ஆத்ம லிங்கம்
சப்த ரிஷிகளில் ஒருவரான புலஸ்தியரின் புதல்வர் விஸ்ரவமுனிக்கும் அசுர வழித்தோன்றலான கைகேசிக்கும் பிறந்த முதல் மைந்தன் இராவணன். அவனைத் தொடர்ந்து கும்பகர்ணன், சூர்ப்பனகை என உடன்பிறந்தார் அனைவரிடமும் அசுர குணங்களே ஓங்கியிருக்க , தந்தையை ஒத்த தமையன் வேண்டும் என்ற அன்னையின் ஆசைக்கிணங்க பிறந்ததவன் விபீஷணன். இலங்கையை ஆண்ட இராவணன் தீவிர சிவ பக்தன் என்பது நாம் அனைவரும் அறிந்த கூற்று. அனுதினமும் காலையும் மாலையும் கடற்கரை மணலில் சிவலிங்கம் வடித்து சந்தியாவந்தனம் செய்வது அவன் வழக்கம். அவன் செய்யும் சிவலிங்கம் சமுத்திர ராஜனால் கடல் அலைகளைக் கொண்டு கலைக்கப்படுவதைக் கண்ட அவனின் தாயார் கைகேசி "நீ கைலாயநாதனை நோக்கி தவம் இருந்து சக்தி வாய்ந்த ஆத்ம லிங்கத்தை கொண்டு வந்தாயானால் அதை இலங்கையில் பிரதிஷ்டை செய்து வளம் பெறலாம் " என்று கூற இராவணனும் அண்ணாமலையானை நோக்கிக் கடும் தவம் செய்யலானான். அவனின் தவம் கனிந்து பார்வதி துணையோடு தம்பதி சமேதராக காட்சி அளித்தார் சிவபெருமான். கண்களைத் திறந்து அவர்களை நோக்கிய மறுகணம் தான் எதற்காக தவம் புரிந்தோம் என்பதையே ...