சூரசம்ஹாரம்
சப்த ரிஷிகளில் ஒருவரான காஷ்யபருக்கு திதி, அதிதி என்று இரு மனைவிகள் அவர்களுள் திதிக்கும் காஷ்யபருக்கும் பிறந்தவன் தான் சூரபத்மன். அவனுக்கு சிங்கமஹாசுரன், கஜமஹாசுரன் என்று இரு சகோதரர்களும் அசமுகி என்ற சகோதரியும் உண்டு. சூரபத்மன் சமுத்திரத்திற்கு நடுவே ஓர் நகரை உருவாக்கி ஆட்சி புரிந்தான். சிங்கமஹாசுரனோ சமுத்திரத்தைச் சுற்றி தன் கிராமங்களை அமைத்துக்கொள்ள... கஜமுகாசுரன் தன்னை கிரௌஞ்ச்சிய மலையாக உருமாற்றம் செய்து கொண்டு ஆட்சி புரிந்தான்.அசுர குணமுடைய இவர்கள் சடைமுடியான் சிவ பெருமானை நோக்கி கடும் தவம் செய்தனர். இவர்களுக்கு காவலாக அவர்களின் சகோதரி அசமுகி நின்றாள். இவர்களின் தவத்தில் மகிழ்ந்த அண்ணாமலையான் அவர்களுக்கு காட்சியளிக்க "உன்னைத் தவிர எங்களை அழிக்கும் சக்தி எவருக்கும் இருக்கக் கூடாது...எங்கள் மரணம் உன் அருளாலே நிகழ வேண்டும்" என்று வரம் பெற்றனர். காலங்கள் உருண்டோடியது. சூரபத்மன் அக்னி தேவனின் புத்திரி பத்மகோமளையை மணந்து பானுகோபன் என்னும் மகனைப் பெற்றான். கடும் தவங்களின் மூலம் பல்வேறு சக்திகளை பெற்ற பானுகோபன் இற...