விநாயகர் சதுர்த்தி சிறப்புக் கதை/ஆடிப்பெருக்கு
ரிக் வேதத்தில் பல்வேறு சுலோகங்களை நமக்கு அளித்தவர்கள் அகத்திய மாமுனியும் அவரது மனைவியும். சப்த ரிஷிகளில் ஒருவரான புலஸ்தியரின் மகனான அகத்திய முனிவர் தான் காவேரியை கரை புரண்டு ஓடச் செய்தவர் என்பது நம்மில் பலரும் அறிந்ததே எனினும் அது எவ்வாறு சாத்தியமானது என்பதற்கு பல வகையான கதைகளும் விளக்கங்களும் கூறப்படுகின்றன. அவற்றில் ஒரு கதையை இப்பொது தெரிந்து கொள்வோமா? அகத்திய முனி வடக்கே வாசம் செய்து கொண்டிருந்த வேளையில் தனது மகளை திருமணம் செய்து கொடுப்பதாக வாக்களித்திருந்த அரசரை சென்று சந்தித்தார். தவ முனிக்கு தனது மகளை தாரை வார்த்துக் கொடுக்க மன்னன் தயங்க அவரின் மகளோ மனமுவந்து அகத்திய முனியை மணந்து கொள்கிறாள். அவளின் பெயர் தான் லோபாமுத்ரா. சிறிது காலத்திற்குப் பிறகு தெற்கு நோக்கிய தனது பயணத்தை தொடங்கினார் அகத்தியர். கால் நடையாகவே பயணம் செய்யும் வழக்கம் கொண்ட முனிவர் தனது மனைவியால் எவ்வாறு இத்தொலைவைக் கடக்க முடியும் என்றெண்ணி ஓர் உபாயத்தை கண்டறிந்தார் அதன் படி லோபாமுத்ரையை நீராக மாற்றி தனது கமண்டலத்தில் வைத்துக் கொண்டார். இவ்வாறு தனது யாத்திரையை தொடங்கிய அவர் தென்னகத்தை அடையும் தொலை...