Posts

Showing posts from August, 2021

நரியை பரியாக்கிய படலம் 18-08-2021

மதுரையை ஆண்ட வரகுணபாண்டியனிடம் அமைச்சராக இருந்தவர் மாணிக்கவாசகர். மன்னரின் நம்பிக்கைக்கு பாத்திரமான அவரிடம்  இராஜ்யத்திற்கு தேவையான அரேபிய  குதிரைகளை வாங்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அவரும் அதனை ஏற்று அதற்குத் தேவையான பொற்காசுகளுடன் பயணம் மேற்கொண்டார். செல்லும் வழியில் திருப்பெருந்துறை என்னும் ஊரில் ஓர் சிவத்துறவியைக்  கண்டார். மரத்தடியில் அமர்ந்திருந்த அவரை வணங்கிய மாணிக்கவாசகரின் மனதில்  ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட,  ராஜாங்க காரியத்தை விடுத்து அவ்வூரில் சிவாலயம் ஒன்றை நிர்மாணிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. அத்துறவியிடம் இதைப்பற்றிக் கேட்கலாம் என்று அவ்விடம் சென்ற மாணிக்கவாசகர் துறவியைக் காணாது வியந்தார் ஆனால் குதிரை வாங்க வைத்திருந்த பொற்காசுகளைக் கொண்டு ஆலயம் கட்டும் பணியைத் துவக்கினார். அவரிடம் அளவு கடத்த நம்பிக்கை கொண்ட அரசரும் அவரிடம் எவ்வித கேள்விகளையும் கேட்பதில்லை எனினும் அரசாங்க காரியத்திற்கு வழங்கப்பட்ட நிதியில் மாணிக்கவாசகர் ஆலயம் அமைப்பதை ஒற்றர்கள் மூலம் அறிந்தார். இதை முதலில் நம்பாத அரசர் குதிரைகள்  லாயத்திற்கு வந்து சேராததால்...