பூரண உள்ளொளி கண்டடைதல்
மகளிர் தினத்தன்று நம்மில் ஒருவரான திருமதி ராதா பரசுராம் அவர்கள் எழுதி பிரசுரித்த "பூரண உள்ளொளி கண்டடைதல்" என்னும் குறும்புத்தகத்தை (20 பக்கங்கள் மட்டும்) வாசிக்கும் வாய்ப்பு அமைந்தது. முன்னுரையில் மனதை ஒருமைப்படுத்தும் முயற்சியில் தனக்கு ஏற்பட்ட மேம்பட்ட அனுபவத்தை பகிர துவங்கும் ஆசிரியர் கீத் மில்லர், மைக்கேல் ஏ சிங்கர் போன்ற ஆசிரியர்களின் படைப்புகளை கோடிட்டு காட்டி நம் ஆர்வத்தை தூண்டுகிறார். பின்வரும் பக்கங்களில் "தான் எவ்வாறு தியான முயற்சியை தொடங்கினேன், அதில் ஏற்பட்ட சவால்கள், பின் எவ்விதம் வேறு வேறு முறைகளை பின்பற்றி வெற்றி அடைந்தேன்" என்பதை விளக்கமாக சொல்லிக் கொண்டே வரும் ஆசிரியர் நடுநடுவே அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பல்வேறு சவால்களையும் எழுதியிருக்கிறார் முக்கியமாக " அனுதினம் சாதாரணமாக நிகழும் பல்வேறு செயல்கள் எவ்வாறு குழந்தைகளின் மனதை பாதிக்கிறது" என்று கூறியிருக்கும் உதாரணங்கள் மிக அருமை! தியான முறைகளைப் பற்றி எவ்வித அறிமுகமும் இல்லாத எனக்கு அவர் கூறும் வாழ்வியல் தொடர்பான தகவல்கள் சுவாரசியமாகவும் சுய அனுபவங்களோடு ஒப்பீடு செய்து கொள்ளவும...