பச வண்ண - கோலாட்டத் திருவிழா (Basavanna Festival)

ஓர் சமயம் சாபத்தால் அவதியுற்ற நந்தி சாப விமோசனம் வேண்டி விஷ்ணு பெருமாளை நோக்கி தவம் செய்ததாகவும் அதன் பலனாக சாபம் நீங்கி கைலாயம் திரும்பியதாகவும் கூறப்படுகிறது. இந்நிகழ்வை நினைவுறுத்தும் விதமாக ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாத அமாவாசையை அடுத்த பத்து நாட்களுக்கு "பச வண்ண - கோலாட்டத் திருவிழா " கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் வெகு விமரிசையாக நடத்தப்படும் இவ்விழா மதுரையில் சௌராஷ்டிர மக்களால் முன்னெடுத்து செல்லப் படுகிறது. தெற்கு கிருஷ்ணன் கோயில் தெருவில் அமைந்த சௌராஷ்டிர சமூக மக்களின் கோவிலான "ஸ்ரீ பிரசன்ன வெங்கடேஸ்வர பெருமாள் " தலத்தில் வருடம் தவறாமல் இந்நிகழ்வு "பொஸ்கண்ணா தின்னாள்" என்ற பெயரில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நடை சாற்றிய மதிய வேளையில் கர்பகிரகத்தை தாண்டி வெளிவட்டத்தில் இருக்கும் மண்டபத்திற்கு அருகே அமைந்துள்ள கண்ணாடி அறையில் தங்கத்தாலான நந்தி வைக்கப்படுகிறது பின் களிமண்ணால் ஆன நந்தியை மக்கள் கொண்டு வர அதையும் அதே அறையில் வைக்கிறார்கள். இளம் பெண்கள் அதைச் சுற்றி கோலாட்டம் ஆட இத்திருவிழா தொடங்கி வைக்கப்படுகிறது. அடுத்த பத்து நாட்களுக்கு நடக...