசையில் ஜனித்தவர்களும் அவன் பார்வை தம் கிரகத்தின் மேல் படும் வாய்ப்பு பெற்றவர்களும் குன்றா ஒளி வெள்ளத்தால் சூழப்பட்டு பொலிவுடன் காணப்படுவர் . பஞ்ச பூதத்தின் அம்சமான சூரியனை நாம் வாழும் பூமியிலிருந்தே உணரவும் பார்க்கவும் முடியும் என்பதும், இந்திய கலாசாரத்தில் மட்டுமல்லாது சீன, கிரேக்க நாடுகளிலும் சூரியனை கடவுளாக சித்தரிக்கின்றனர் என்பதும் கூடுதல் சிறப்பு. ஏழு குதிரைகளும் ஒற்றைச் சக்கரமும் கொண்ட அவன் தேரை அருணன் செலுத்த சற்றும் ஓய்வின்றி இப்பிரபஞ்ச பெருவெளியை சுற்றி வருகின்றான் சூரியன். அவ்வேழு குதிரைகளே நாம் காணும் வானவில். சூரியனுக்கு சந்தியாவில் பிறந்த குழந்தைகள் மூவர். மனு, யமன், யமி. மனு மனிதரில் படைக்கும் திறனை அளிக்க, யமன் கடைசி கட்டத்தில் அழைத்துக் கொண்டு செல்ல வருகிறான். யமுனை நதியாக பொங்கி ஓடுபவள் யமி. சூரியனுடனான தம் வாழ்கை சந்தியாவிற்கு சலிப்ப...