அவதாரங்களின் முடிவு - வராஹ அவதாரம்

உலகில் அதர்மம் தன் எல்லயைக் கடக்கும் சமயங்களில் எல்லாம் பகவான் விஷ்ணு அவதாரம் செய்து இப்பூவுலகை காப்பதும் அரக்கர்களை அழிப்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அவ்வாறு எடுக்கும் அவதாரங்கள் மனித அவதாரமாக இருக்கும் பட்சத்தில் தன்னுடைய கர்ம வினைகளுக்கு விதிக்கப்பட்ட வாழ்வை முழுவதுமாக வாழ்ந்து விட்டே பரந்தாமன் வைகுண்டம் திரும்புகிறார் என்பது ராம, கிருஷ்ண அவதாரங்களின் மூலம் நாம் அறிகிறோம் ஆனால் மிருக முகமும் மனித உடலும் இணைத்த அவதாரங்களான மச்ச, கூர்ம, வராஹ, நரசிம்ம அவதாரங்களில் என்ன நடந்தது?! அறிந்து கொள்வோமா!!! வராஹமாக அவதரித்து இரண்யாக்ஷனை வதம் செய்து பூமாதேவியை மீட்ட விஷ்ணு காட்டிற்குள் நுழைந்து அங்கு ஓர் பெண் பன்றியுடன் இணைந்து பல்வேறு பன்றிக் குட்டிகளை ஈன்று வாழ்ந்து கொண்டிருந்தார். ஜீவாத்மாவான இறைவனுடன் ஒன்றற கலந்த பெண் பன்றி சிறிது காலத்தில் தனது உயிரை விட்டது. தனது அவதார நோக்கத்தை நிறைவேற்றிய பின்பும் ஹரி வைகுண்டம் திரும்பாமை கண்டு வருத்தமுற்ற தேவர்கள் அவரை அழைத்து வருவதற்காக பூலோகம் சென்றனர். அங்கு தனது குட்டிகளுடன் சேற்றிலும் புழுதியிலும் பிரண்டு கொண்டு மலத்தை ருசித்து உண்ட...