Posts

Showing posts from December, 2025

ராமனின் சௌந்தர்யமும் தண்டாபூபிகா நியாயமும்

Image
உபன்யாசகர் ஒருவர் வால்மீகியும் கம்பரும் ராமனின் அழகை எவ்வாறெல்லாம் வர்ணித்து எழுதியிருக்கிறார்கள் என்று உபன்யாசம் செய்து கொண்டிருந்தார். அவனின் திருவழகைக் கண்டு எவ்வாறு ஆண்களெல்லாம் சொக்கி விழுந்தனர் என்று கூறிய அவரிடம் "என்ன சுவாமி ஆண்கள் மட்டும் தான் அவன் அழகில் மயங்கினரா?! பெண்கள் மயங்கவில்லையா?!" என்று ஒருவர் கேட்க அதற்கு உபாசகர் "அது தண்டாபூபிகா நியாயேன சித்தமல்லவா" என்று கூறிவிட்டார். கேள்வி கேட்டவருக்கு எதுவும் புரியவில்லை. நமக்கும் தானே?! ஏகாதேசியன்று விரதம் இருக்கும் அனைவர் வீட்டிலும் சமைக்கப்படும் ஒரே பதார்த்தம் "உப்புமா". ஏன் அவ்வாறு என்பதற்கு ஒரு கதை. ருக்மாங்கதன் என்னும் அரசன் ஏகாதேசி திதியன்று தவறாமல் விரதம் இருந்து வைகுண்ட ப்ராப்தி அடைந்தான்.  விரதம் இருக்கும் அனைவருக்கும் அவ்வரத்தை அளிக்குமாறு திருமாலிடம் வேண்டிக்கொண்டான் இதனால் பூலோகத்தில் பாப தேவதைகளுக்கே இடமில்லாமல் போய் விட்டது. பிரம்மாவிடம் சென்று முறையிட்ட தேவதைகளிடம் "முழு அரிசியில் சென்று ஒளிந்து கொள்ளுங்கள்" ஏகதேசியன்று முழு அரிசியை உட்கொள்ளும் அனைவரையும் பிடித்துக் கொள் ...