வைகுண்ட ஏகாதேசி
மார்கழி மாத அமாசையை அடுத்த பதினோறாம் நாள் அமரபட்ச திதியை வைகுண்ட ஏகாதேசியாக அனுசரிக்கிறாம். இந்நாளில் உபவாசம் இருந்து பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள பரந்தாமனை பிரம்ம முகூர்த்தத்தில் வேண்டிக்கொள்வோமாயானால் இவ்வுலக பற்றை துறக்க நினைப்பவர்களுக்கு முக்தியும் மற்றவர்களுக்கு கர்ம வினை எதுவாக இருப்பினும் சொர்கத்தை அடையும் வரம் கிட்டுவது நிச்சயம் என்றும் நம்பப்படுகிறது. அதற்கான பின்புலக் கதைகள் சில உண்டு...அவற்றில் முதலாவது : ராகவ ராமனின் முன்னோடிகளில் ஒருவரான அம்பரீசன் அயோத்தியை ஆண்டு கொண்டிருந்த காலம் அது. விஷ்ணுவின் தீவிர பக்தனான அம்பரீசன் ஒவ்வொரு மாதமும் ஏகாதேசி திதி அன்று விரதம் இருந்து விஷ்ணு வழிபாடு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரின் பக்தியில் மகிழ்ந்த ஸ்ரீ ஹரி அவருக்கு காட்சி அளித்து வேண்டிய வரங்களை கேட்குமாறு கூற...அம்பரீசனோ ," இறைவா தாங்களை காணக் கிடைத்த இந்நிமிடத்தையே எனக்கு கிடைத்த பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன் ...இதை விட வேறு வரம் எனக்கு எதற்கு?! " என்று கூறிவிட்டான். அவனுடைய பதிலில் மனமகிழ்ந்த ஆழிவண்ணன் தன்னுடைய ஸ்ரீ சக்கரத்தை அம்பரீசனிட...