ஏரி காத்த ராமரும் பக்த ராமதாஸும்

பக்த ராமதாஸ் பத்ராச்சல ராமதாஸ் என்னும் பக்த ராமதாஸ் "கோபண்ணா" என்ற பெயரில் இன்றைய தெலுங்கானா மாவட்டத்தின் கம்மம் என்னும் நகரில் 1600-களில் வாழ்ந்தவர். ராம பக்தனான இவர் ராகவ ராமனை போற்றி பல்வேறு பாடல்களை எழுதி கர்நாடக இசையில் கீர்த்தனைகளாகப் பாடியுள்ளார். இளமை முதலே ராம பக்தனான ராம்தாஸ் இந்தியாவை முகலாய மன்னர்கள் ஆண்ட காலத்தில் அவர்களிடம் வரிவசூல் செய்யும் அதிகாரியாகப் பணியாற்றி உள்ளார். அச்சமயத்தில் பத்ராச்சல ராமர் கோவில் கட்டுமானப் பணிக்காக நிதி பற்றாக்குறை ஏற்பட தான் வசூல் செய்த வரிப்பணத்தை சற்றும் யோசிக்காமல் தந்து விட்டார். சில மாதங்களுக்குப் பின் இதை கண்டறிந்த அதிகாரிகள் ராமதாஸை சுல்தானின் முன் கொண்டு நிறுத்த அரசு நிதியை தவறாக கையாண்ட காரணத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார். 12 வருடங்கள் சிறையில் இருந்த காலத்தில் ராமனை எண்ணி பல்வேறு பாடல்களை பாடியதாக நம்பப்படுகிறது. பகவான் ராமரும் லக்ஷ்மணரும் அரசாங்கத்திற்கு தர வேண்டிய நிதியைத் தந்து சுல்தானிடமிருந்து அவரை விடுதலை செய்ததாக ஒரு கதையும் ஒளரங்கசீப்பின் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததால் அவர் விடுவிக்கப்பட்டார் என்...