கேதாரிநாத் ஆலயம்
இந்தியாவின் உத்தர்காண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது கேதாரிநாத் ஆலயம். இங்கு எவ்வாறு செல்வது? எங்கு தங்குவது? சீதோஷண நிலை எவ்வாறு இருக்கும் என்றெல்லாம் இன்றைய "Travel Vloggers" சமூக வலைத்தளங்களில் மிக விரிவாக பதிவு செய்து வருவதால் அதைப் பற்றி பெரிதாக சொல்வதற்கு தேவை இல்லை. கடும் பனிப்பொழிவு காரணமாக வருடத்தில் ஆறு (ஏப்ரல் - நவம்பர்) மாதங்கள் மட்டுமே திறந்திருக்கும் இச்சிவாலயத்தின் உற்சவர் பனிக்காலத்தில் மலை அடிவாரத்தில் Ukhimath என்ற இடத்தில் இருக்கும் ஆலயத்தில் வைத்து பூஜிக்கப்படுகிறார். கேதாரிநாத் ஆலயத்தில் சிவ பெருமான் "திமில்" வடிவ லிங்கமாக காட்சி அளிக்கிறார். பரவலாக அதற்கு கூறப்படும் கதை என்னவெனில் குருஷேத்ர போர் முடிந்ததும் பாண்டவர்கள் தங்களின் தோஷங்களையும் பாவங்களையும் களையும் பொருட்டு காசி விஸ்வநாதரை தரிசிக்க சென்றதாகவும் இவர்களுக்கு காட்சி அளிக்க விரும்பாத சிவபெருமான் அவ்வாலயத்தை விட்டு சென்று விட பாண்டவர்கள் பல இடங்களில் அவரைத் தேடி அலைந்ததாகவும் அப்போது பீமன் இமயமலைச்சாரலில் காட்டெருது வடிவில் (YAK) சிவபெருமான் இருப்பதை கண்டறிந்து அதை பலமாக பற்றிக் கொண்டத...