Posts

Showing posts from September, 2019

பிட்டுக்கு மண் சுமந்த படலம் 19-08-2021

முன்னொரு காலத்தில் மதுரையை பாண்டியன் ஆண்ட சமயத்தில் எதிர்பாரா விதமாக வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. நிலைமையை சீர்செய்யவும் கரை புரண்ட வெள்ளம் நகருக்குள் புகாமல் இருக்கவும், கரையை பலப்படுத்தும்   பணிகள் துவங்க இருப்பதாக  அரசாங்க ஆணை வெளியானது. பறை அறிவித்தபடி வந்த காவலன் " அனைவர் வீட்டிலிருந்து குறைந்தபட்சம் ஒருவராவது கரை அமைக்கும் பணியில் ஈடுபட வேண்டும்...இல்லையேல் கடுமையாகத் தண்டிக்கப்படுவீர்...இதற்கு யாரும் விதிவிலக்கல்ல  " என்று வீதி வீதியாகச் சொல்லிக் கொண்டே சென்றான். அந்நகரில் பிட்டு விற்று பிழைப்பு நடத்தும் வந்தி என்ற கிழவி சாமிக்கு  பிட்டை நெய்வேத்தியமாக வைத்தவாறு "சொக்கநாதா...இது என்ன சோதனை...என் வீட்டில் என்னைத் தவிர வேறு  யாரும் இல்லை...என்னால் இக்காரியங்களை செய்ய இயலாதே...என்ன செய்வது, நீதான் என்னைக் காப்பாற்ற வேண்டும்" என்று அழுது புலம்பினாள். அடுத்த நொடி  வாசலில் யாரோ அவளை அழைக்கும் குரல் கேட்டது. வாட்ட சாட்டமான இளைஞன் ஒருவன் "பாட்டி...நான் வெளிஊர்ல இருந்து வர்றேன்..இன்னைக்கு ராத்திரி மட்டும் உன் திண்ணையில படுத்துக்க...