அயோத்திக்கும் திருவரங்கத்திற்கும் உள்ள தொடர்பு ..

கடந்த ஜனவரி மாதம் உத்திர பிரதேச மாநிலத்தில் ராமரின் ஜன்ம பூமியான அயோத்தியில் பாரதப் பிரமர் மோடியால் ப்ராண பிரதிஷ்டை செய்யப்பட்டு பால ராமர் கோவில் திறக்கப்பட்டது நாம் அனைவரும் அறிந்ததே.!! தமிழகத்தின் திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் கோவிலில் பாற்கடல் வண்ணனாக வீற்றிருக்கும் ரங்கநாதர் அயோத்தியில் இருந்து வந்தவர் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?! தசரதனின் மைந்தன் ராகவ ராமன் இலங்கை வேந்தன் ராவணனை யுத்தத்தில் வென்று சீதையுடன் அயோத்திற்கு வருகிறான். அங்கு அவரின் பட்டாபிஷேகம் வெகு விமரிசையாக நிகழ்கிறது. அவ்விழாவிற்கு பல்வேறு அரசர்கள் வருகை புரிந்தனர் அவர்களுள் புதிதாக இலங்கை மன்னனாக முடி சூடியுள்ள விபீஷணனும் இருந்தான். அயோத்திக்கு அரசனான ராமர் அனைவருக்கும் அவரவர் விரும்பிய பரிசுகளை வழங்க தன்னை விட்டு பிரிய வேண்டியதை நினைத்து கலங்கிய விபீஷணனுக்கு விஷ்ணு பாற்கடலில் சஞ்சரித்த நிலையில் இருக்கும் சிலையை இலங்கைக்கு கொண்டு செல்ல வழங்கி இனி இவர் உன்னை வழி நடத்துவார் என்று கூறினார். விபீஷணனும் அக மகிழ்ந்து அச்சிலையை சுமந்த வண்ணம் ஆகாய மார்கமாக இலங்கைக்குச் சென்றார...