சித்திரைத் திருவிழா
கோவில் நகரமான மதுரையில் சித்திரை மாதத்தில் நடைபெறும் மீனாக்ஷி திருக்கல்யாணமும் அதைத் தொடர்ந்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவமும் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்வாகும். பலரின் மனதில் பசுமை மாறா நினைவுகளை விட்டுச் செல்லும் இவ்விழாவைக் கண்டு ரசிக்க தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து குறிப்பாக தென் மாவட்டங்களில் உள்ள பக்தர்கள் கூட்டம் கூட்டமாக மதுரையில் கூடுகிறார்கள். இவ்வைபவத்தின் பின்புலம் நாம் அறிந்ததே எனினும் பரவலாக பேசப்படாத சில நிகழ்வுகளை இங்கு காண்போம். மீனாட்சி திருக்கல்யாணம் முன்னொரு காலத்தில் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனான மலையத்வஜ பாண்டியன் புத்திர பேறு அற்று வருந்தினான். சிவ பக்தனான மன்னன் அரசி காஞ்சன மாலா உடன் இணைந்து குழந்தை வேண்டி யாகம் செய்தான். மன்னனோ நாடாள சந்ததி வேண்டுமே என்ற கவலையில் ஆண்மகனை வேண்ட அரசியோ தன்னையும் அறியாமல் மனதில் பெண் குழந்தை வேண்டி பிரார்த்தனை செய்தாள். யாக முடிவில் அக்னியில் இருந்து ஓர் அழகான பெண் குழந்தை நடந்து வந்து அரசியின் மடியில் அமர்ந்தாள். சற்று ஏமாற்றமடைந்த மன்னனும் அரசியும்...