ஓணம்
அரக்ககுலக் குடி வழிவந்த மகாபலி சக்ரவர்த்தி மூவுலகங்களையும் வென்று தருக்கி அமர்ந்திருந்த சமயம் அது. அவனின் குல குருவான சுக்ராச்சாரியார் அவனுடைய வெற்றியை நிலை நாட்டும் பொருட்டு மாபெரும் யாகம் ஒன்றை நடத்துமாறு பணித்தார். அவருடைய ஆணைப்படி நடந்த யாகம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. யாகத்தின் முடிவில் அதில் கலந்துகொண்ட அந்தணர்களுக்கும் பிராமணர்களுக்கும் அவர்களுக்கு வேண்டிய பரிசில்களை தானமாக வழங்குவது முறைமையாக இருந்தது அவ்வாறு மகாபலி தானம் செய்து கொண்டிருந்த சமயம் வாமன உருவம் கொண்டிருந்த ஓர் பிராமணச் சிறுவன் அவரை நோக்கி வந்தான். அரசர் வழங்கிய பரிசில்களை வாங்க மறுத்த சிறுவனிடம் "உனக்கு வேண்டியவற்றைக் கேளும்...மூவுலகங்களுக்கும் அரசன் நான்...என்னால் எதையும் அளிக்க இயலும்" என்று ஆணவமிக்க குரலில் கூறினான் மகாபலி. "அரசே எனக்கு மூன்று அடி நிலமே போதுமானது...அதை அளியுங்கள் மகிழ்வேன்" என்று கூறினான் சிறுவன். "அவ்வளவுதானா!!! இதோ" என்று தானமளிக்க குடுவையிலுருந்த கங்கை நீரைக் கையிலெடுத்தான். "சற்று பொறுங்கள் அரசே" என்ற சுக்ராசாரியாரின் குரல் அவனைத் தடுத்தது....